ஆழி 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

2

 

முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கும் தேனி மாவட்டம்.. எப்பொழுதும் பச்சை பசெல் என்று இருக்கும் வயல்வெளிகள்.. வயல்வெளிகளில் சுற்றி திரியும் நண்டு, பூச்சிகளை உண்ண வரும் நாரைகள், கொக்குகள் நீர் கோழி என இயற்கை உயிர்ப்போடு இருக்கும் பகுதி போடிநாயக்கனூர்…

அவ்வூர் மக்கள் பாசத்திலும் வீரத்திலும் பேர் போனவர்கள். இன்றும் பல இடங்களில் காதல் என்றால் கடா மீசையை முறுக்கி விட்டு, வீச்சு அருவாளை தேடும் ஆட்கள் தான் அதிகம். அதிலும் அவ்வூரில் அதற்கு பேர் போன குடும்பம் ராசைய்யா குடும்பம்.. அவரின் இரண்டு மகன்களான நரசிம்ம மூர்த்தி, வல்லப மூர்த்தி அதுக்கு விதிவிலக்கு அல்ல.. அப்பா எள் என்றால் எண்ணெயாய் இருக்கும் தவ புதல்வர்கள்.. இவர்களுக்கு பிறந்தவர்களோ இன்னும் ஒரு படி மேலே போய் கட்டிட்டு வா என்றால் ஆளையே வெட்டிட்டு வர ரகம்.. தரணீஸ்வர், ரிஷிவேஸ்வர், சிவனேஸ்வர், அருணேஸ்வர்.. என்ற இந்த ஈஸ்வர் சகோதரர்கள் தான் தற்போதைய வாரிசுகள்..

மூன்று தலைமுறையாக பெண் குழந்தை இல்லாத வீடு, பெண்ணால் சாபம் பெற்ற வீடு என்ற நம்பிக்கை அவ்வூரில் உண்டு.. ராசைய்யா குடும்பத்திலும் அவ்வாறே வெறும் ஆண் வாரிசாக போக, இவர்கள் செய்த பாவம் தான் என்ற ஊர் மக்களின் பேச்சு காரணமாக கோவில் கோவிலாக சென்ற நேர்த்தி கடனின் வரமாக வல்லபமூர்த்திக்கு மூன்றாம் வாரிசாக அக்குடும்பத்தில் பிறந்தவள் தான் சௌடாம்பிகை அலைஸ் சௌமினி.. பெண் பிறந்தவுடன் அவர்கள் பெண் குல தெய்வ பெயரை சூட்ட, இவள் தான் இஷ்டப்படி அதை மாற்றி கொண்டாள். இம்சை அரசி, ராட்சசி, என்றெல்லம் அவ்வீட்டு இளைய வாரிசுகள் மூத்த இரு அண்ணன்களான தரணி , சிவாவின் பிள்ளைகள் வைத்த பெயர்.. அவர்களுக்கும் ஆண் வாரிசு தான்.. ஒட்டு மொத்த வீட்டுக்கும் அவளே பெண் வாரிசு.. அரசி... 

ஏகபோக செல்லம் அப்பாமார்களிடம், சலிக்காத வசவு அம்மாமார்களிடம், பொறாமை கலந்த பேச்சு அண்ணிமார்களிடன், பாசமலர் பார்ட் 2, 3 எடுக்கும் அளவுக்கு பாசக்கார அண்ணன்கள் ஈஸ்வர்ஸ் பிரதர்ஸ்… இப்படி சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெண் நடு இரவில் அலறுகிறாள் என்றால்… 

சௌமினியின் அலறலில் அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒட்டு மொத்த குடும்பமும் அவளின் அறையில்.. மூட்டு வலியில் அவதிப்படும் அப்பத்தாவில் இருந்து, அந்த வீட்டு நண்டு சிண்டு வரை அனைவரும் ஆஜர்.. 

" கண்ணு என்னாச்சு.. " பெரியப்பா நரசிம்மர்.

"எதுவும் பூச்சி கடிச்சிடிச்சா" தந்தை வல்லபர்.

