ஆழி 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

7

காலையில் வழக்கம் போல வேலைக்கு வந்த விஷ்ணுவை அவன் கோபியர் கூட்டம் கவனிக்க தவறவில்லை..

" ஏய் நம்ம வி.பி. கண்களை பார்த்தியா டி" 

"ஏன் சுகி… எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியலை."

" போடி குள்ள வாத்து கோகி… உன் உயரத்திற்கு அவனை நீ அன்னார்ந்து பார்க்குறதுவே கஷ்டம் .. இதில் அவர் கண்ணை எங்க பார்த்திருக்க போற"

" கரெக்ட்.. அஞ்சு… கண் எல்லாம் ரெடிஷ் ஆ இருக்கு..என்னவா இருக்கும்??"

" நைட் புராஜக்ட் ஒன்னும் அவர்களுக்கு இல்லயே… ஒரு வேளை……"

"ஏய் ப்ரீத்தி எப்போ பாரு.. பாதிலேயே நிப்பாட்டுறது உனக்கு பொழப்பா போச்சு… முழுசா சொல்லு டி"

"ஏண்டி.. நைட்டு தூங்கமா யார் கிட்டையாவுது பேசி கிட்டு இருந்திருப்பார்… இல்லை சாட் பண்ணிகிட்டு இருந்திருக்கலாம்…. இப்படி நிறைய.. லாம் . லாம் .. இருக்கு"

அடுத்த நொடி அவள் மீது பாய்ந்து இருந்தாள் அஞ்சு," இப்படியே பேசிக்கிட்டு போன, நானே உன்னை கொலை பண்ணலாம்… இல்லை மாடியில் இருந்து தள்ளி விடலாம் .. இன்னும் நிறைய லாம் லாம் இருக்கு"

அவள் வாயால் செய்ததை மற்ற இருவரும் கண்ணால் செய்து கொண்டு இருந்தனர். " எனக்கு மண்டை வெடிச்சிட்டும் போல இருக்கு…எனக்கு வி.பி பத்தி தெரிஞ்சே ஆகனும்.."

" அதுக்கு ஒரு வழி இருக்கு.. நம்ம 90ஸ் கிட் பரிதாபம் எதுக்கு இருக்கு… அவன் கிட்ட கொஞ்சம் பிட்டை போட்டா… மொத்த டேட்டா நம்ம கையில" என்று கிலுக்கி சிரித்தாள் சுகி.  

கோபியர் கூட்டம் எந்தக் கண்ணனை பற்றி பேசியதோ அந்த கண்ணனின் நினைவை ஆட்கொண்டு இருந்தாள் ராதை.. தாபமாக இல்லை கோபமாக… பின்னே அவனின் இரவை மொத்தமாக சுருட்டி கொண்டு சென்று விட்டாள் அல்லவா.. 

 

முதல் நாள் அவள் பேச்சை கேட்டவனின் நினைவில் இருந்தது எல்லாம்.. பி.எம். பி.எம் தான்… அவனும் அவனுக்கு தெரிந்த வரையில் யோசித்து விட்டான்… பி.எம். போஸ்ட் மெரிடியம்.. பிரைம் மினிஸ்டர் தொடங்கி… போஸ்ட் மேன் வரை எல்லாம் யோசித்து, களைத்து, அடுத்து போனது கூகிள் ஆண்டவர் தான்..

பாவம் அவருக்கு எப்படி தேனிக்கார பெண்ணின் பெயர் வைக்கும் பாங்கு தெரியும்… இவனை விட முழி பிதுங்கி நின்றது அவரே தான். அந்தோ பரிதாபம் இதற்கு மேல் என்னிடம் சரக்கு இல்லை என்று அவர் ஹேங் ஆகி விட… விஷ்ணுவிற்கு மொத்த கோபமும் அவள் மீது..

இதோ முதலில் போய் நின்றது அவர்கள் டிரெய்னிங் நடக்கும் இடம் தான்.. முதல் பதினைந்து நாட்கள் டிரெய்னிங் அடுத்து தான் அவர்களுக்கான புராஜக்ட் கோட் செய்வார்கள். அங்கே பார்த்தவன் கோபம் இன்னும் எகிறியது..

