அசுரன் 3
“குட் மார்னிங் டைரக்டர் மேடம்.. என்ன இந்த பக்கம் உங்க காத்து கொஞ்சம் அதிகமா அடிக்குது?” என்ற நக்கலாக கேட்ட ராவண்-ஐ முறைத்து பார்த்தவள்,
“அதான் நான் டைரக்டர் ஆச்சே.. அப்ப என் காத்து எல்லா பக்கமும் அடிக்கும்..!” என்றவள்,
“கேம்ப் நடந்துறிங்க சரி.. அதிலும் ஃப்ரீ கேம்ப்.. தட்ஸ் ஓகே..! ஆனா, ஏன் இப்படி திருவிழா கூட்டம் போல ஜேஜேன்னு நிக்க வைச்சிருக்கிங்க டாக்டர்? உங்களுக்கு மெடிசின் பத்தி தெரிஞ்ச அளவு மேனேஜ்மென்ட் பத்தி தெரியல.. சோ.. யூ ஷூட் அஸ்க் ஹெல்ப் ஃப்ரம் அவர் டீம்..!” என்றவள் அவனை சற்று மிடுக்கோடு தான் பார்த்தாள்.
“யூ ஆர் கரெக்ட்..! மெடிசன் பற்றி நல்லா தெரிஞ்ச எனக்கு சில மென்டல்கள் பத்தி சாரி சாரி மேனேஜ்மென்ட் பத்தி தெரியல. நீங்க கூட ரொம்ப வில்லிங்கா இருக்கிங்க போலவே எனக்கு ஹெல்ப் பண்ண.. நீங்களே ஹெல்ப் பண்ணலாமே..!” என்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்க்க, அப்பார்வையில் தெரிந்த அர்த்தத்தில் செங்கனலாய் சிவந்தது ஆருஷியின் முகம்.
“இந்த மாதிரி சின்ன சின்ன வேலைக்கு எல்லாம் என்னை போல டைரக்டர் தேவையில்லை டாக்டர் சார்.. எங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து உங்க லெவலுக்கு தோதான ஆளை அனுப்பி வைக்கிறேன்” என்று மிடுக்காக கூறியவள், அவனை கண்களால் எரித்தவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.
“என்ன தான் வேற ஆள் வந்தாலும் டைரக்டர் சொல்லி தருவது போல ஆகுமா? என்ன பாஸ்??” என்று அவள் வழியை மறித்தான் ராவண்.
கோப பார்வை பார்த்தவள் “இவன் அடங்கவே மாட்டேங்குறான்.. இவனை அடக்கிய ஆகணும்..! இன்னைக்கு மாமா கிட்ட இவன பத்தி பேசியே ஆகணும். சச்ச அ இரிட்டேட்டிங் டாக்டர்” என்று முடிவோடு அவனை சுற்றிக் கொண்டு சென்றாள்.
அவள் செல்வதைப் பார்த்தவன் முகத்தில் இனம்புரியா உணர்வுகள் உதித்தோட, மீராவை அழைத்து காயத்ரியிடம் உதவி கேட்க சொல்லி “அவங்க சொன்ன விதம் வேணா தப்பா இருக்கலாம். பட் அவங்க சொன்னது கரெக்ட்..! நம்ம ஹாஸ்பிடலுக்குனு ஒரு டிக்னிடி இருக்கு.. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு.. அதை நாம கண்டிப்பா பாலோ பண்ணனும் சிஸ்டர்..! இன்னும் ரெண்டு மூணு ஆட்களை போட்டு அவங்களை எல்லாம் கேம்ப் முடியும்வரை அமைதியாக பார்த்துக்கோங்க” என்றவன் தன் கேபினுள் சென்றான்.
இதை தான் அந்த ஆருஷியும் சொன்னாள். ஏனோ அவள் சொல்லிய விதம் மீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதையே ராவண் சொல்லி செல்ல.. ஆட்டுக்குட்டியை போல அனைத்துக்கும் தலையாட்டி தலையாட்டி கேட்டுக் கொண்டவள், நேராக காயத்ரியிடம் சென்று அவற்றையெல்லாம் கூற அவரும் இவள் உதவிக்கு என்று மேலும் இரு செவிலியர்களை அனுப்பி வைத்தார்.