"ஏண்டி.. ஏழு கழுதை வயசு ஆகுது.. இப்படியா கத்தி ஊர கூட்டிவ" அன்னை சரஸ்வதி.

" ஏன் சரசு புள்ளையா வசுவுறவ, என்னாச்சு ஆத்தா" பெரியம்மா மல்லிகா.

பெரியவர்கள் விசாரித்துக்கொண்டு இருக்க, அண்ணன்கள் ஒருவன் அவளை அணைத்து தலையை வருட, மற்றொருவன் நடுங்கும் அவள் கைகளை பற்றி கொள்ள, அடுத்தவனோ " எல்லோரும் கொஞ்சம் பேசாம இருக்கீகளா.. பிள்ளையே ஏதோ பார்த்து பயந்து போய் இருக்கு.. சௌமி கண்ணு என்ன டா ஆச்சு…"

கனவின் வீரியம் சற்றும் குறையாத, நடுங்கும் கைகளை அண்ணனுடன் பற்றி கொள்ள.. திக்கி திணறி, " யாரோ… என்ன.. என்ன.. கட்டி.. கட்டிபுடிச்ச்…." என்று அவள் முடிக்கும் முன் ஈஸ்வர் பிரதர்ஸ் கையிலியை மடித்து கட்டி கொண்டு, " டேய்.. ரிஷி.. சிவ..அருணு.. எடுங்கடே அந்த அருவாளை.. எவன் அவன் .. என் தங்கச்சி மேல கையை வைச்ச எடுபட்ட பய... " மூத்தவன் எகிற, அதற்குள் அவள் ரூமை சல்லடை போட்டு சலித்து விட்டனர் மற்றவர்கள்… ஒருவனும் இல்லை .. இருந்தால் அல்லவா கிடைப்பதற்கு…

" அடே தரணி.. மொத அவன் கையை வெட்டி.. நம்ம ஊரு முக்கில தொங்க விடனும் டே"

" டேய் அண்ணா சிவா.. இரண்டும் கையும் டா"

கடை குட்டி அருணோ " எண்டே அறிவு இருக்கா உங்களுக்கு.. நீங்க எல்லாம் அண்ணன்களா டே… அவன் தலையை வெட்டனும் டே" என்க.

"சரி டே. …" என்று மறவர்களும் தலையை ஆட்ட.. அதற்குள் நரசிம்மர் அவர்களை அடக்கி, " கண்ணும் இங்கன யாரும் இல்ல ஆத்தா… ஆரும் வந்தானுவளா என்ன " என விசாரிக்க.. " இல்ல பெரியப்பா …அது வந்து கனவுல… தான் வந்தாக"

அண்ணிமார்களோ தூக்கத்தை கெடுத்து விட்டாள் என்று முணகியவாறு அவளை திட்டி கொண்டே செல்ல, சரசு ஒரு படி மேலே போய், அவள் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்து, " சமஞ்ச புள்ளையா, வீட்டுல இருக்காம சுத்தி கிட்டு திரிஞ்சா இப்படிதேன் கனவு வரும், " 

" சரசு, புள்ள மேல கை வைச்ச, இந்த வயசுல நீ உன் ஆத்தா வீட்டுக்கு பொட்டிய கட்டணும் , ஜாக்கிரதை " என்று வல்லபர் கொந்தளிக்க ஆரம்பித்தார்.. " அதிசிய்ய… பொண்ணு வைச்சு இருக்காக" என தடையை தோளில் இடித்தவாறு புலம்பினார்.

" ஆமா, ஆத்தா.. அதிசயம் தான்.. மூணு வம்சம் கழிச்சு.. இப்போ தான் அந்த சௌடாம்பிகை கருணை வச்சு குடுத்து இருக்கா, அதனால் வார்த்தய அளந்து பேசு சொல்லிப்புட்டேன்" என அதுவரை அமைதியாக இருந்த சொர்ணாம்பாள் மாமியாராக அதட்ட, " விடு ஆத்தா , என்று மீண்டும் நரசிம்மர் சமரசம் செய்தது வைத்து அனைவரையும் தூங்க அனுப்பினார்.

