மோகங்களில்… 3
துருவின் பீச் ஹவுஸூக்கு கார் செல்லும் முன் அங்கே மட்டையாகிக் கிடந்தவர்களை எல்லாம் அவரவர் வீட்டுக்கு கொண்டு போக சொல்லிவிட்டான். கூடவே அவ்விடத்தையும் சுத்தம் செய்ய சொல்லி இவளுக்கென்று தனியாக ஒரு அறையும் ஏற்பாடு செய்து விட்டான்.
முதல் முறை இம்மாதிரியான பீச் ஹவுசை உள்ளே வந்து பார்க்கிறாள் அனு. வெளியில் செல்லும்போது பார்த்திருக்கிறாள்.. அநேக படங்களில் பார்த்தது தவிர..
"இப்படி கடலுக்கு பக்கத்துல.. சொகுசு பங்களா.. ம்ம் ஆளு பெரிய ஆள் தான் போல… அப்புறம் ஏன் அந்த லேடி? சரி.. சரி.. அது அவங்க பெர்சனல்.. நமக்கு எதுக்கு?"
என்று தனக்குள் பேசியப்படி அந்த வீட்டின் அழகையும் பணத்தின் செழுமையையும் அலங்காரங்களையும் அவள் பார்த்துக் கொண்டே வர… அவளுக்கென்று கீழே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையில் உள்ளே அவளது லக்கேஜ்களை வைத்த சுகன் "மேடம் உங்க திங்ஸ் எல்லாம் அந்த ரூம்ல இருக்கு. அதுதான் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரூம்" என்று காட்டினான்.
"தேங்க்ஸ் அண்ணா.." என்றதும் ஒரு மெல்லிய சிரிப்பு கூட இல்லை அவனிடம்.
"ஏன் இவர் உதட்ட ஃபெவிகுயிக் போட்டு ஓட்டுன மாதிரியே வச்சிருக்காரு.. அவர் உதடு அவர் வச்சிருக்காரு.. நமக்கு என்ன? இங்க பாரு அனு.. இந்த வீட்டில சாப்பிட்டோமா தூங்குனோமானு நம்ம வேலைய பாத்துட்டு இருக்கணும் புரியுதா?" என்று தனக்குத்தானே அறிவுரை கூறிக் கொண்டாள்.
அந்த அறையை திறந்து பார்த்தவளுக்கு அதன் அழகும் சொகுசும் அவளை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது! கொஞ்சமே கொஞ்சம் மிரட்டியது!
இதே வயிற்றில் குழந்தைகள் இல்லை என்றால் ஓடி சென்று அந்த அரையடி அமுங்கும் வெண்நுரை போல் இருக்கும் மெத்தையில் குதித்து கும்மாளமிட்டு ஒரு வழி ஆக்கி இருப்பாள். ஆனால் இப்போது.. ம்ஹூம்… குழந்தைகளுக்காக அமைதியாக சென்று அதில் அமர்ந்தாள்.
"படத்துல காட்டுவது போல உட்கார்ந்தவுடன் அரை அடி உள்ள அமுங்குதே இந்த மெத்தை.." என்று குமரியாக இருந்தாலும் குழந்தையின் கும்மாளம் அவளிடம்!
"இவ்வளோ வசதியருக்கு.. ஆனா ஏன் அந்த அம்மா குழந்தையை விட்டுட்டு போயிடுச்சி? இவ்ளோ சொத்து இருக்கு.. சுகம் இருக்கு.. குழந்தை பெத்துக்க விருப்பம் இருந்தும், என்னை இதுல இழுத்துவிட்டுட்டு.. இப்போ ஏன் விட்டுட்டு போகணும்?" என்று மனதில் அப்சரா பற்றி நினைவுகள் ஓட..
அதனை எல்லாம் நினையாதே மனமே என்று துடைத்தவள் "இப்போதைக்கு தங்குறத்துக்கு வீடு இருக்கு. குழந்தை பிறந்த பின் இவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு அமௌன்ட் வாங்கிட்டு.. நாம ஓன் பிசினஸ் பண்ணி நம்பர் ஒன்னா வரணும் தொழிலதிபி (தொழிலதிபனுக்கு பெண் பாலாமாம்) வரணும்!"