அதன் பின் அந்த கேம்ப் ஒழுங்காக.. சீராக.. முக்கியமாக அமைதியாக நடந்து முடிந்தது.
காரிகையின் கருவிழிகள் இரண்டும், அந்த புத்தகத்தின் வரிகளை கண்களால் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தது. கீழ் உதட்டில், அவ்வப்போது மெல்லிய சிரிப்பு வந்து விழுந்து கொண்டிருந்தது. சில சமயம் ஏன் சிரிக்கிறாய் என்று மேற்பற்களால் அந்த கீழ் உதடுக்கு தண்டனையும் தாராளமாகவே வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
தாடையை தலையணையில் பதித்து.. குப்புற படுத்திருந்தவளின் கால்களின் வெண் பாதங்கள் இரண்டும், அவ்வப்போது காதலர்களை போல ஒன்றோடு ஓன்று தீண்டி முத்தமிட்டு விலகி இன்பமாய் சிணுங்கின..!
கணுக்காலில் கிடந்த மெல்லிய கொலுசுக்கள் இரண்டும் செல்லமாக சிணுங்கி அடங்கி கொண்டிருந்தது.
மௌனமாக தலையை மட்டும் ஆட்டியவளின் காதில் அணிக்கோர்ந்திருந்த ஜிமிக்கி கம்மல், அவளது கன்னங்களை செல்லமாக தீண்டி சிணுங்கி, பிறகு காற்றில் பறந்த கூந்தல் காட்டுக்குள் மறைந்து மறைந்து விளையாடியது.
அவளை தான்.. தன் காதல் காரிகையை தான் உச்சாதி பாதம் வரை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.. ராவண்..!
பெருமூச்சு விட்டவன் நாவலை
படிக்கும் கன்னியவளை கண்களில் பொங்கும் மோகத்துடன்.. உடலில் பொங்கும் விரகதாபத்துடன்.. அவள் முகத்தின் அழகை அள்ளி அள்ளி ரசித்தான்.
அவள் சிரிக்கும் போது கன்னங்களின் குழிபள்ளமும்.. தெத்து பல்லின் அழகும்.. மூக்கின் வளைவு மூக்குத்தியும்.. ஒட்டியிருக்கும் உதடுகளின் ஈரமும் நரம்புகளுடன் சிலிர்த்திருக்கும் மென் கழுத்தும்.. திமிறிக் கொண்டு கிடக்கும் இரட்டை திமில்களும் அவனை பாடாய் படுத்தியது.
“செம்ம அழகு டி நீ..” என்று எட்டி அவளை பிடித்து இழுத்தவனின் கைக்குள் வாகாய் சிக்கியவள்,
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. மாறா.. இந்த நாவலை மட்டும் படிச்சு முடிச்சிடுறேனே. ரொம்ப முக்கியமான கட்டம் டா” என்று அவனிடம் கெஞ்சினாள்.
“ஹேய்.. எனக்கு வேலை நேரம் போக உன் கூட நேரம் செலவழிக்கிறதே ரொம்ப கம்மி. அதுலயும் இப்படி நீ கண்ட கண்ட நாவல்ஸ் படிக்கிறேனு அதுக்குள்ள புகுந்துட்டேனா? என் கதி என்னடி?” என்று அவள் முக்கோடு மூக்கு உரசி அவன் தாபமாய் பாவமாய் கேட்க..
“எதே? கண்ட கண்ட நாவல்ஸா? இதெல்லாம் எவ்ளோ க்யூட் ரொமாண்டிக் ஸ்டோரி தெரியுமா? அதை விட கே டிராமா பாருங்க டாக்டரே.. அப்போ தான் கொஞ்சமாச்சும் உங்களுக்கு ரொமான்ஸ்னா என்னென்னு தெரியும். எப்ப பாரு.. பேஷண்ட்.. மெடிசின்.. லேப்.. கேம்ப்.. இப்படியே பேச வேண்டியது. நைட்டானா மட்டும் என் கூட சராசமா இழைய வேண்டியது? இதுக்கு பேரு காதலா? இல்ல இதுக்கு பேரு காதலானு கேட்கிறேன் டாக்டரே?.. டாக்டரே..” என்று அவள் அடுத்த பேசிய வார்த்தைகள் எல்லாம் அவன் இதழ்களுக்குள் சென்று முடிய..