பிரஷ்ஷர்ஸ் குரூப்பில் ஒரு பையனிடம் சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்த சௌமினியை தான்.. என்னை தூங்க விடாம பண்ணிட்டு இவ இங்க சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு இருக்கா.. இவளை.. என்று அவர்களை நோக்கி நெருங்கியவனின் கோபத்தில் எண்ணெய் ஊற்றுவது போல ஆனது, அந்த பையன் கை குலுக்க நீட்ட, சௌமினி அதை பார்த்து தயங்கி தயங்கி பின் தயாராகுவதை பார்த்து. அவர்கள் அருகில் சென்று ம்க்கும் என்று கணைக்க, வி.பி யைப் பார்த்த மாத்திரத்தில் விரைந்து மறைந்து போனான் அவன்.

அவளை உறுத்து விழித்தவன், " மிஸ்.. சௌடாம்பிகை .. மை கேபின் அட் லஞ்ச்" என்று உறுமி விட்டு சென்றான்.

பயபந்து மெதுவாக தொண்டையில் இருந்து வயிற்றை நோக்கி உருண்டது சௌமினிக்கு.. ’இவன் எதுக்கு வர சொல்கிறான்… நாம என்ன தப்பு செய்தோம் என இவள் புலம்ப… சம்மனே இல்லாமல் ஆஜர் ஆகிய அவளது மனசாட்சி..

கூடவே பாடவும் செய்தது.. " ஒன்றா.. இரண்டா.. நீ செய்த தவறுகள்.. எல்லாம் சொல்லவே இன்று ஒரு நாள் போதுமா…."

இப்போ எதுக்கு நீ இருக்குற பயத்துல, ஜாம்பிய வேற கூட்டிகிட்டு வர .. ’ என்று இவள் எகிற..

உண்மையை தானே சொன்னேன்.. என்று அது பம்மியது..

உண்மை உரக்க சொல்ல.. இது என்ன பொது கூட்டமா… ஆமா அப்படி என்ன நான் தப்பு செஞ்சுபுட்டேன்" என்று அவள் யோசிக்க…

’இரு.. லிஸ்ட் போடுறேன்… கேட்டுக்கோ… ஒன்னு.. நேத்து அவருக்கு வவ்வலம் காட்டியது.. இரண்டு.. ஒன்னுக்கு இரண்டு பட்ட பெயர வைச்சு இருக்க.. மூணு.. நேத்திக்கு அவரு அந்த நட் மேல மோதின போது வாலண்டரா போய் சிரிச்சு வைச்சது…’ அது சொல்லி கொண்டே போக 

"நிப்பாட்டு நிப்பாட்டு… உனக்கு அந்த வி.பி ஏ தேவலாம்…’

காலையில் அவளால் ஒழுங்காக டிரெய்னிங் கவனம் செலுத்த முடியவில்லை.. நல்ல நாளிலே அவள் தில்லை நாயகம்.. இப்போ இவன் கூப்பிடது வேற… எதுக்கு எதுக்கு அதே அவளுக்கு ஓடி கொண்டிருக்க.. மதிய உணவு இடைவேளை அறிவித்ததும், முதல் ஆளாக பாய்ந்து ஓடினாள் ரெஸ்ட் ரூம் நோக்கி.. சுஜி புரியாமல் விழிக்க..

அங்கு சென்று கழிவறை கதவை மூடி விட்டு, ’ அய்யோ .. என்ன செஞ்சேனு இந்த பி.எம்.. கூப்பிடுறான்.. என்னத்தை கேட்டு வைக்க போரறான் தெரியலையே… எதை சொல்லி சமாளிக்க.. அய்யனாரப்பா… நீ தான் இன்னைக்கு என் கிட்ட இருந்து அவன காப்பத்தனும்.. என் வாயை கொஞ்சம் அடக்கி வை.. எக்கு தப்பா பேசாம.. எதமா பதமா பேசி போட்டு வரணும்.. என்று அய்யனாரை தனக்கு துணைக்கு அழைத்து கொண்டு மற்றொரு அய்யனாரை நோக்கி சென்றாள்.