"ஆமா.. நாம என்ன பிசினஸ் பண்ணலாம்? ஒன்னும் யோசிக்கவில்லையே! படிச்சது கூட பி.காம் அதுவும் இரண்டாவது வருசமே ஓடி வந்தாச்சு.. பின்னே ஒரு டிகிரி கூட இல்லாமல் என்ன வேலை செய்ய முடியும்?" என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருக்க சடாரென்று கதவை திறந்து கொண்டு வந்தான் துருவ்.
கதவு திறந்த சத்தத்தில் இவள் எழுந்தெல்லாம் நிற்கவில்லை திரும்பி மட்டும் அவனைப் பார்த்தாள், 'எவன் அவன்? நாம பெரிய பிஸ்னஸ் வுமனா மாறுற தருணத்துல டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு?' என்ற மைண்ட் வாய்ஸோடு!
"இங்கே பார்.. நீ இந்த வீட்டுக்கு எந்த நினைப்போட வந்திருக்கன்னு எல்லாம் எனக்கு தெரியல! ஆனா நீ நினைக்கிறது எதுவுமே நடக்காது!" என்றதும் இவளுக்கு தலையும் புரியவில்லை! வாலும் விளங்கவில்லை!
"சார் சொல்றத.. தெளிவா சொல்லுங்க? எனக்கு நீங்க சொல்றது எதுவுமே புரியல" என்றாள் மெல்லிய செவ்விதழ்களை பிதுக்கி.
"இந்த சொகுசுக்கு ஆசைப்பட்டு தான் இங்க வந்து இருக்க?" என்று அந்த அறையை காட்டி எள்ளலாக கேட்டான் துருவ்.
அனுவோ மறுகி அடிப்பட்ட பார்வை எல்லாம் பார்க்கவில்லை. திமிராக அவனை பார்த்து "ஆமா.. எனக்கு பணத்தேவை இருந்தது. அதனால வாடகைத் தாய்க்கு ஒத்துக்கிட்டேன்.
இதுல என்ன தப்பு? என்ன மாதிரி பொண்ணு இருந்ததால் தான்.. பணத் தேவைக்காக ஒத்துக்கிறதுனால தானே.. நீங்க எல்லாம் வலிக்காம பிள்ளைய பெத்து உங்க வாரிசுனு கெத்தா இன்ஸ்டா ஃபேஸ்புக்குனு போஸ்ட் போட்டு பெருமையா சொல்லிக்கிறிங்க? அப்போ அந்த குழந்தையை சுமக்கும் என்னை நீங்க தானே நல்லா.. சொகுசா.. வச்சு பார்த்துக்கணும்? அதுதானே ரூல்ஸ் நம்பர் ஒன்! நீங்க இந்த டெம்ர்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்… எல்லாம் படிக்கவே இல்லையா?" என்று அவள் வியப்புடன் கேட்க…
"என்ன கண்டிஷன்?" என்று கேட்டான். குரலில் சற்று கோபத்தை ஏத்தி பயத்தை காட்டாமல்…
பின்னே.. அவன் உண்டு! அவன் ஃப்ரெண்ட்ஸ் உண்டு! கம்பெனி உண்டு! அவ்வப்போது வீக் எண்ட் பார்ட்டி உண்டு என்று மிங்களாகி இருந்தாலும் முரட்டு சிங்கிளாகவே வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தவனின் வாழ்க்கையில்… அவன் சந்தோஷத்தை எல்லாம் பிடுங்கி விட்டு "இந்த பிடி.. இவளை வைத்து சமாளி!!" என்று கடவுள் இப்படி ஒரு வாயாடி கொண்டு வந்து நீட்டினால்… அவனும் தான் என்ன செய்வான்?
