ஆழி 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

3

இதழ்கள் சங்கமத்தில் சுற்று சூழல் மறந்த நிலையில் இருவரும் இருக்க, சௌமினியின் ஃபோன் அலறலில், சுய உணர்வு வந்த விஷ்ணு அவளை பிரித்து , இடையில் கையிட்டு, தூக்கி அருகில் நிறுத்தி விட்டு, அவளை பார்க்க, அவளோ இந்த உலகத்திலே இல்லை.

கனவுக்கே அலறி ஊரை கூட்டிய பெண் அவள், இப்போது நிஜத்தில் நடந்தவுடன் அதிர்ச்சியில் ஒன்றும் பேச நா எழவில்லை... முதலில் அவளை திட்ட வாயெடுத்தவன், அவளின் முக அதிர்ச்சியை பார்த்து, அவளை உலுக்க , மெல்ல நினைவு வந்தவள் அவனை பார்க்க சங்கோஜம் கொண்டு தலை கவிழ, கண்களிலோ கண்ணீர் ஊற்று..

அவளை திட்ட வந்தவன், அவளின் அழுகையில் இன்னும் கோபம் ஏற, "ஸ்டாப் யுவர் ரப்பீஷ் கிரெய்" என்று கர்ஜித்தான்.. சட்டென்று கையால் வாய் பொத்தி மலங்க மலங்க நின்றவளின் தோற்றம் சிறு குழந்தை தவறு செய்து விட்டு தந்தையின் கோபத்திற்கு மிரளுமே அதனை ஒத்து இருந்தது.. அவனின் மனதை அது எதுவோ செய்ய சற்று இறங்கிய குரலில், " இட்ஸ் ஜஸ்ட் அ ஆக்சிடெண்ட் புரியுதா.. நீ ஏதாவுது கற்பனை பண்ணிக்கிட்டு சுத்தாத" என்றான் அழுத்தமாக..

அவளுடைய ஹேன்ட் பாக் எடுக்க சென்றவள் இன்னும் வரமாலும், ஃபோன் செய்தால் எடுக்காமலும் இருந்தவளை என்னாச்சு என்று பார்க்க வந்தான் அவளின் அண்ணன் ரிஷி தன் சித்தப்பாவுடன். வந்தவன் பார்த்ததோ… விஷ்ணு ஏதோ சொல்லி கொண்டு இருக்க, தன் தங்கை வாய் மூடி கண்கள் கலங்கி நிற்பதை தான்.. சொல்லவும் வேண்டுமா என்ன…பாய்ந்து விட்டான் தங்கையை நோக்கி..

தங்கை அருகே நின்று கொண்டு," என்னாச்சு டா சௌமி "என விஷ்ணுவை முறைத்து கொண்டே கேட்க, சட்டென்று சுதாரித்த சௌமினி, "ஒன்னும் இல்லை ணா.. படியில் இறங்கும்போது விழுக்கி விழ பார்த்தேன்… சார் தான் நான் விழாம பிடிச்சார்" என்று விஷ்ணுவை காட்டி கூற, அதில் பதறிப்போய் முழுவதும் அவளை ஆராய்ந்து பார்த்தான். ஒன்றும் அடியில்லை என்றவுடன் தான் ஆசுவாசமானர்கள் அண்ணனும் அப்பாவும்.. விஷ்ணுவின் பார்வையோ சௌமினியை துளைத்தது 'நீ விழ மட்டும் தான் செய்தாயா' என்ற கேள்வி அதில்…

ஆனால் சூழ்நிலை கருதி அவனும் 'ஆமாம் கொஞ்சம் பயந்துட்டாங்க போல… பார்த்துக்கோங்க" என்று விட்டு விடுவிடுவென்று மாடி ஏறி தன் ஆபீஸ் நோக்கி சென்று விட்டான்.

முழு விவரம் அறியாத அவளின் தந்தையோ, "தம்பி ரொம்ப நல்ல மாதிரி"… அந்த தங்க கம்பி செய்த செயல் தெரியாது பாராட்டு பத்திரம் வேறு ..

" ஒன்னுமில்லை டா " என்று ஆறுதல் அளித்து, அவளை அழைத்து சென்று அவளின் ஹேன்ட் பாக் எடுத்து கொண்டு, இன்டர்வியூ நடக்கும் ஹால் சென்றனர்..

இன்டர்வியூக்கு வந்ததில் இருந்து எல்லோரும் இவர்களை விநோதமாக பார்க்க, ஆனால் இதை எதையும் அந்த பாசக்கார குடும்பம் கண்டுகொள்ளவில்லை. தாங்கள் உண்டு, தங்கள் விசாரிப்பு உண்டு என்று எவரையும் பொருத்தப்படுத்தவுமில்லை..