“அடியே பாப்பா.. எனக்கு என்னோட காதலை இப்படித்தான் காட்டத் தெரியும். எவனோ ஒருத்தன் நடிச்சதை பார்த்து நான் உன்கிட்ட நடிக்க முடியாது. நான் நானாகத் தான் என்னோட பாப்பா கிட்ட இருக்க முடியும்..!” என்றவன் அவளின் தாடையை பற்றினான்
“ஆஆஆ வலிக்குது டா முரடா” என்று அவள் கத்தும் போது அவளுடைய கன்னங்களை இரண்டு பக்கமும் அழுத்தி பிடித்து உதட்டை குவிக்கச் செய்தான்.
“டாக்டரே.. ஏஏய்.. விட்ரராஆஆ.. ” குவிந்த வாயோடு அழகாக பேசிக்கொண்டிருந்தாள் ராவணின் காதலி.
அவளது தளிர் விரல்கள் அவனது நெஞ்சில் வலிக்காமல் அடித்துக் கொண்டிருக்க.. அவளது கைகளை பற்றி தன் நெஞ்சோடு அழுத்திக் பிடித்துக் கொண்டான்.
பின் நிறுத்தி நிதானமாக அவளின் சிவந்த உதடுகளை கவ்விக் கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தான் ராவண்.. தன் உதடுகளை எந்த எதிர்ப்பும் இன்றி அவனுக்கு பிரித்துக் கொடுத்து அவன் பின்னந் தலைமுடிக்குள் கையை விட்டு இறுக்கினாள் அவள்.
பெண்ணவளின் மெல்லிய மேல் உதட்டையும்.. தடித்த கீழ் உதட்டையும் தன் இஷ்டம் போல கொய்தான் இரக்கமில்லா அரக்கன் அவன்.
தன்னுடைய மூக்கின் மீது அவன் மூக்கை வைத்து அழுத்திக் கொண்டு உதடுகளை முத்தமிடுவதால் அணங்கவளின் மூச்சுக்காற்றை அவனும், அவனுடைய மூச்சுக்காற்றை அவளும் மாறிமாறி சுவாசித்துக் கொண்டிருந்தனர்.
மேகம் போலிருந்தாள் அவனின் அவள்..!
அவள் மீது அவன் ஊர்வலம் போக..
அவள் விட்ட உஷ்ண மூச்சு அவனின் முகத்தில் மோத..
சுகம்.. சுகம்.. ஒரு பெண்ணோடு ஏற்படுகின்ற சுகம்..!
அப்பப்பா.. எவ்வளவு இன்பம்!
சிற்றின்பமே என்றாலும்.. அந்நேரத்தில் அது தான் இவ்வுலகத்திலேயே பேரின்பமாக அவர்களை ஆட்கொண்டிருந்தது.
வழக்கம் போல அன்று இரவும் அவளை திகட்ட திகட்ட தன் வழியில் காதல் செய்தான் இந்த பொல்லா ராவண்.
மறுநாள் வழக்கம் போல அதே மிடுக்கோடு நிமிர்வோடு மருத்துவமனைக்கு வந்தான் ராவண்.
முதல் நாள் இரவு தூங்காதது ராவண் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது. சிவந்து தடித்திருந்த இமைகள் எட்டப்பனாய் காட்டிக் கொடுத்தது. ராவண் கண்களை அவன் அறியாமல் உற்று உற்றுப் பார்த்தாள் மீரா.
“என்ன நம்ம டாக்டர் கண்ணெல்லாம் ஒரே ரெட்டிஷ்ஷா இருக்கு. ஜூரமா இல்லை மெட்ராஸ் ஐ வந்திருக்குமோ?” என்று அவள் கவலை அவளுக்கு.