"அதான் சார்.. அப்சரா மேடம் என்கிட்ட போட்ட டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ். அதுல முதல் பாயிண்டு குழந்தை பொறக்குற வரைக்கும் நான் அவங்க பாதுகாப்புல இருக்கணும்ங்குறது தான். அந்த அவங்கங்குறது பொண்டாட்டியா இருந்தா என்ன? புருஷனா இருந்தா என்ன?" என்று புருஷன் என்கிற இடத்தில் துருவை காட்ட…
'இப்போ தான் அவளை துரத்தி விட்டோம். திரும்பவும் என் வாழ்வில் இன்னொரு பெண்ணா? அதுவும் இவளா?' என்று சிகையை கோதிக் கொண்டவன் "வாட் எவர்..! ஏதோ அந்த லூசு பண்ணுன குளறுபடியில.. நானும் கையெழுத்து போட்டு மாட்டிக்கிட்டேன் என்கிற ஒரே காரணத்துக்காக தான் உன்னை கொண்டு வந்து இங்கே வச்சிருக்கேன். டெலிவரி வரைக்கும் இருந்துட்டு அதுக்கப்புறம் குழந்தைகள தூக்கிட்டு ஓடிப் போயிடு" என்றான் வேக வேகமாக...
"நான் ஏன் ஓடணும்? என்ன தப்பு செஞ்சேன் ஓடுறதுக்கு? நான் பொறுமையா நிறுத்தி நிதானமாகத்தான் போவேன். ஆனால் குழந்தைகள் பற்றிய பேச்ச என்னிடம் நீங்க பேசவே கூடாது! ஏன்னா.. குழந்தைங்க பிறந்ததுக்கு அப்புறம் எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு ரூல் நம்பர் ஃபைல போட்டு வச்சிருக்கீங்க சார்…" என்ற இவள் சொன்னா அந்த ரூல்ஸை அவன் கண்ணால பார்த்ததே இல்லையே? பின் எப்படி அவனுக்கு அது புரியும்?
'முதலில் அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் என்னன்னு பார்த்து படிக்கணும்! இவ பாட்டு இஷ்டத்துக்கு எதாவது பேசுறளா? இல்லை உண்மை தான் பேசுறாளானு எனக்கு தெரியல!' என்று தலையை உலுக்கி கொண்டவன், "குழந்தை பிறக்கறதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு இல்லையா? அப்போ அத பத்தி நிதானமா பேசிக்கலாம். இப்போ ஒரு சமையல் ஆள் வரச் சொல்லி இருக்கேன். உனக்கு வேணுங்கிறதை அவங்க சமைத்து தருவாங்க.. சமைச்சு கொடுத்ததை சாப்பிட்டோமா.. ரூம்ல தூங்கினோமா ரெஸ்ட் எடுத்தோமானு இருக்கணும்! அதை விட்டுட்டு.. வெளியில வந்து உலாவுறது. பாக்குறாங்க கிட்ட எல்லாம் பேசுறது.. இப்படி எதுவும் வைச்சுக்க கூடாது புரியுதா?" என்றான் ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸராய்…!!
"இல்ல.. புரியல?" என்று அவள் திரும்பவும் அதே அவளது வசனத்தை கூற..
"இப்ப என்ன புரியல?" என்று துருவ் பல்லை கடிக்க..
"இல்ல.. இந்த வீட்ல நான் என்ன சிறை கைதியா? ரூம்ம விட்டு வெளியில் வரக்கூடாதுன்னு ஆர்டர் போடுறிங்க? யாரு கிட்டேயும் பேச கூடாதுனு ரூல்ஸ் பேசுறிங்க? கைதியை கூட காலையில வேலை செய்ய ஃப்ரீயா வெளியில் கூட்டிட்டு போறாங்க.. ஆனா அனுப்ரியா நான் இங்க சிறை இருக்கணுமா? ஆனா.. நீங்க ஓவரா ரூல்ஸ் போடுறீங்களே? இந்த ரூல்ஸ் எல்லாம் அந்த ரூல்ஸ் பேப்பர்ல இல்லையே?" என்று முறைத்து நின்றாள்.