அவனோ லஞ்ச் டைம் ஆச்சு இன்னும் சௌமினியாய் காணாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அவன் அறையில்.. கதவு தட்டப்படும் ஓசையில் சட்டென்று நின்று, ஓடி சென்று தன் இருக்கையில் அமர்ந்து அதன் பிறகு உள்ளே வர அனுமதி கொடுத்தான்.. "கம் இன் " என்றவன் ..திரு திரு விழியுடன் உள்ளே நுழைந்த சௌமினியின் விழிகளில் தொலைய நினைத்த தன் விழிகளை கட்டு படுத்தி, கண்களாலேயே அவளை அமருமாறு சொல்லியவன், பின் இருக்கையில் சாய்ந்து ஒரு கையால் தன் தாடையை தேய்த்தவாறு அவளை ஆழ்ந்து பார்க்க.. ’ பேசி தொலையேன்டா… பக் பக்குனு இருக்குல’

அவளை கண்ட நொடி, நேற்று நடந்த விசயங்கள் மறக்க, இரவு எல்லாம் தான் புலம்பி தவித்தது மறக்க, அவள் கை கொடுக்க சென்றது மட்டுமே நினைவில் நின்று, அவனின் கோபத்தை மீட்டு, பொறுமை பறந்து. " அறிவில்லை உனக்கு.. எவன் கை நீட்டினாலும், பாய்ந்து போய் கையை கொடுத்திடுவியா… அவன பத்தி என்ன தெரியும் உனக்கு.. கூட வேலை செய்தால் போதுமா.. கை கொடுகிறாளாம் கை.. அவனும் அவன் முழியும்.. பார்வையிலே உன்னை பார்ட் பார்ட் ஆ பிச்சு தின்னுடுவான் போல.. என்னை மட்டும் பார்த்ததும் இழுத்து விட தெரிஞ்சது, மூட தெரிஞ்சுது.. அவன்கிட்ட .. 

" சார்…" என்று இடையிட்டு கத்தினாள்..

" ஏய்.. நான் வாயை சொன்னேன்… டி.. என்கிட்ட மட்டும் எகிரு.. யார் கிட்ட எப்படி பேசனும்..எவ்வளோ பேசனும் தெரியல… வந்துட்டா பெருசா.. இடியட்.. இடியட். என்று ஆரம்பித்தவன் அவள் காது வீங்க வீங்க பேசினான்.. 

முதல் பத்து நிமிடம் உட்கார்ந்து இருந்தவன், அடுத்த பத்து நிமிடம் இருக்கையில் இருந்து எழுந்து நின்று பேசினான்.. பின் இருக்கையில் கை ஊன்றி அவளை நோக்கி குனிந்து நின்று பேசினான்..

இதற்கு மேல பொறுக்க முடியாமல் அவன் வாயை சட்டென்று தன் கையால் மூடினாள். அவளின் ஸ்பரிசத்தில் பேச்சை நிறுத்தி அவன் அவளின் கண்களில் ஊடுருவி பார்க்க.. மெதுவாக கையை எடுத்தவள், " சர்.. பிளீஸ்.. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்.. ட்ரைனர் கிளாஸ் எடுத்தாலே என்னால் அரை மணி மேல ஒரு இடத்தில இருக்க முடியாது… " என்று பாவம் போல கெஞ்சியவளை பார்த்து மெல்ல தன் இருக்கையில் அமர்ந்தவன்.. " சரி.. போ.. அவன்கிட்ட… என்று திரும்ப ஆரம்பித்தான் 

தன் இரு கை கூப்பி கும்பிட்டு, " சர் நான் தேனிக்கார பொண்ணு.. அவ்வளோ சீக்கிரம் என்கிட்ட யாரும் வாலாட்ட முடியாது.. ஒட்ட நடுக்கிடுவேன்.. இவ்வளோ நேரம் நீங்க என்றதால தான் அமைதியா கேட்டுகிட்டு இருந்தேன்.. வேறு யாரும்னா... நான் பேசுற விதமே வேற மாதிரி தான் இருக்கும்.. ஊர் பக்கம் இருந்து வந்தாக்க ரொம்ப பயந்த சுபாவமா இருப்பேன் எல்லாம் நினைக்காதீங்க… முறத்தால புலி விரட்டுன தமிழச்சி நாங்க.. இந்த பூனை.. நரிகெல்லாம் பயப்பட மாட்டேன்.. நானே அவனை சமாளிச்சு இருப்பேன்.. அடுத்த முறை என்கிட்ட நெருங்க பயப்புடுற மாதிரி.. நீங்க வந்து ஹீரோ எண்டரி கொடுத்து கெடுத்திட்டீங்க… " என்று கூறியவளை பார்த்து அவன் தான் பேச்சின்றி சமைந்தான்.