ஆனால் அப்பத்தா போகாமல், என் பேத்தி கூட நானே துணைக்கு இருக்கேன் என்று பேத்தி அருகில் படுத்து கொண்டார்.

"கட்டி புடிச்சான் சொன்னதுக்கே…. இவ்வளோ ஆட்டம் போடுறாக இந்த அண்ணன்கள்.. முத்தம் கொடுத்தான்.. அதுவும் உதட்டில் என்றால் … அச்சோ " போர்வை மூடி தூங்கி விட்டாள்.

" என்னடி சொல்லுற.. கிஸ் பண்ணிட்டானா .. அதுவும் உதட்டுலையா…" என்ற சுஜிதா , சௌமினியின் உயிர் தோழி, மாமன் மகள் கூட … ஒரே ஸ்கூல், ஒரே கல்லூரி , ஒரே டிபார்ட்மண்ட் இப்போ சுஜிக்கு அவளுடன் ஒரே வீட்டில் வாழ ஆசை, ஆமாங்க… காதல் என்றால் வீச்சு அருவாளை தூக்கும் அவளின் மூன்றாவது அண்ணன் ரிஷியை ஒரு தலையாக காதலிக்கிறாள்… 

"ஆமாம் டி.. நல்ல வேலை அண்ணன்ங்க கிட்ட சொல்லலை.. இல்ல அதுக்கும் ஏதுனா இன்னும் பிரச்சனை ஆரம்பிச்சு இருப்பாங்க.. இது தான் சாக்குனு எங்க அம்மா அந்த இன்டர்வியூ க்கு சென்னைக்கு அனுப்பாது…"

" என்னது.. சென்னைக்கு போறியா.. அதுவும் வேலைக்கு" என்று அதிர்ந்தவளை,

" ஷாக் குறைய.. ஷாக் குறைய… ஏண்டி.."

" என்கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா.. நான் ஏதுனா மறைச்சு இருக்கேனா உன்கிட்ட… உங்க அண்ணன நானு லவ் பண்றது வரை சொல்லி இருக்கேன் தானே"

" உன் எப்எம் ஐ ஆஃப் பண்ணுடி… நான் மட்டும் இல்லை.. நீயும் தான் வர.. இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணுறோம்.. வேலை பாக்குறோம்.. றோம்.. றோம்"

" என்னால முடியாது பா.. இங்கன இருந்தாலாவுது அவகள பார்க்கலாம்.. நீ அதுக்கும் வேட்டு வைக்குற"

" ஏய் செல்லகுட்டி.. நீயும் வரேன் சொன்னா தான்.. எங்க வீட்டுல விடுவாக டி.. ஒரே ஒரு வருசம் மட்டும் வேலை பார்த்திட்டு ஓடி வந்துடுவோம்.. டி.. "

"ஆத்தாடி.. ஒரு வருசமா… என்னால முடியாது"

" முடியாது.. முடியாதுல.. அப்போ நானும் எனக்கு வேற மூணாவுது அண்ணிய செலக்ட் பண்ணிக்கிறேன்.. நீ வேணாம் போடி.." என்று அவள் வீக் பாய்ண்டில் கை வைக்க… அவள் பாய்ந்து வந்து சௌமினியை கட்டி கொண்டு, 

"என்னடி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட… ஆத்தா.. மகமாயி… என் வாழ்க்கையில விளையாடாத ஆத்தா.. இப்போ என்ன ஒன் கூட வந்து அங்கன குப்ப கொட்டனும்.. வரேன்.. வந்து தொலைக்கிறேன்"

"எனக்கு ஒரே ஒரு டவுட் டி…"

"என்ன டி"

"ஆமா.. உன்னய கிஸ் பண்ண ஆள் எப்படி டி இருந்தான்"

"எதுக்கு டி .. உனக்கு "

"எல்லா ஒரு பொது அறிவு வளர்க்கத்தான்"

"உன்னைய பார்த்த … அப்படி தெரியலையே… "