தலையில் அடித்துக் கொண்டவன். "இப்போதைக்கு சாப்பிட்டு தூங்கு! அதுக்கப்புறம்.. மத்தத்தை பாத்துக்கலாம்" என்றவன் இவளிடம் இருந்து தூர ஓட வேண்டும் என்று நினைப்போடு இரண்டு இரண்டு அடிகளாய் மாடி படியில் எடுத்து வைத்து தன் அறைக்குள் சென்று விட்டான்.
அப்படி விட்டு விடுமா விதி என்ன??
அதுபோலவே சாப்பாடு வரவழைத்து கொடுத்தான் சுகன் மூலம்.
இவளிடம் பேசிவிட்டு மேலே தன் அறைக்கு சென்றவன் தான். அதற்கு பின் இவள் கண்களிலேயே அவன் படவில்லை. அன்று திருப்தியாய் உண்டவளுக்கு சட்டென்று உறக்கம் வந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக என்ன செய்வது? ஏது செய்வது? என்று புரியாமல் விழித்து தவித்து கலங்கி நட்டாற்றில் நின்றவளுக்கு இன்று கரை சேர்ந்த உணர்வு!
மறுநாள் காலை விழித்து எழுந்தவளுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சியாய் இருக்க… மெல்ல எழுந்து அரை கதவை திறந்து வெளியே கண்களை ஓட விட்டாள். யாரும் இல்லாமல் இருப்பது ஒரு வகையில் நிம்மதியா இருக்க கொஞ்சம் பயந்து வந்தவள் அதன்பின் கொஞ்சம் திமிராகவே நடந்து வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
காலை அப்போது தான் மணி எட்டு..
யாரும் எழுந்த அரவம் ஒன்றும் கேட்கவில்லை. அனுவுக்கு லேசாக பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த வீட்டில் எது எங்கே இருக்கிறது என்று எதுவும் தெரியாது அவளுக்கு. அதனால் வயிற்றை தடவியபடி அமர்ந்திருந்தாள். அவளின் நீள நயனங்கள் அந்த வீட்டையே சுற்றி சுழன்றபடியே இருந்தது, யாரேனும் கண்ணில் தட்டுப்பட மாட்டார்களா என்று.
அவளது நேரம் யாரையும் காணவில்லை. அதற்குள் வயிற்றுக்குள் இருந்த இரண்டில் ஏதோ ஒன்று அவள் வயிற்றை முட்டியது பசியால்…
சட்டென்று ஜெர்காகி போனாள் அனு. இந்த ஆறாம் மாதம் தொடக்கத்தில் இருந்து இப்படித்தான் அவ்வப்போது பசி அதிகரிக்கையில்.. இல்லை அவர்கள் குஷியாக விளையாடும் போதோ இப்படி முட்டுவது உண்டு..
"அடேய் இருடா.. இன்னும் உங்கப்பனை காணலை! அந்த ஆள் வந்தால் தான் ஏதாவது கேட்டு வாங்கி உங்களுக்கு தர முடியும்" என்று வயிற்றை தடவியப்படி அவள் சற்று உரத்துப் பேச…
அவள் கருவில் இருந்த குழந்தைக்கு என்ன புரிந்ததோ.. மீண்டும் ஒரு கிக்!
"அம்மாடி.. என்னங்கடா இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.. மீ பாவம்! உங்க அப்பா வரும் வரை வெயிட்டுவோம்" என்று அவள் பேசிக் கொண்டே இருக்க.. வயிற்றின் துள்ளலும் சோர்ந்து அடங்கியது.
"ஸ்ஸப்பா.. மிடில டா! ஒரு தொழிலதிபியா மாறணும்னு நினைச்சதுக்கு இப்படியாட படுத்துவீங்க" என்று அந்த சோபாவின் பின்னால் சாய்ந்து அமர்ந்துக் கண்களை மூடிக் கொண்டாள்.
ஒரு பத்து நிமிடம் கூட கடந்து இருக்காது. அதற்குள் மாடியில் இருந்து சட சட சடவென்று சத்தம் கேட்க. இவள் என்ன சத்தம் என்று திரும்பிப் பார்ப்பதற்குள் மாடியில் இருந்து வேக நடையோடு வந்தவன் அதிவேகமாக வெளியேறி விட்டான்.