இவர்களால் நொந்து நூடுல்ஸ் ஆனது, வரவேற்பு பெண்கள் இருவரும் தான்.. முதன் முறையாக இந்த வேலைக்கு வந்தது பற்றி மிக மிக வருந்தினார்கள் என்றால் அது குறைவே.. 

மூன்று நிலை இன்டர்வியூ அது. முதல் கட்ட ஹெச்.ஆர் இன்டராக்சனுக்காக சென்ற சௌமினி சுஜியுடன், இவர்களும் போக எத்தனிக்க, அவர்களை தடுத்து, புரியவைத்து, அமர வைக்கறதுக்குள் பெரும் பாடு பட்டனர்.. ஏதோ இரண்டாவது எழுத்து தேர்வில் மட்டும், பெரிய மனது கொண்டு அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள் சௌமினி குடும்பத்தினர்..

ஹெய்ச் ஆர், மற்றும் எழுத்து தேர்வு முடிந்து, அடுத்து குரூப் டிஸ்கஷன் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு என்று அறிவித்து விட்டனர். இரண்டு நிலை கடந்து விட்டனர் வெற்றிகரமாக… சேட்டைகள் பல செய்தாலும் படிப்பில் கெட்டி சௌமினி.. சுஜி முட்டி மோதி சௌமினியோடு தொத்தி கொள்வாள். இல்லையென்றால் அவளை வீட்டில் வைத்து விடுவார்கள் என்ற பயம்.

"அப்பா.. இங்கன சாப்பாடு அவ்வளவுக்கா சரியில்லை.. நாம வெளியில் போய் சாப்பிட்டு போட்டு வந்துடுவோம்..." என்றான் ரிஷி, முதல் ஆளாக சுஜி கிளம்ப, அவளை கை பிடித்து தடுத்த சௌமினி "ம்ம்.. கண்ட்ரோல்.. கண்ட்ரோல்.." என்றாள்

எல்லோரும் கிளம்ப, வரவேற்பு பெண்களில் ஒருத்தி, " சர், இன்டர்வியூ முடியாம.. வெளியில் போக அனுமதி இல்லை சர்.. இவங்களுக்கு இங்க சாப்பாடு ஏற்பாடு செய்து இருக்காங்க" என்றாள் ஆங்கிலம் கலக்காமல், பின்னே அனுபவம் அப்படி அவர்களிடம்..

" என்னது.. பிள்ளைகள தனியா விட்டுபுட்டு நாம போய் சாப்புடுறதா.. நீங்க போங்க.. நான் இங்கனவே இருக்கேன்" நரசிம்மர் தொடங்க.. நீ போ.. நான் இருக்கேன்.. என்று ஒருவரை ஒருவர் சாடி கொண்டு இருக்க.. வரவேற்பு பெண்ணோ, " மீ பாவம்.. போதும் வலிக்குது.. விட்டுடுங்க யா" என்றாள் மைண்ட் வாய்ஸில் ..

இவர்கள் அடங்க மாட்டார்கள் என்று சௌமினியே களத்தில் குதித்து, வழக்கம் போல பெரியப்பாவிடம் கெஞ்சி கொஞ்சி அவர்களை சாப்பிட அனுப்பி வைத்து, அப்பாடா என்ற பெரு மூச்சி யை இழுத்து விட.. அவளுக்கு இணையாக இன்னொன்றும் வர திரும்பி பார்க்க.. அதே வரவேற்பு பெண் தான்..

" டி.. சௌமி.. நான் தேறிடுவேணா டி.. பக் பக் பக் னு இருக்குடி.." 

கேண்டீனில் உட்கார்ந்து கொண்டு சாப்பாட்டை ஒரு பிடிப்பிடித்து கொண்டு இருந்தவளிடம் கேட்க, அவளோ "ஏண்டி நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டியா… அது எல்லாம் தேறிடுவ தேறிடுவ… ரொம்ப பீல் பண்ணாத உடம்புக்கு ஆகாது…."

" குரூப் டிஸ்கஷன் ல மேனேஜர்.. சீனியர் மேனேஜர் எல்லாம் இருப்பங்களாம் டி.. அப்புறம் அதுல செலக்ட் ஆகுறவங்கள.. அவங்க தனியா ஒரு இன்டர்வியூ வைச்சு, அப்பொய்ன்ட்மெண்ட் பண்ணுவாங்கலாம்.."

