அசுரன் 11

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அசுரன் 11

ஆறு மாதம் சென்று இருந்த நிலையில் அதற்கடுத்து ராவண்னால் ஆருஷியை பார்க்க முடியவில்லை.

இவனும் இப்போதெல்லாம் வேலை வேலை என்று அதில் உள்ளே மூழ்கி இருந்தான். என்ன தான் அவ்வப்போது அம்மாவின் அறிவுரை அனலாக அவன் காதை கொதிக்க வைத்த போதும், பேசிப்பேசியே அன்னையை தாஜா செய்து விடுவான் இவன்.

“உங்க அப்பா உனக்கு தப்பா பேரு வச்சுட்டாரு ராவண்னு.. கிருஷ்ணானு வச்சிருக்கணும்” என்று செல்லமாக அலுத்து கொள்வார் அவர்.

அவனுக்கே புரிந்தது இந்த சில நாட்களாக மருத்துவமனை ஐவிஎஃப் பற்றிய ஆராய்ச்சி வேலை என்று அவனது வாழ்க்கை இரண்டு மூன்று அறைக்குள்ளேயே சுருங்கி இருந்தது. 

வெளியுலகை சுத்தமாக தொலைத்து இருந்தான். வெளிக்காற்றை எப்பொழுது சுவாசித்தான் என்றே தெரியவில்லை. 

ஊடகவியலா? அப்படி என்றால் என்ன? சமூகம் சுமூகமாக இருக்கிறதா? என்று‌ தெரியாமல் அவனிருக்க.. அவனுடன் வேலை பார்க்கும் நண்பர்களை சிலர் அவனை மாற சொல்லி அறிவுறுத்தினார்கள்.

 “ராவண் ஏதாவது கேம் கிளப்ல போய் சேர்ந்துக்கோ..” என்றான் ஒருவன்.

“உன்னையே இப்படி அடச்சி வெச்சி இருக்காத அதான் இந்த ப்ராசஸ் வெற்றியா முடிஞ்சுச்சிடுச்சே.. கண்டிப்பா இந்த டெஸ்ட் ட்யூப் பேபி நல்லபடியா சக்ஸஸ் ஆயிடும். உன்னோட ஒர்க் பெயலியராக சான்சே இல்லை” என்றதும் சிரித்துக்கொண்டான் ராவண்.

தன் வேலையை குறித்து பெரிதாக தற்பெருமை எல்லாம் அவனிடம் கிடையாது. ஆணவம் கொண்டு ஆடுவதும் கிடையாது..! ஈகோவில் தன்னை அழைத்துக் கொள்வதும் கிடையாது..! அனைத்திற்கும் மெலிதாக இதழ் பிரியா மில்லி மீட்டரில் ஒரு புன்னகை மட்டுமே அவனிடத்தில்.

அப்போதுதான் அவனுக்கு ஆருஷி அவள் ஸ்குவாஷ் கிளப்பில் இருப்பது ஞாபகத்திற்கு வர.. தன் அடர்ந்த தாடியை தேய்த்துக் கொண்டே அவன் கண்ணாடியில் தன்னை பார்த்து “என்ன ஆரம்பிக்கலாமா? ஆர் யூ இன்ட்ரஸ்ட் ராவண்?” கேட்டான்.

அவனது மனசாட்சியோ “ஓஹ் ரியலி? ஸ்குவாஷ் ஆர் ஆருஷி..!” என்று அவனுக்கு பதில் கேட்க.. சிரித்துக் கொண்டவன் அடுத்த இரண்டு நாளில் அந்த ஸ்குவாஷ் கிளப்பில் இருந்தான். 

“வாவ் என்ன டாக்டர் சார்.. அட்ரஸ் மாறி வந்துட்டீங்களா? இது ஹாஸ்பிடல் இல்ல ஸ்குவாஷ் கிளப்” என்று விழிகள் விரித்து கூறும் சிறு முகில் அவளை ரசித்து சிரித்தான் அவன்.

“ஸ்குவாஷ் கிளப்ல பாப்பாவுக்கு என்ன வேலை? ஒரு வேலை வேடிக்கை பார்க்க வந்தியோ?” என்று வேண்டுமென்றே அவளை அவன் வம்புக்கு இழுக்க..