சாருபாலாவிடம் இருந்து அழைப்பு வந்தது மீராவிற்கு. இன்னும் ஓபி ஆரம்பிக்கவில்லை. பெரிதாக ஓபி யாரும் வரவில்லை. இரண்டு தம்பதிகளுக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்து இருந்தான். அவனுக்கு இன்றைய நாள் பொழுது லேபில் தான். அப்பொழுது அவள் பெரிதாக அவன் அருகில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் சாருபாலாவை காணச் சென்றாள்.
“எஸ்கியூஸ் மீ டாக்டர்..” என்று உள்ளே நுழைந்தவளை பார்த்து “ஓ மீரா. வா வா. உன்ன தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என்று அழைத்தார் சாருபாலா.
“சொல்லுங்க டாக்டர். ஏதும் தியேட்டர் கேஸ் இருக்கா? நான் வரணுமா?” என்று கேட்டவளை, கையசைத்து “இல்லை மீரா. உங்க சாருக்கு இன்னைக்கு செட்டியூல் எப்படி? ஓபி இருக்கா? ஃப்ரீயா இருக்காரா நான் அவரை கொஞ்சம் பார்க்கணுமே?” என்று கேட்டார்.
ராவண் பற்றிய பேச்சு எடுத்ததுமே மீராவின் கண்களில் அத்தனை மின்னல்கள் வந்து கூத்தாட..
“சாருக்கு இன்னைக்கு ஓபி மதியத்துக்கு மேல் தான் மேடம். இன்னிக்கு லேப்ல தான் டாக்டருக்கு ஒர்க். நான் வரும் போது கூட சார் லேப்ல தான் இருந்தாரு. ஏதாவது சொல்லனுமா? இல்ல கேட்கணுமா? சொல்லுங்க.. நான் உடனே போய் கேட்டுட்டு வரேன்..” என்று அவளின் பரபரப்பை கண்டு தலையசைத்து சிரித்தார் சாருபாலா.
சாருபாலாவிற்கு மீராவின் அந்த ஆர்வக்கோளாறு எதனால் என்று புரிந்தது. அவள் வயதை கடந்து வந்தவர் தானே அவரும். ஆனால் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்..
“ஒரு கேஸ் விஷயமா நான் உங்க டாக்டர் கிட்ட டிஸ்கஸ் பண்ணனும் மீரா. அவர் எப்போ ஃப்ரீனு கேட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணு சரியா?” என்றதும்,
“இதோ டாக்டர்..!” என்றவள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியரிடம் பாராட்டு வாங்கிய மாணவியின் துள்ளலோடு குதித்து ஓடியவளை பார்த்தார் புன்னகையோடு.
“வர வர இந்த ராவண்க்கு ஹாஸ்பிடல்ல ஃபேன்ஸோட எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கு” என்று சிரித்தார்.
வேகமாக ஓடிய மீரா எதிரில் வந்த ஆருஷியின் மீது மோதினாள். அதில் நிலைத்தடுமாறி விழுந்தாள் ஆருஷி.
“ஹே.. கண்ண எங்க வச்சிட்டு இப்படி ஓடி வர.. இடியட்..!” என்று அவள் கத்த..
கீழே விழுந்து கிடந்த ஆருஷியை பயத்தோடு பார்த்தாள் மீரா.
“மேடம்.. சாரி.. சாரி..” படப்படப்பாக மன்னிப்பு வேண்டினாள் மீரா.
அவளை முறைப்போடு பார்த்தவாறே ஆருஷி மெல்ல எழு முயன்றாள். மீரா வேகமாக ஓடி வந்து மோதியதால், ஹை ஹீல்ஸ் போட்டியிருந்த ஆருஷி நிலைத்தடுமாறி விழுந்து வைக்க.. அவளால் எழ முடியவில்லை. காலை அசைத்தாலே பயங்கரமாக வலித்தது அவளுக்கு.
“எப்பவும் கண்ணப் பிடறியில் தான் வச்சுக்கிட்டு வேலை செய்வியா நீ? இல்ல கவனம் முழுவதும் வேற இடத்துல தான் இருக்குமா? இடியட்..!” என்று வலி தாங்க முடியாமல் மீரா மீது எரிந்து விழுந்தாள் ஆருஷி.