"இவ்வளோ இன்பர்மேஷன் எங்கன டி.. கலெக்ட் பண்ணுணவ"

இல்லாத காலரை சுடிதாரில் தூக்கி விட்டுக்கொண்டு " ஆல் இன்பர்மேஷன் ஐ நோ.. பேசி கொண்டே இருந்தவள், சட்டென்று பேச்சை நிறுத்தி, சௌமினின் கையை சுரண்ட.. " என்ன டி"

"சௌமி அங்கன பாரு, அவன் எவ்வளோ உயரம் டி.. செம ஸ்மார்ட் வேற .. ஏண்டி.. உன் கனவுல வந்தவன் இவன் உயரத்துக்கு இருப்பானா…?"

முதலில் அலட்சியமாக கேட்டு கொண்டு இருந்தவள் உயரம் என்றதும், சடாரென்று திரும்பி பார்க்க, அவளை ஏமாற்றாமல் அவளின் கனவு நாயகன் விஷ்ணு தான் தன் சக மேனஜர்களுடன் பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தான்.. 

’இவன் இங்கன தான் வேலை பார்க்கிறானா…. அச்சோ எப்படி அவன் முகத்தில முழிக்க நானு, என்று அஞ்சியவள், எவ்வளோ பேரு வேலை பாக்குறாங்க.. அவனை என்ன அடிக்கடி பார்க்க போகிறோமா என்ன.. ,’ என்று மைண்ட் வாய்ஸ் ஓட.. சுஜியின் பேச்சை முழுதாக காதில் வாங்கவில்லை சௌமினி..

அவனின் பின்புறத்தையே பார்த்து கொண்டிருந்தாள். ஏதோ தோன்ற விஷ்ணு திரும்பி பார்க்க, சுஜியின் தோள் வளைவில் முகத்தை மறைத்து கொண்டாள். குரூப் டிஸ்கஷனுக்கு அழைப்பு வர, கான்ஃப்ரென்ஸ் ஹாலுக்குள் நுழைந்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.. 

முன்னிலையில் நான்கு நாற்காலிகள் இருக்க அதனை சுற்றி ப வடிவில் மற்ற நாற்காலிகள் அமைத்து இருந்தனர், விஷ்ணு, சீனியர் மேனேஜர் ரகுராம், மற்ற இரு மேனேஜர்கள் என நால்வரும் அமர்ந்ததும் தொடங்கியது குரூப் டிஸ்கஷன்..

சௌமினிக்கு பயங்கர அதிர்ச்சி, முதலில் அவன் ஏதோ வேலை பார்ப்பான் என்று நினைத்து இருக்க, அவனோ மேலதிகாரி .. அதற்கு மேல் இவனை வைத்து கொண்டு எப்படி பேச.. என அவள் சிந்தித்து கொண்டு இருந்தாள், அங்கோ டிஸ்கஷன் போய் கொண்டு இருந்தது, சுஜியின் அழுத்தமான கிள்ளலில் அவள் நினைவுக்கு எண்டு கார்ட் போட்டு , டஸ்கஷனில் இணைந்தாள்.

சௌமினிக்கும் சுஜிக்கும் இறுதி கட்ட நேரடி இன்டர்வியூ மட்டுமே மீதம் இருந்தது. அதற்குள் அவர்கள் வீட்டு ஆட்களும் வந்து இருக்க, தாங்கள் இன்டர்வியூவின் இறுதி நிலைக்கு தேர்வாகி விட்டோம் என்று உரைத்து சந்தோச பட்டனர்.

இறுதி நேர்முகத் தேர்வை ரகுராம் , விஷ்ணு தான் நடத்தினார்கள்.. இவள் முறை வந்ததும், கொஞ்சம் நடுக்கத்துடன் தான் சென்றாள். அங்கே விஷ்ணுவை பார்த்து இதயம் டிரம்ஸ் வாசிக்க, கால்களோ கதகளி ஆடியது, ஒருவழியாக சமாளித்து, இருவரையும் வணங்கி விட்டு நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

ஏற்கனவே எழுத்து தேர்வு.. குழு தேர்தலில் இவள் நன்றாக செய்து இருக்க, பெரிதாக விஷ்ணு ஒன்றும் கேட்கவில்லை அவள் மனதறிந்து… அவள் தான் இவன் பக்கமே திரும்பவில்லையே.. ரகுராம் மட்டுமே அங்கு உள்ளதாக எண்ணி அவரையே பார்த்து பதில் அளிக்க.. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன், தன் பக்கம் அவளை திருப்ப, கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தான்.. ஏனிந்த பொறாமை உணர்வு என்று அவன் ஆராயவில்லை.. அவள் பாரா முகம் அவனை தவிர்க்க என்று நினைத்து தான் கேட்க ஆரம்பித்தான்.. முதலில் தயங்கினாலும் அவளும் தெளிவாக அவனின் கணைகளை எதிர் கொண்டாள். ரகுராம், "வி.பி. போதும்.. கேள்வியை அடுத்தவர்களுக்கும் கொஞ்சம் மீதம் வைச்சிகோ பா.. " என்றதும் தான் விட்டான் அவளை.