“என்னது வேடிக்கை பார்க்க வந்தனா? நான் எங்க ஊர்ல ஸ்டேட் பிளேயர் தெரியுமா? இங்கே டச் விட்டு போயிடக்கூடாது அப்ப வந்துகிட்டு இருக்கேன்” என்று கெத்தாக கூறியவளை அவன் நம்பா பார்வை பார்க்க.. அதில் அவளுக்கு ரோஷம் தூண்டப்பட..

ஆருஷி ராவண்னின் சட்டையைப் பற்றி அவனை உள்ளே இழுத்தாள். அந்த மைதானத்தின் கதவை மூடி தாழிட்டாள். 

ச்ச்ச.. தப்பாக எடுக்காதிங்க டியர்ஸ்..

ஸ்குவாஷ் என்பது சுவர்ப்பந்து (Squash). ஒரு மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம். இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள். எதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு மேல் படுவதற்குள் எதிராளி பந்தை அடிக்க வேண்டும்.

அவன் கையில் ராக்கெட்டை திணித்தவள், ஸ்குவாஷ் ஆட்டத்தின் அடிப்படை விதிகளை சுருக்கமாக சொன்னாள். 

பின் ராவண்னை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, பந்தை தூக்கிப்போட்டு சர்வீஸ் செய்தாள். சுவற்றில் பட்ட பந்து, ராவண்னை நோக்கி எம்பி வர, “ம்ம்ம்.. அடிங்க டாக்டரே..!!!!” என்று கத்தினாள். 

ராவண் கையிலிருந்த ராக்கெட்டால் பந்தை திருப்பி அடித்தான். முதலில் அந்த ஆட்டம் அவனுக்கு பிடிப்பிடவில்லை ஆனால் போகப் போக லாவகமாகவே பந்தை கையாண்டான் மருத்துவன்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு இருவரும் குழந்தைகள் போல மாறிப் போயினர். சூழ்நிலை மறந்து குதுகலமாய் ஸ்குவாஷ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஆருஷிக்கு ஸ்குவாஷ் ஆடுவதே மிகவும் பிடித்தமான விஷயம். அதிலும் இப்போது ராவண்னுடன் சேர்ந்து ஆடுகிறோம் என்ற நினைவே அவளை உள்ளம் பூரிக்க செய்திருந்தன. சந்தோஷமும், உற்சாகமுமாய் விளையாடினாள். எப்படி ஆட வேண்டும் என்று ராவண்னிற்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டே, இங்கும் அங்கும் ஓடி ஓடி பந்தை அடித்தாள்.

“ராக்கெட்டை இப்படி புடிங்க.. இந்த ஆங்கிள்ல அடிங்க டாக்டரே..!!”

“நோ.. நோ.. இவ்வளோ ஸ்டிப்பா கையை வைச்சிக்காதிங்க.. கையை நல்லா ஃப்ரீயா விடுங்க.. இப்படி..!!” ஆசிரியராக மாறினாள்.

“எஸ்.. எஸ்.. அப்படி தான் கரெக்ட்..! சூப்பர் சூப்பர்” என்றவள சூப்பர் சூப்புராயனாக மாறி பறந்து பறந்து பந்தை அடித்தாள்.

“இன்னும் கொஞ்சம் ஃபாஸ்டா.. ஃபாஸ்ட்..!!” என்று உத்வேகப்படுத்தினாள்.

“அந்த லைன்ஸ்குள்ள தான் அடிக்கனும்னு சொன்னேன்ல..??” செல்லமாய் முறைத்தாள்.

“வுட் ஃப்ளோர்.. ஸ்லிப் ஆகும்.. கேர் ஃபுல்..!!” என்று எச்சரித்தாள்.

“வெரி வெல்..!! சூப்பர் சூப்பர்..” என்று குதூகலித்தாள்.

ராவண்னும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான். ஆருஷியுடன் இப்படி ஓடி ஓடி விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.. இத்தனை நாள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு பெண்ணவளின் வாசம் அவனுக்கு சுவாசத்தில் புத்துணர்வை தந்தது.