"சொல்லுடி… பிளீஸ்…"

"யாரு அவன் முகத்த பார்த்தது… "

"என்னது பார்க்கலையா…"

"நீ என்னவோ கிஸ் வாங்குனவ மாதிரி பில்ட் அப் கொடுக்குற… அவனே பனை மரத்துல பாதி உயரம் இருந்தான்.. நான் அவன் நெஞ்சு வரை தான் இருந்தேன்"

" அதுல உனக்கு ரொம்ப வருத்தம் போல" என்ற சுஜியை அடிக்க சௌமினி கல்லை தேட, அந்த கேப் பில் அவள் சிட்டாய் பறந்து விட்டாள்.

தன் ரூமில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசித்து கொண்டு இருந்தாள் சௌமினி... வேற எதுக்கு.. இன்டர்வியூ செல்ல எ வீட்டில் எப்படி அனுமதி வாங்க தான்.. ஏதோ ஒரு தைரியத்தில் வேலைக்கு அப்ளே செய்து விட்டாள்.. "அப்பத்தா இருந்து கடை குட்டி வரை எல்லோரையும் எப்படி சமாளிச்சு … எப்படி போறது… அய்யனாரப்பா.. வேல மட்டும் கிடைச்சுதுனா.. மொத மாச சம்பளத்துல உனக்கு கிடா வெட்டு கன்பார்ம்.. " என்று அய்யனாரிடம் டீல் பேசி கொண்டு இருந்தாள்.

பெரியப்பா ரூம் சென்றவள், மெதுவாக பெரியப்பாவின் மடியில் படுத்தவாறு அவரின் கையை பிடித்து, சொடக்கு போட்டு கொண்டு இருந்தவளை அறியாதவரா அவர்..

" என்ன ஆத்தா.. பீடிகை எல்லாம் பலமா இருக்கு.. விசயம் பெருசோ.."

தலைய குனிந்தபடி, விழியை மட்டும் உயர்த்தி, பாவமாக முகத்தை வைத்து கொண்டு பார்த்தவள், "அப்பூ… (செல்லமாக அழைக்கும் போது) என் கூட படிச்ச புள்ளைகள் எல்லாம் பெங்களூரு.. பம்பாய்.. டெல்லினு வேலைக்கு போறாலுக.. நானும் அந்த சுஜியும் தான் இங்கனவே இருக்கோம்.. அவளும் ஏதோ சென்னைக்கு போறாலாம் வேலைக்கு.. நானும் போகட்டா அப்பூ.." என்று பிட்டை மாற்றி போட்டு, அவர் தாடையை பற்றி கொஞ்சி கேட்க, பாசத்தில் நெகிழ்ந்தாலும், வேலை.. சென்னை என்ற விசயம் அவரை யோசிக்க வைத்தது..

இவ்வளோ சோப் போட்டும் மசியலையே என்று யோசித்து " அப்பூ ஒரே ஒரு வருசம் தான்.. அப்புறம் இங்கனவே வந்துடுவேன்.. அப்புறம் நீங்க பாக்குற மாப்பிளை கட்டிகிட்டு , புள்ள குட்டிய பெத்து போட்டு கிடக்க வேண்டியது தான்" என்று பேசியவாறு பெரியப்பாவை நோட்டமிட்ட.. அவள் சொன்ன ஒரே ஒரு வருசம், நீங்க சொன்ன மாப்பிளை.. அவரை கொஞ்சம் கரைக்க .. சரி என்று அரை மனதாக ஒத்து கொண்டார்.

சாப்பிடும் வேளையில் அனைவரிடமும் அவர் அதை சொல்ல, "என்னது வேலைக்கா… வேலைக்கா…. என்று வித விதமான உச்சரிப்பில் சௌமினி நரசிம்மர் தவிர அனைவரும் கேட்டனர்.. அவளின் அண்ணன்களின் வாரிசான தன்வந்த்.. துஷ்யந்த்.. உட்பட.. நீங்களுமாடா…. என்று உள்ளுக்குள் நொந்து கொண்டாள் சௌமினி.