“எழுந்திருங்க ஆருஷி..” என்று அவள் பக்கம் ஒரு கை நீள.. நிமிர்ந்து பார்த்தாள் ஆருஷி. அங்கே காயத்ரி நின்றிருந்தாள்.
மெல்ல காயத்ரி கையைப் பிடித்து தட்டு தடுமாறி நிற்க முடியாமல் நின்றாள் ஆருஷி. காலை கீழே ஊன்றவே முடியவில்லை அவளால்.
அவள் நிற்க முடியாமல் தடுமாற “என்ன மீரா சிஸ்டர் பாத்துக்கிட்டே இருக்கீங்க.. இடிச்சிட்டு சாரி சொன்னா மட்டும் போதுமா? அவங்களை ஒரு பக்கம் பிடிங்க” என்று சற்று அதட்டலான குரலில் காயத்ரி பேச..
“சாரி சாரி மேடம்.. சாரி சிஸ்டர்..” என்று இன்னும் படபடப்பு தீராமல் மறுபக்கம் வந்து ஆருஷியை பிடித்துக் கொண்டாள் மீரா.
மீரா பிடித்தது அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் வேறு வழி இல்லை..!
“இங்க ட்ரீட்மென்ட் ரூம்க்கு கூட்டிட்டு வாங்க..” என்ற காயத்ரி அருகில் இருக்கும் டிரீட்மென்ட் ரூமுக்கு அழைத்து சென்றாள் ஆருஷியை. அது ராவண் கேபினுக்கு அருகில் உள்ளது.
“ஹீல்ஸ் ரிமூவ் பண்ணிடுறேன்..” என்ற காயத்ரி அவளின் ஹீல்ஸில் கை வைக்கப் போக..
“வேண்டாம் சிஸ்டர்.. நானே செய்கிறேன்” என்று இடது காலில் உள்ளதை சட்டென்று கழட்டிவிட்டவளால் வலது காலில் உள்ளதை கழட்ட முடியாமல் வலியில் சிரமப்பட..
“இதுல என்ன இருக்கு மேம்.. வி ஆர் நர்ஸ்..! எங்க டூட்டியே எந்தவித முகச்சுழிப்பும் இல்லாமல் பேஷண்ட்டிற்கு ட்ரீட்மென்ட் பண்றது தான். விடுங்க நான் பார்த்துக்கிறேன்..!” என்று மென்மையாக பேசிய காயத்ரியின் அணுகுமுறை ஆருஷியை மிகவும் கவர்ந்தது.
அவளது வலது காலில் இருந்து மெல்ல ஹீல்ஸை எடுத்துவிட்டவள் காலை பரிசோதிக்க அங்கே சுளுக்கு மாதிரி தெரிந்தது.
“மேம்.. பிராக்சர் மாதிரி எனக்கு தெரியல. ஜஸ்ட் ஸ்ப்ரைன் மாதிரி தான் இருக்கு. இது என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல கெஸ் பண்ணினது. நீங்க எதுக்கும் ஒரு தடவை ஆர்த்தோ டாக்டர் ஒப்பினியன் கேட்டுக்கோங்க. நான் இப்போ இதுக்கு மட்டும் ட்ரீட்மென்ட் பண்றேன்” என்று அதற்காக வைத்தியம் செய்தவள் அருகில் மீரா பயத்தோடு பதட்டத்தோடு ஆருஷியை பார்த்து நின்றிருக்க..
அவளை பார்த்த ஆருஷிக்கும் ஒரு மாதிரியானது “யூ மே கோ..!” என்றாள் மீராவை பார்த்து..
திரும்பவும் ஒரு பத்து முறை சாரி உதிர்த்துவிட்டு வேகமாக ராவண் அறைக்குள் சென்றாள் மீரா. அங்கே அந்த குளிர் அறையிலும் அவளுக்கு வியர்வை நிற்கவில்லை.