அவ்ளோ பெரிய மருத்துவமனையில் மிகப் பெரிய மருத்துவனாய் இருப்பவன் இப்படி தன்னிடம் வந்து கற்றுக் கொள்வது தன்னை நினைத்து பெருமிதமாக இருந்தது ஆருஷிக்கு. அதிலும் அவள் சொல்லிக் கொடுக்க கொடுக்க அவன் அப்படியே ஆடுவதை கண்டு அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்குமோ என்ற எண்ணம் எல்லாம் இல்லை. “பரவாலையே நல்ல கத்துக்குறாரே டாக்டர்” என்று ஆசிரியராக மாறி மாணவனாய் அவனை மெச்சினாள்.

இவனுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டே விளையாடுவதில் ஆருஷி கவனமாக இருக்க, இவனது கவனமோ அவளுடைய அழகை அருகிருந்து ரசிப்பதிலேயே லயித்திருந்தது. அவளின் அத்தனையுமே அழகாய் தோன்றியது ராவண்னின் கண்களுக்கு..!!

சர்வீஸ் போடுகையில் அந்த செர்ரி உதடுகளை கடித்துக் கொள்ளும் முத்து பற்கள்.. அவள் விழிகளில் தெரிகிற தீவிரம்.. நெற்றியில் முத்து முத்தாய் திரளும் வியர்வை துளிகள்.. அந்த துளிகளை துடைத்து சுண்டுகிற சுட்டு விரல்.. சில சமயம் அந்த வேர்வை துளிகள் கழுத்தை தாண்டி இறங்கும் மார்பு சரிவு.. பந்தை அடிக்க விரையும்போது அதிர்கிற அவளது ஆடுதசைகள்.. அசைகிற காது வளையங்கள்.. குலுங்குகிற அவளது கனிகள்..!! புஜத்தை உயர்த்தையில் காணக்கிடைக்கும் அக்குள் ஈரம்.. இளமஞ்சள் நிற இடுப்புக்குழைவு..!! இருவரும் குறுக்கே ஓடிக்கொள்கையில் இவன் நாசியில் சுருக்கென்று ஏறும் அவளது மேனி வாசனை.. முகத்தை கீறி செல்லும் அவளது கூந்தல் நுனிகள்..!!

“ஸ்ஸ்ப்பப்பா..! என்ன பொண்ணு டா இவ? இப்படி என்னை படுத்துகிறாளே..! அழகால கொல்லுகிறாளே..! பொல்லா ராட்சசி..!”

ராவண் தடுமாறிப் போயிருந்தான். ஆருஷி சொல்கிற இன்ஸ்ட்ரக்ஷன்கள் கூட இப்போது அவனுடைய காதில் விழ மறுத்தன. ஆருஷியின் அழகு ராவண்னின் மூளையில் ஒரு போதையை கிளப்பி விட்டிருந்தது.. அந்த போதையுடன் தான் அங்குமிங்கும் ஓடிச்சென்று பந்தை அடித்துக் கொண்டிருந்தான்..!! அவன் தண்ணீரில் எல்லாம் இல்லவே இல்லை..! குருட்டாம்போக்கில் ஏதோ ஒரு சப் கான்ஷியஸ் மைண்டில் தான் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது முழு கான்ஷியஸூம் தான் அவள் ஆக்கிரமித்து இருந்தாளே.. பாதகத்தி..!

அந்த போதை ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைய.. அவளை இழுத்து பிடித்து இறுக்கி அணைத்து இதழை ரசித்து ருசிக்க வேண்டும் என்று பேர் அவா தோன்றியது அவனுக்கு. உடலும் உள்ளமும் பரபரக்க அதை செயல்படுத்தவே துணிந்து விட்டான் டாக்டர் ஹார்மோன்களை சதிராட்டத்தில்..!

பந்தை அடிப்பதற்காக தன்னை க்ராஸ் செய்து ஓடிய ஆருஷியை.. அப்படியே வளைத்துப் பிடித்தான்.. அவளது இடுப்பை பற்றி தன்பக்கமாய் இழுத்தான்..!! 