அவள் வேலைக்கு போக என்ன அவசியம் என்ற வல்லபர் தொடர... ஆளாளுக்கு பேசி கொண்டே செல்ல.. விழி பிதுங்கி நின்றாள் சௌமினி.. ஒருவழியாக நரசிம்மர் அனைவரையும் அமைதி காக்க சொல்லி ," இங்க பாருங்க.. ஒரு வருசம் தானே.. வெளி உலகமும் தெரிஞ்சு கிட்டுமே.. அப்புறம் கல்யாணம், புள்ள குட்டினு வந்தா.. என்னத்த தெரிஞ்சுக்க போகுது, கூடவே சுஜி புள்ள வேற போகுது.. அங்கன போய் எல்லாத்தையும் விசாரிச்சிட்டு, நல்ல ஹாஸ்டல் பார்த்து சேர்த்து விட்டுட்டு வாரேன்" என்று அவர் முடிக்கும் முன்., நானும் நானும் என்று அடுத்து கிளம்பியது ஒரு கூச்சல்..

ஒரு வழியாக..அப்பத்தா , தர்ஷினி, வாசவி (அண்ணிமார்கள்) பிள்ளைகள் வீட்டில் இருக்க சொல்லி, அவர்களுக்கு துணையாக தரணியும், அருணையும் இருக்க சொல்லிவிட்டு.. ரணகளத்துடன் கும்பலே கிளம்பியது சென்னைக்கு.. இன்டர்வியூக்காக….

முதலில், இன்டர்வியூ முடித்து கொண்டு வேலை கிடைத்தால், ஹாஸ்டல் பற்றி பார்க்கலாம் என்று ஏக மனதாக முடிவெடுத்து, அக்கம்பெனியின் பார்க்கிங் ஏரியாவில் நின்றது அவர்கள் வந்த அந்த ஆம்னி பஸ்.. பாசக்கார பயபுள்ளைகள்.. பஸ்ஸையே எடுத்து வந்து விட்டார்கள்.

வழக்கமாக நேரத்திற்கு வரும் விஷ்ணு அன்று சற்று தாமதமாக வர, அவன் கார் வைக்கும் இடத்தில் நின்ற ஆம்னி பஸ் பார்த்து , செக்யூரிட்டியிடம் விசாரித்தான்.

அவரோ இன்டர்வியூவில் வந்தவர்கள் என்ற சொன்னதும், பஸ்ஸில் வரும் அளவுக்கு எத்தனை பேர் என்று கேட்க.. " ஒரு பொண்ணுக்கு ஒரு ஊரே வந்து இருக்கு சர் " என்று அவர் சொன்ன பதிலில் அவனே ஆடி போனான்..

"என்னது… ஒரு பொண்ணுக்கா…" என்றவன், எவ அவ என்றவாறு, வழக்கம் போல படிகளில் ஏறினான். 

அடுத்த திருப்பத்தில் திரும்பியவனின் மேல், மேற்படியில் வழுக்கி, பிடிமானம் இல்லாமல் விழுந்தவளை இடையை பிடித்து தடுக்க முயல, அதுவே அவன் மீது அவள் சாய ஏதுவாக, பயத்தில் கண்ணை இறுக்க மூடி கொண்டு, அய்யனாரப்பா என்று கூற வந்தவள் சௌமினியே தான்.. வாய் கூறாமல் இருக்க, ஏன் என விழி திரிந்தவள் விழி விரிய பார்த்தாள்.. ஆம் இரண்டு நாள் முன் கண்ட கனவு, இப்போது அரங்கேறி கொண்டு இருந்தது. பெண்ணவள் சிவந்த இதழ்கள், ஆணின் வன் இதழ்களில் அடைக்கலம் ஆகி இருந்தது.. இருவரில் யார் அதிகமாக அதிர்ந்தார்களோ.. ஆண்டவனுக்கே… இல்லையில்லை கியூபிட்கே வெளிச்சம்… 

அவர்களை பார்த்து கையில் வைத்து இருந்த வில்லை ஆட்டி கொண்டே சிரித்தது…. க்யூபிட்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top