அவனை பார்த்தவள், கண்ணிகளில் குறும்பு மின்ன, "வரேன் வி.பி சர்" என்று கூறி ஓடிவிட்டாள்.

அவளின் அந்த வி.பி யில் தான் அவனுக்கும் நியாபகம் வந்தது, ஏன் அவளை கூப்பிட்டோம் என்று .. சௌமினியை கூப்பிட்ட காரணம் வேறு.. ஆனால் அவன் பேசியதே வேறு.. "ச்சா… பேசியே நம்மை குழப்பிட்டா" என்று கையை மேஜையில் தட்டி கொண்டான்.

மதியம் சாப்பிட கூட வாரமல் எங்கே போனாள் என்று தேடி கொண்டிருந்த சுஜிக்கு அவளை வி.பி சர் கூப்பிட்டார் காலையில்.. அங்க தான் போய் இருப்பா என்று மற்றவர்கள் சொல்ல, இவளும் சாப்பிடாமல் அவளுக்காகவே காத்து இருந்தாள்.

சௌமினி சுஜியை பார்த்து, "சாரி.. சாரி டி.. அந்த பி.எம் கூப்பிட்டிடுச்சு டி.. வா வா.. சாப்பிடுகிற போது எல்லாம் சொல்லுகிறேன் "என்று அவளை இழுத்து கொண்டு சென்று, சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டே நடந்ததை கூறினாள். 

" நல்ல வேளை டி.. அவரு நீ வைச்ச பேரு பத்தி கேட்கலை… "

" ஏன்.. நீ போய் நியாபக படுத்திட்டு வாயேன்"

" அய்யய்யோ… அவர்கிட்டையா.. ஆளை விடு சாமி " என்று கூறி சிரித்து கொண்டே இருவரும் டிரெய்னிங் ஹாலை நோக்கி சென்றனர்.

மூன்று நாட்கள் விரைந்து சென்றது, இவர்களும் வேலைக்கு வருவதும்.. ஹாஸ்டல் சென்று வீட்டோடு பேசுவதும் ஹாஸ்டல் ப்ரெண்ட்ஸ் கூட அரட்டை என்று நன்றாக சென்றது. விஷ்ணுவையும் அவர்கள் பார்க்கவில்லை.

அன்று அவர்களுக்கு இதுவரை எடுத்த டிரெய்னிங் இல் இருந்து பரிட்சை வைக்க, அனைவரும் கோடிங் இல் மும்முரமாய் ..

இவளின் சிஸ்டமில் அவுபுட் வரமால் தகராறு செய்ய , இவள் அருகில் இருந்து மேற்பார்வை பார்த்து கொண்டிருந்த ஆதர்ஷிடம் சென்று புகார் அளித்தாள். ஆனால் அவனோ இப்போதைக்கு இதை சரி செய்ய இயலாது, அதனால் டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட் வந்து சரி செய்யும் வரை வேற ஒரு சிஸ்டமில் அமர்ந்து முடிக்க சொன்னான்.. வேற சிஸ்டம் இல்லாததால், ஹெட்டிடம் முறையிடுமாறு சொல்லி அவன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

 

ஹெட் கிட்டவா… என்று யோசித்தாள்..‘ நம்மை என்ன முழுங்கவா போறான் .’. என்று நினைத்து கொண்டு, அவனின் அறைக்கு சென்று கதவை தட்டி அனுமதி வாங்கினாள்.

உள்ளே அவன் அவனுடைய லப் டாப்பின் தலையை விட்டு கொண்டு இருக்க, சௌமினியை நிமிர்ந்து பார்க்காமல்.. கையை அசைத்து பேச சொல்ல, அவளும் தன் சிஸ்டம் பற்றி கூறி.. இப்போ பரிட்சை முடிக்க வேண்டும் என்று சொல்ல , நிமிர்ந்து அவளை பார்த்தவன்..தன் அறையில் இருந்த சிஸ்ட்டத்தை அவளிடம் காட்டி அதில் செய்யுமாறு கூறி விட்டு தன் லப் டாப்பில் மூழ்கி விட்டான்.