ஆருஷி எதிர்பாராத பிடிக்குள் சிக்கி, ‘ஆஆஆவ்வ்வ்வ்’ என்று சப்தமெழுப்பியவாறு அவன் கையோடு சென்றாள்.. பந்தையடிக்க சென்றவள் தனது மார்புப்பந்துகள் அவன் நெஞ்சில் சென்று மெத்தென்று அழுந்த நின்றாள்..!!

ஆருஷி‌ அதை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியில் அவளுடைய விழிகள் அகலமாய் திறந்து கொண்டன. உதடுகள் ‘ஓ’வென பிளந்து கொண்டன. ராவண்னின் முகத்தையே திகைப்பாய் பார்த்தாள். 

ஏற்கனவே அவளை இதழ் முத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பில் இருந்தவனுக்கோ இப்பொழுது ஓவென பிளந்து அவள் செர்ரி இதழ்களை ருசி பார்க்க துடியாய் துடித்தன அவனது முரட்டு இதழ்கள்.

ராவண் இன்னும் பித்தம் தெளியாதவனாகவே காட்சியளித்தான். அவளின் அருகில் அழகில் இன்னும் கிறங்கியிருந்தான்..!

ஆருஷியின் பிறைமுகத்தை கண்ணுக்கு நெருக்கமாய் கண்டதில், வேறெதுவும் செய்யத் தோன்றாதவனாய், அவளையே விழுங்கிவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இருவருக்குமே அந்த நெருக்கம் பிடித்திருந்தது. ராவண்னிற்கு ஆருஷிவுடைய ஸ்பரிசத்தில் இருந்த மென்மை பிடித்திருந்தது என்றால், அவளுக்கு ராவண்னுடைய பிடியில் தெரிந்த முரட்டுத்தனம் பிடித்திருந்தது. ஆனால்.. எல்லாம் ஒரு ஐந்தாறு விநாடிகள்தான். ஆருஷி தான் முதலில் சுதாரித்துக்கொண்டு சற்றே திணறலான குரலில் கேட்டாள்.

“எ..என்ன ஆச்சு? ஏன் இப்படி?” என்று அவன் முரட்டு கைகள் தன் மெல்லிடையில் பதிந்திருந்ததை கண்களால் சுட்டிக்காட்டி கேட்டாள்.

ஆருஷியின் குரல் காதில் விழுந்ததுமே ராவண் சுயநினைவுக்கு வந்தான். அவளைப் பிடித்திருந்த பிடியை பட்டென விட்டான். அவளும் உடனே அவனிடமிருந்து சற்றே நகர்ந்து கொண்டாள். ஓரிரு வினாடிகள் என்ன சொல்வதென்று தடுமாறிய ராவண், உடனே சமாளித்துக்கொண்டு,

“பாத்து பாப்பா.. இன்னும் கொஞ்சம்னா கீ..கீழ விழுந்திருப்ப.. நல்லவேளை.. புடிச்சுட்டேன்..!!” என்றான்‌ பொய்யை அப்பட்டமாக மெய் போல்..!

ராவண் அந்த சூழ்நிலையை அழகாக சமாளித்துவிட, அவள் தான் புரியாமல் தலையை சொறிந்தாள்.

“கீ..கீழயா..?? நா..நானா.. எப்போ கீழ விழப் போனேன்..?? அப்படி எதுவும் எனக்கு ஞாபகம் இல்லையே?” என்று‌ அவள் சந்தேகமாய் அவனை பார்த்தாள். அவளோ ஸ்கொஷ் ஆட்டத்தில் தமிழகத்தில் ஸ்டேட் பிளேயராக இருந்தவள், எப்படி விழ போகிறோம் என்று அவளை குழம்பி விட்டாள் பாவம்..! இல்லை இல்லை குழப்பி விட்டான் ராவண்..! 