"அடப்பாவி நான் ஒருத்தி இருக்கிறேன் என்பதை பார்க்கவில்லையே.." என்றபடி அவன் வேகத்துக்கு இவளால் ஈடு கொடுக்க முடியுமா? அதுவும் இரட்டை பிள்ளைகளை தாங்கி வயிறு பெரிய வயிறோடு? அவள் எழுந்து நடந்து போவதற்குள் அவனது கார் கேட்டை தான்டியே சென்று விட்டது.
அதனை பார்த்த மாத்திரத்தில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இப்படி அழைத்து வந்து பட்டினி போடுகிறானே என்று!
'இல்லையே நேற்று ஏதோ ஒரு சமையலாளை வேலைக்கு அமர்த்துவதாக கூறியிருந்தானே?' என்று இவள் யோசித்துக் கொண்டே அந்த பெரிய வீட்டை பார்த்தாள்.
நேற்று மாலை அந்த வீடு அழகில் அவளை பிரமிக்க வைத்தது என்றால்.. இன்று நட்ட நடு ஹாலில் தன்னந்தனியாக நின்றவளுக்கு அந்த வீடு பெரும் அச்சத்தை கொடுத்தது. அப்போது பார்த்து தான் அவள் பார்த்த பேய் படங்கள் எல்லாம் வரிசை கட்டிக் கொண்டு அவள் கண்கள் முன்னே உலா வர.. இறுக்க கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அந்த சோபாவிலேயே சுருண்டு அமர்ந்து கொண்டாள்.
வெளியில் செக்யூரிட்டி இருப்பார் என்று அவளுக்கு தெரியும். ஆனால் இங்கிருந்து அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமே என்று மலைப்பாக இருந்தது.
ஏதோ பிள்ளை பெற்று கொடுப்பது சர்வ சாதாரணமாக 10 மாதங்களில் முடியும் ஒன்று போல்.. பிள்ளை பெற்று கொடுத்து விட்டால் சுளையாக 10 லட்சம் கிடைக்கும்! அந்த 10 லட்சத்தை வைத்துக்கொண்டு தொழில் தொடங்கி முன்னேறலாம். தமிழகத்தில் முன்னணி தொழிலதிபி ஆகலாம் என்று பெரும் கனவோடு இருந்தவளுக்கு ஆறாம் மாதமே தொடங்கியதும்.. இதோ மூச்சை முட்டியது!
சாதாரணமாக எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. நின்றால் நடந்தால் அமர்ந்தால் மூச்சு வாங்கியது!
இணையோடு காதலில் முயங்கி தாம்பத்தியத்தில் இருவரும் ஒன்றாக கலந்து அதன் மூலம் தரித்த கருவென்றால்.. அவளுக்கு இத்தனை சுமை இருக்காது. கணவன் அவள் சோர்வுறும் நேரத்தில் கைக் கொடுத்திருப்பான். ஆனால்.. இது வெறும் கடமைக்காக சுமப்பது அல்லவா? பெரும் சுமையாக தோன்றியது அனுவுக்கு.
சுமைகளும் சுகங்களாக இருப்பது தாய்மையில் அல்லவா?
இங்கே அவளுக்கு தான் அந்த உணர்வே இல்லையே!!
இதில் பசி வேறு வயிற்றை கிள்ள.. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ஓரளவு அவளுக்கு சமைக்க தெரியும் தான். ஆனால் இந்த வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையே என்று தட்டித் தடவி ஒரு வழியாக சமையலறையை கண்டுபிடித்து விட்டாள். உள்ளே சென்று பார்த்தால் அங்கிருந்த அதி நவீன அடுப்பும் ஓவனும் இவளை மிரட்டியது.