கூடவே சாருபாலா கூறியதை கூற வேண்டுமே என்று லேபுக்குள் அவனது அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவள், “டாக்டர்.. சாருபாலா மேம் உங்களை மீட் பண்ணனுமாம். அப்பாயின்மென்ட் கேட்டாங்க” என்றாள்.
அப்பொழுதுதான் வேலை முடித்து சற்று ஓய்வாக இருந்தவன் பிடரியில் கைவைத்து தலையை ஒரு முறை சுழற்றி அவளை பார்த்தான். ஏனோ அந்தப் பார்வை அத்தனை வசீகரமாய் இருந்தது.
மீராவால்.. ஏன் எந்த இளம் பெண்ணாலும் அவனின் அப்படிப்பட்ட பார்வையை அந்த ஹேசல் விழிகளை ரசிக்காமல் இருக்க முடியாது.
“சிஸ்டர்.. மீரா..!” அழுத்தமாக கூப்பிட தலையசைத்து “எஸ்.. டாக்டர்..!” என்ற மீராவை பார்த்து இவனுக்கு சிரிப்புதான் முகிழ்த்தது.
“சில்லி கேர்ள்..!” என்று..!
“ஆப்டர்நூன் ரெண்டு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு இல்லையா? ஆஃப்ட்டர் தட் சாருபாலா மேடம பார்க்கிறேனு சொல்லுங்க..” என்று அவளை கூர்ந்து பார்த்தவன் “சிஸ்டர்.. ஏன் ஒரு மாதிரி நர்வசா இருக்கீங்க?” என்று கேட்டான்.
“அது.. அது.. வந்து.. சார்.. வந்து டாக்டர்..” என்று திணறியவள் “நான் அந்த ஆருஷி மேடம் மேல மோதி அவங்கள கீழ தள்ளி விட்டுட்டேன் டாக்டர்” என்றாள் பயத்தோடு.
சட்டென்று எழுந்தவன் “என்ன ஆச்சு அவங்களுக்கு?” என்று கேட்க..
“சாருபாலா மேடமை நான் பாத்துட்டு வேகமா வரும் போது அவங்க மேல தெரியாம மோதிட்டேன் டாக்டர். அவங்க கீழ விழுந்துட்டாங்க.. ஹை ஹீல்ஸ் போட்டு இருந்தாங்களா ரைட்ல லெக்குல ஆங்கிள் கிட்ட அவங்களுக்கு கொஞ்சம் ஸ்ப்ரைன் ஆயிடுச்சுன்னு காயத்ரி சிஸ்டர் சொன்னாங்க..” என்றதும்,
“எங்க இருக்காங்க அவங்க இப்போ?” என்றபடி வேகமாக எழுந்தவன், தன் கையை சுத்தப் படுத்துக் கொண்டு வேகமாக வெளியில் சென்றவனை மீரா அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“போச்சு போச்சு.. ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஏகத்துக்கும் முட்டிக் கொள்ளும்.. இப்போ நான்தான் தள்ளிவிட்டேன்னு அந்த மேடம் நம்ம சார் கிட்ட என்னென்ன சண்டை போட போறாங்களோ?” என்று பயந்தவள்,
வழக்கத்துக்கு மாறாக “இயேசப்பா என்னை இரட்சியும்..!” என்று கூறியவள் “ஐயையோ என்ன திடீர்னு இயேசப்பாவ எல்லாம் கூப்பிடுறேன்.. சுத்தம் எனக்கு கழண்டுடிடுச்சு..!” என்று புலம்பியப்படி ராவண் பின்னால் ஓடினாள்.
அதே நேரம் காயத்ரி ஆருஷியிடம் பேசிக்கொண்டே அவளுக்கு காலுக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தாள். அதில் காயத்ரி புரிந்து கொண்டது ராவண் மீது ஏதோ ஒரு கோபம் ஆருஷிக்கு.
“மேம்.. தப்பா எடுத்துக்காதீங்க.. ராவண் சாரை பற்றி தப்பா சொல்லிக்கிற மாதிரி நான் கேள்விப்பட்டதே கிடையாது. முக்கியமா பெண்கள் விஷயத்தில்!! அதுவே பெரிய நல்ல விஷயம் தானே!! உங்களுக்கு எப்படியோ… இன்னும் ராவண் டாக்டரை சைட் அடிக்க ஒரு கூட்டமே இருக்கு!!" என்றவளை வெட்டுவது போல் பார்த்தாள் ஆருஷி!!