“இ..இதோ.. இப்போ.. அப்படியே சர்ருன்னு.. ஸ்லிப் ஆகிட்டு போனியே.?? நான் பிடிக்கலைன்னா கண்டிப்பா விழுந்திருப்ப.. அன்னைக்கு லிப்ட்ல கூட இப்படித்தானே விழ வந்த..! அப்பவும் நான் தானே உன்னை இப்படி பிடிச்சு காப்பாற்றினேன்” என்று அன்றைய செயலை ஞாபகப்படுத்தி இப்போது சூழ்நிலையை மறக்க செய்தான்..!

பொல்லா ராட்ஷஸன் காதல் கள்ளவனாய்..!

“எது? விழப்போனேனா? நான சரி தான் போங்க டாக்டரே.. நான் பால் ரிடர்ன் எடுகுறதுக்காக போனேன்..!!” என்று அவள் இடுப்பில் கைவைத்து அவனை முறைக்க..

“ஓஹோ..?? போறது.. கொஞ்சம் பொறுமையா போகலாம்ல..?? நான் கீழ விழப்போறியோன்னு பயந்துட்டேன்..!!” என்று சிவகாசி கணேசன் பேரனாய் தத்துரூபமாய் அவன் நடிக்க..

“ஹ்ம்ம்.. பொறுமையா போறதுக்கு இங்க என்ன கல்யாண ஊர்வலமா நடக்குது..?? கேம் டாக்டரே கேம்..! கதைல வேணா ஆமை போட்டியில ஜெயிச்சி இருக்கலாம். ஆனா ஆமை வேகத்தில் போனா இங்க எல்லாம் காரியம் நடக்காது. சும்மா கண்ணிமைக்கும் நேரத்துல உசேன் போல்ட் மாதிரி ஓடணும்” என்று‌ வகுப்பு எடுத்தாள் அவனுக்கு.

“சரி சரி.. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.. ஃப்ரீயா விடு..!!” ராவண் அவளை ஒரு திருட்டுப் பார்வை பார்த்தவாறே சொன்னான்.

“ப..பரவால.. விடுங்க..!!” ஆருஷி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாகவே சொன்னாள்.

அப்புறம் சிறிது நேரம் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவாறு, அமைதியாக நின்றிருந்தார்கள். இன்னும் ஆருஷியின் இடுப்பில் அவனின் முரட்டுக் கையின் தாக்கம் இருக்க.. அவன் அறியாமல் மெல்ல தடவிக் கொண்டாள்.

ராவண்னுக்கோ இன்னுமே அந்த மென்மையான இடையின் வழவழப்பு தன் கையில் இருப்பதாகவே தோன்ற.. வெல்வட்டை விட மென்மையாய் இருக்கே என்று தன் கையை பார்த்திருந்தான் அவன்.

பிறகு ஆருஷி அந்த மௌனத்தை உடைக்கும் விதமாய், மெல்லிய குரலில் கேட்டாள்.

“இப்போ என்ன பண்ணலாம்.. போதுமா இல்ல கண்டின்யூ பண்ணலாமா..??”

“க..கண்டின்யூ பண்ணலாம்.. வா வா.. நாந்தானே இப்போ சர்வீஸ்..??”

குரலை இயல்பாக மாற்றிக்கொள்ள முயற்சித்தவாறே, ராவண் குனிந்து ஓரமாய் கிடந்த பந்தை பொறுக்கிக் கொண்டான். 

சர்வீஸ் செய்யும் கட்டத்துக்குள் சென்று நின்று கொண்டான். அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, பந்தை தூக்கிப்போட்டு சுவற்றில் அடித்தான். சுவற்றில் பட்ட பந்து மீண்டும் இவர்களை நோக்கி பறந்து வர, ஆருஷி அதை அடிப்பதற்காக பாய்ந்தாள். ஆருஷியின் நெருக்கம் ஏற்படுத்திய கிறக்கத்தில் இருந்து இன்னும் மீளாத ராவண், அவள் ஓடுகையில் அதிர்கிற அவளது அங்கங்களையே வெறித்தான்.