எந்த பொருள் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. எல்லாம் மாடர்ன் கிச்சனில் பாத்திரங்கள் கூட உள்ளே பதுங்கி இருக்க.. தேடி கலைத்து இரண்டு மூன்று பாத்திரங்களை கண்டுபிடித்துவிட்டாள். பாத்திரங்களை கண்டுபிடித்து என்ன பயன்? அதில் சமைக்க ஏதாவது வேண்டுமே? அதை தேடி பார்த்தால்.. ஒன்றுமே கிடைக்கவில்லை! இவன் என்ன இங்கே குடும்பமாக நடத்துகிறான் இங்கு அனைத்து வைத்திருப்பதற்கு? குடித்து கூத்தடிப்பதற்கு மட்டும் தானே!
அவனே ஒரு வரம் ஓடின ஓட்டத்தின் களைப்பை போக்க வீக் எண்ட்.. பார்ட்டி என்றால் மட்டும் தான் இங்கே வருவான். பின்னே அவன் இங்கு எதை வைத்திருக்க? ஆனால் பாவம் அதெல்லாம் இவளுக்கு தெரியாது அல்லவா? இது என்னவோ அவனின் வீடு என்று நினைத்திருக்கிறாள்.
"சமைக்கும் பொருட்கள்தான் ஒன்றும் இல்லை. பணக்கார வீட்ல எல்லாம் ப்ரிட்ஜை திறந்தாலே கேக் ஐஸ்கிரீம் சாக்லேட் பழங்கள் என்று இருக்குமே… எத்தனை படத்தில் பார்த்திருக்கிறேன்.. அப்படி ஏதாவது இருக்கும் கண்டிப்பாக.. அதை எடுத்து சாப்பிட்டு இப்பொழுது பசியை ஆத்துவோம்" என்று ஃப்ரிட்ஜ் கதவை திறந்தவளின் கண்கள் நிலை குத்தி நின்றது அதிலிருந்தவற்றை பார்த்து!!
அதிலிருந்தவை வெவ்வேறு ரகத்தில் பாட்டிலில் விஸ்கி ரம் என்று வகை வகையாய் உள்நாட்டு வெளிநாட்டு சரக்குகள் மட்டுமே!
"அடியாத்தி..!!" என்று நெஞ்சில் கை வைத்தவள், குனிந்து தன் பெரிய வயிற்றைப் பார்த்து "டேய் பிள்ளைகளா.. உங்க அப்பாவ பாத்திங்களா டா? ஃபிரிட்ஜுக்குள்ள மினி பாரே வைச்சிருக்கான்? நாம எல்லாம் இதுக்குள்ள ஐஸ்கிரீம் வைத்து பார்த்திருப்போம்.. பழங்கள் வச்சு பார்த்திருப்போம்.. இவன் என்னடா ஃபுல்லா விதவிதமான பாட்டில் பாட்டிலா சரக்கு வச்சிருக்கான்… உங்கப்பன் சரியான குடிக்கார பயலா டா?" என்று கேட்டாள்.
பதிலுக்கு பிள்ளைகள் பேசவில்லை என்றாலும் இவள் பேசிக் கொண்டே இருந்தாள் அவள் தனிமையை போக்க..
எவ்வளோ தேடியும் அவ்வளவு பெரிய வீட்டில் உண்பதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.
"'கடல் நிறைய தண்ணீர் இருந்தாலும் தாகத்திற்கு சிறிது தண்ணீர் கிடைக்காதாம்!' அது போல தான் இருக்கு. இந்த வீடு நிறைய பணத்தின் செழுமையும் அலங்காரமும் இருந்து என்ன பயன்? என் பசிக்கு சாப்பாடு இல்லையே?" என்று தண்ணீரை மட்டும் குடித்து விட்டு வந்து அமர்ந்தாள் அனு.
வேகமாக காலையில் அலுவலகத்திற்கு சென்ற துருவ் அன்று முக்கியமான டீலரின் மீட்டிங் இருந்தது. அதில் அவனின் கவனம் வழக்கம் போல சென்று விட.. இப்படி ஒருத்தியை வீட்டுக்கு கொண்டு வந்து வைத்தோம் என்பதையே அவன் மறந்து விட்டிருந்தான்.