சிங்கத்திடம் இருந்து தப்பித்த சிறு மானாய் சௌமினி.. அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் அவளுக்கு கொடுத்ததும், முதலில் தன் பெரியப்பாவிடம் தான் கொடுத்து ஆசி பெற்றாள், " அப்பூ.. என்ற ஒற்றை அழைப்பில் அவரும் உருகி கரைந்து தான் போனார். மகளதிகாரத்தில் தாயை விட தந்தையின் அன்பு ஒரு படி மேல் தான் என்றும்..

இவ்வளவு நேரம் ரணகளத்துடன், ஆர்பாட்டமாய் இருந்த அந்த குடும்பம் இப்போது நெகிழ்ச்சியான அன்பில்.. கிராம மக்களின் கலப்பட மற்ற அன்பு தனித்துவம் தான் என்று அந்த குடும்பம் பறை சாற்றி கொண்டு இருந்தது..

ஒருவழியாக எல்லோரும் ஆம்னியில் ஐக்கியமாக, அடுத்த கட்ட பஞ்சாயத்து ஆரம்பமானது, நாளை மறுநாள் காலையில் சௌமினி சுஜி வேலையில் சேர வேண்டும்.. இன்று இரவு தங்கி நாளை அவர்களுக்கு ஹாஸ்டல் பார்த்து சேர்த்து விட்டுட்டு பிறகு தேவையான பொருட்கள வாங்கி கொடுத்து விட்டு செல்வது என்று முடிவானது.

இப்போ பஞ்சாயத்து, எங்கே தங்குவது என்று தான், ஒருத்தர் ஹோட்டல் என்றால், மற்றொருவர் நண்பன் வீடு, இன்னொருவர் சொந்தக்காரர் வீடு, அதிலும் எந்த சொந்தக்காரன் வீட்டுக்கு போக.. இவன் வீட்டுக்கு சென்றால், அவன் கோபிப்பான், அவன் வீட்டுக்கு சென்றால் இவன் கோபிப்பான் என்று… நரசிம்மரை வழக்கம் போல நாட்டாமையாக வைத்து ஓடிக்கொண்டு இருந்தது.

அப்போது தரணியிடம் இருந்து போன் வர, இவர்கள் சத்தத்தில் காதில் விழவில்லை சௌமினிக்கு.. ஆம்னியை விட்டு வெளியே வந்தவள், அண்ணனிடம் ஃபோன் பேசி கொண்டே சற்று இருட்டு பகுதிக்கு வந்து விட்டாள், கை நழுவி ஃபோன் கீழே விழுந்து விட, துழாவி துழாவி தேடி கொண்டிருந்தாள்.

விஷ்ணு வேலை முடிந்து வழக்கம் போல படியில் நடந்து வந்து கொண்டிருந்தவன், ஃபோனில் பீப் சத்தம் வர, அதை பார்த்து கொண்டே வந்தவன் வழக்கம் போல அவன் கார் பார்க்கிங் பக்கம் வர அங்கு நின்று கொண்டிருந்த ஆம்னியை பார்த்து தான், தன் கார் வேறு இடத்தில் நிற்பது நியாபகம் வந்து அங்கு சென்றான். 

அந்த பகுதி லைட் பியூஸ் போகி இருளில் இருக்க, மேலே வந்து மோதிய செக்யூரிட்டி கையில் இருந்த அழுக்கு கூடையின் அழுக்குகள் அவன் மீது சிறிது கொட்டி விட்டது. மன்னிப்பு கேட்டவரை, சிறு தலையசைப்புடன் போக சொல்லிவிட்டான். கொஞ்சம் தள்ளி சென்று நின்று குனிந்து சட்டையில் இருந்தவற்றை ஊதி கைகளால் தள்ளிவிட்டான். 

சட்டையில் இன்னும் சற்று கீழே அழுக்கு இருப்பது போல தோன்ற கொஞ்சம் தன் உதட்டை குவித்து, மூச்சை உள்ளிழுத்து, வேகமாக கீழ் நோக்கி ஊதியவனின் உதடு சேர்ந்த இடமோ , சிதறிய போனை தேடி கண்டு பிடித்து "அய்யனாரப்பா கிடைச்சிடிச்சி" என மேல் நோக்கி கூவிக்கொண்டே எழுந்த வெண் பஞ்சு உதடுகளில் தான்.. இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே பதிந்தது அவனுதடுகள்… 

"அடேய்.. என்னடா நடக்குது இங்க?.. இது என் பிளானிங்லே இல்லையே டா… " என்ற தன் விழி விரிய அதிர்ச்சியாய் அலறியது .. வேற யாரு.. கியூபி

ட்டே தான் ….


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top