அவனின் எதிர் இருக்கையில் அமர்ந்து அவளும் தன் கோடிங் வேலையை தொடர்ந்தாள். தன் கோடிங் முடித்து அவுட் புட்டை சேவ் செய்து, அவர்களுக்கான தனி போல்டரில் போட்டு விட்டு எழுந்து அவனை பார்க்க.. அவன் இன்னும் அவனுடைய லப் டாப்பினுள் தான்.. " வி.பி சர்.. தாங்க் யூ.. " என்றுவிட்டு திரும்பியவள், அவளின் வி.பி யில் சட்டென்று நிமிர்ந்து அவளை சொடக்கு போட்டு அழைத்து , அவளை நோக்கி நடந்து சென்றான்.

'எதுக்கு இந்த பி.எம் என்னை நெருங்கி வருது' என்று குழம்பி போய் பார்க்க.. அவளிக்கு நேராக நின்று இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டு கொண்டு நிமிர்ந்து நின்றவனின் நெஞ்சு வரை மட்டுமே இருந்தாள் சௌமினி.

" ம்ம் அப்புறம்.. இந்த வி.பி னா என்ன மிஸ். சௌடாம்பிகை" என்றவனின் பேச்சில் அதிர்ந்து போய் அவனை பார்த்து, திக்கி திணறி… " உங்க பேரு உங்களுக்கே மறந்து போச்சா சர்…" என்று நக்கல் குரலில இழுத்தவளை…முறைத்து பார்க்க தன்னை கண்டு கொண்டான் என புரிந்து, எப்படி சமாளிக்க என்று யோசித்தாள்… 

அப்போது பார்த்து அவளுக்கு மண்டைக்குள் ஒன்றுமே மணியடிக்காமல் போக, அவளின் திரு திரு விழியில் இன்னும் அவளை நெருங்கி நின்று, " அப்போ என்னமோ சொன்னியே… வெள்ளை பன்னியா… ம்ம்ம்" என்றவனை பார்த்து… 'வசமா சிக்கிட்டோம்… சமாளி.. சமாளி.. டி.. சௌமி.. ' என்று தனக்குத்தானே தைரியம் கொடுத்து கொண்டு, நிமிடத்தில் யோசித்து , " சர், அது வெள்ளை பன்னி இல்லை.. வெரி ஃப்ன்னி சர்…" என்றாள்.

அவளை நம்பா பார்வை பார்த்தவனை.." சர் நிஜமா… அதை தான் சொன்னேன்.. உங்க காதுல வேற மாதிரி விழுந்திடிச்சு போல" என்று அப்பட்டமாக புளுகினாள். சரி.. அப்போ .. பி.எம் னா.. பிரைம் மினிஸ்டர் ஆ.. "

வசமா சிக்கிட்டியே டி சௌமி… இதுக்கு என்ன சொல்ல என்று யோசித்தவளின் மைண்ட் வாய்ஸ் கேட்ச் பிடித்தவன், " என்ன சொல்லாமுனு யோசிக்கிரியா" என்று சரியாக சொன்னவனை நிமிர்த்து வாயை பிளந்தடி பார்க்க… அந்நேரம் யாரோ கதவை திறக்க தள்ள, கதவு விஷ்ணுவை தள்ள, , பிளந்த வாயை திறந்த படி நின்றுயிருந்த சௌமினியின் தேன் சிந்தும் இதழில் தஞ்சம் அடைந்தது வலிய விஷ்ணுவின் இதழ்கள்.. இதழுக்குள் இதழ்… ஸ்பரிசம் மட்டுமே இதுவரை உணர்ந்த அந்த வன் இதழ்களுக்கு இப்போது மென் இதழ்களின் தேன் சுவை உணர.. விடுபட மனமில்லாமல் சிக்குண்டு இருந்தது வண்டென…

இருவரின் சுவாசத்தின் வாசம் பழகிய ஸ்பரிசத்தின் மின்னல்.. இதழ் வழி உயிரை உயிரோடு கோர்க்க.. மகரந்த சேர்க்கை..

இவர்களின் இந்த இதழ் தீண்டலில் க்யூபிட்டே வெட்கம் கொண்டு தன் கண்களை மூடி கொண்டது…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top