"நீங்க சிவன் போல நெற்றிக்கண் திறந்து என்னை எரிச்சாலும் நான் சொன்னது நிஜம்தான்..!” என்று சிரிப்போடு கூறினாள் காயத்ரி.
"ஏன்.. மீ டூ!!" என்று தானும் அந்த கூட்டத்தில் ஒருத்தி என்று கூறியவளை சங்கடத்தோடு இப்போது பார்த்தாள் ஆருஷி. 35 வயதுக்கு மேல் இருக்கும் காயத்ரிக்கு. ‘இவளுமா அவனை அப்படி பார்க்கிறா?’ என்றது அந்த சங்கடமான பார்வை.
"இதுல சங்கடப்பட எல்லாம் ஒன்னும் இல்ல மேம்!! தூரத்தில் இருந்து நாம் பார்க்கிறோமே நட்சத்திரம்!! சில பேருக்கு அதுக்கு அழகாக தெரியும். சில பேருக்கு வழிகாட்டியாக தெரியும்!! ஆனால் அதை கிட்ட வைத்து பார்க்க முடியாதல்லவா? எத்தனை சினிமா ஸ்டார்ஸ்.. கிரிக்கெட்டர்ஸ்.. ஸ்போர்ட்ஸ் பர்சனல் எல்லாம் நம்ம க்ரஷா வெச்சிருக்கோம். அதுபோலத்தான்.. அதுபோலத்தான் டாக்டரும்.. ஒரு நட்சத்திரம்!! நான் அவருக்கு ஃப்ரீ மார்க்கெட்டிங் செய்றேனு நினைக்காதிங்க!! எனக்கு தெரிஞ்சதை உன்கிட்ட ஜஸ்ட் ஷேர் பண்ணிக்கிட்டேன். அவ்வளவுதான்!!” என்றவளை கண்டு ஆருஷி உதட்டை சுழித்தாள் பெரிய நட்சத்திரம் என்று..!
“மேம்.. அதிலும் இந்த மீரா கொஞ்சம் ஆர்வக்கோளாறு ஆனாலும் ரொம்ப நல்ல பெண் மேம்..! அவ மேல கோபப்படாதீங்க ப்ளீஸ்..!” என்று மீராவுக்காக மன்னிப்பு கேட்கும் காயத்ரியை ஆச்சரியமாக பார்த்தாள் ஆருஷி.
அவள் அப்படித்தான் என்பது போல “மேம்.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. இது நம்ம ராவண் டாக்டர் ட்ரீட்மென்ட் ரூம் தான். டாக்டர் ஒன்னும் சொல்ல மாட்டாரு. நான் ரவுண்ட்ஸ் போறேன்” காயத்ரி தன் டூட்டியை பார்க்க சென்றாள்.
பதின்ம வயது பெண்கள் முதல் பக்குவப்பட்ட பெண்கள் வரை இந்த ராவண்னுக்கு ஏன் இத்தனை ரசிகைகள் என்று புரியவில்லை இந்த பேதை ஆருஷிக்கு..!
“அடடே.. மாடர்ன் கேர்ள்..!! என்ன ஒரு ஆச்சாரம்!!" என்றவன், "இப்ப இன்னும் நல்லா தொடச்சுக்கோ!!" என்றவன் அவளது பின்பக்க கழுத்தில் கையை கொடுத்து தன்னை நோக்கி சாய்த்தவன், அவளது இடது கன்னத்தில் பச் என்று சத்தம் வருமாறு நச்சென்று ஒரு இச்சுக் கொடுத்தான் ராவண்.
வருவான்.. அசுரன்...
டேய் உங்க ரெண்டு பேருக்கும் முன்னவே பழக்கம் இருக்கு....
அது கன்பார்ம்....
இப்ப எனக்கு ஒரு டவுட்...அப்ப நேத்து இரவு காட்சி நடந்தது????
ஒரு வேளை கனவோ?????