பொதுவாக அவன் வீட்டில் இருந்து தான் அலுவலகத்திற்கு செல்வான். எப்பவாவது பீச் ஹவுஸ் வந்தால் இங்கே இருந்து செல்வதற்கு ஏதுவாக உடைகள் இங்கு இருந்தாலும் உணவு எல்லாம் இங்கே ஒன்று தயாரிப்பது கிடையாது. கூடவே அவன் மட்டும் தானே என்று எண்ணத்தில் அவன் அலுவலகம் வந்துவிட்டு அவனுக்கு உணவு வரவழைத்து சாப்பிடுடுவான்.
ஆனால்.. துருவ் உணவுக்கு ஏற்பாடு செய்வான் என்ற நம்பிக்கையில் அங்கே ஒருத்தியும் அவனின் இரு புதல்வர்களும் பசியால் வாடிக் கொண்டிருப்பதை இவன் அறியவில்லை.
இவனுக்கு எப்பொழுதும் பாடிகார்டாக இருக்கும் சுகனுக்குமே இவன் அனுவிடம் என்ன சொல்லிட்டு வந்தான் என்று தெரியாது. அதனால் அவளுக்கு ஏதாவது செஞ்சு இருப்பான் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்க.. உள்ளே அலுவலக மீட்டிங்கில் இருந்த துருவும் அவளை மறந்து விட்டிருக்க..சோபாவில் சாய்ந்து மெல்ல வயிற்றை தடவ படி இருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
மதியம் வரையே துருவுக்கு வேலை பிழிந்து எடுத்தது. டீலிங் முடித்து வந்து மீண்டும் அவனது மேனுஃபாக்சரிங் யூனிட்டுக்கு ஒரு முறை விசிட் அடித்தவன் மாலை போல தான் சோர்வுடன் வீடு திரும்ப காரில் அமர… டிரைவர் வண்டி எடுக்காமல் சுகனையும் பின்னால் அமர்ந்திருந்த துருவையும் மாறி மாறி பார்த்தான்.
துருவ் கண்கள் மூடி சோர்வாக சாய்ந்து அமர்ந்திருக்க.. சுகன் தான் கேட்டான் "சார் வீட்டுக்கா? இல்லை.." என்று அவன் முடிக்கு முன் ஏற்கனவே சோர்வில் இருந்தவன் "வீட்டுக்கு போகாம வேற எங்க போவேன் நான்? ஏன் இப்படி லூசு தனமா கேள்வி கேக்குற சுகன்?" என்று சகட்டுமேனிக்கு அவனைத் திட்ட…
அனைத்தையும் வாங்க உரிமைப்பட்டவன் நான் என்று சுகன் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவன், "பீச் ஹவுஸ் அந்த மேடமா விட்டுட்டு வந்து இருக்கீங்க சார்.. அங்க யாரும் சர்வண்ட்ஸ் இல்ல.. அவங்க.. அவங்கள…" என்றதும் தான் குருவுக்கு அந்த நினைப்பே வர..
- "ஷிட்!" என்று தலையில் அடித்துக் கொண்டவன் காரை பீச் ஹவுஸூக்கு விட சொன்னவன், வேகமாக உள்ளே சென்று பார்க்க அரை மயக்கத்தில் கிடந்தாள் உணவின்றி அனுப்ரியா!
அட சண்டாளா 😳😳😳😳😳
பாவம் டா அனு....
அனு ஏன் இப்படி ஒத்துகிட்டா????
பெருசா ஃபேமிலிக்காக அப்படினு ஒன்னும் இல்ல ...
அப்பறம் ஏன் இந்த குறுக்கு வழி?????
இது தப்பு தானே????
@gowri யாரும் இல்லாதது தான் காரணம். கதை படிக்க படிக்க உங்களுக்கே புரியும் டியர்
@goms அத்தனை வருஷம் வாழ்ந்த பொண்டாட்டியே மறந்துட்டான் ஒரு நாளுல இவ ஞாபகம் வந்திருவாளா? ஆனா வருவா வர வைப்போம்