ஆருஷி பந்தை திருப்பி சுவற்றில் அடித்த பிறகும், அவனது பார்வை அவள் மீதிருந்து அகல்வதாய் இல்லை. சித்தமெங்கும் பித்தம் ஏறிப்போனவனாய் ‘பே’ என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஹேய்.. பால்- பால்..!! பாருங்க.. அடிங்க..” என்று ஆருஷி கத்தியது காதில் விழவில்லை. பறந்து வந்த பந்து இவன் கன்னத்தில் வந்து ‘சொத்..’தென்று ஒரு அடி போட்டதும்தான், சுரணை வந்து ‘ஆஆஆ..’ என்று கத்தினான் ராவண்‌.

“சாரி சாரி.. பந்து ரொம்ப வேகமா பட்டுடிச்சா? ரொம்ப வலிக்குதா? என்று பதறி போய் அவன் அருகில் வந்தாள் ஆருஷி. 

“சரியான வலி..” என்று கன்னத்தை பிடித்தபடி அவளைப் பார்த்தான் மருத்துவன்.

இப்படி உட்காருங்க என்று அந்த ரூமில் சற்று தள்ளி இருந்து ஒரு இருக்கையில் அமர வைத்து அவன் முன்னே நின்று அவன் தலையை தன் மீது சாய்த்து தன் பேக்கிலிருந்து ஐஸ் பேக்கை எடுத்து அதில் ஒத்தடம் கொடுத்தாள்.

அவனோ கண்களை மூடி கிறங்கியிருந்தான். அவளின் மெத்தென்று மென்மையில் முகம் புதைத்திருக்க..

சிறிது நேரம் அவன் முகத்தை தன்னோடு அழுத்தியபடி அவள் ஒத்தடம் கொடுக்க.. “நான் எப்பொழுதுமே இது கையில் வைத்திருப்பேன். சில சமயம் எனக்குமே இப்படி அடிபடும்..” என்று அவளுக்கு அடிப்பட்ட சில நிகழ்வுகளை அவள் கூறிக்கொண்டு ஒத்தடம் கொடுக்க.. இவனோ ஆறாவது ஏழாவது லோகம் என்று தாண்டி சென்று கொண்டிருந்தான் அவளின் பெண்மையின் வாசத்தில்.. ஸ்பரிசத்தில்..!

“இப்போ ஓகே வா?” என்று அவன் முகத்தை தன்னிடமிருந்து பிரிக்காமல் தலையை மட்டும் நிமிர்த்தி கேட்டாள்.

“இப்படி உதவி கிடைக்கும்னா அடிக்கடி அடிப்பட எனக்கும் டபுள் ஓகே..!” என்று புன்னகைத்தான். இருவரும் இருந்த நிலையை கண்டு நாணமற்றவள் தன் பேக்கை எடுத்துக்கொண்டு ஓடினாள்.

“ஆருஷி நாளைக்கு நான் ஃப்ரீ 10 ஓ கிளாக்.. அதே மால்..! உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று அவன் குரல் அவளை பின்தொடர..

“நான் வரமாட்டேன். நான் பிஸி..! படிக்கணும்” என்று சத்தமாக அவள் கூற..

“ஓஹ் வந்துடுறியா ஓகே ஓகே..!” என்றான் இவன் குறும்பாக..

“நான் நிஜமா வரமாட்டேன்” என்றாள் அவள் வீம்புமாக அவனை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே..

“ஓகே தேங்க்ஸ் பாப்பா.!” என்றான் ராவண் சத்தமாக..!

மறுநாள் காலை 9:45கே வந்து அந்த மாலில் அவள் காத்திருக்க.. பத்து மணி ஆகியும் அவன் வரவே இல்லை..!

“பத்து மணிக்கு வரேன்னு சொன்னாரே? இன்னும் ஒரு காணும்..!” என்று மனது படபடக்க முதன்முதலாக ஒரு ஆணவனோடு தனியே வெளியே செல்லும் அந்த உணர்வு புதுவிதமாய் அவளை மயக்கியது. ஹார்மோன்களோ அவளை உற்சாகப்படுத்தியும் பயம் கொடுத்தும் அவளை எல்லா உணர்வுகளையும் கலந்து அளித்து பதட்டத்திலேயே வைத்திருந்தது.

கண்களால் அவனை தேடி தேடி அலுத்து போய் நின்றவள் காதோரம் அவனது கற்றை முடிகள் உரச “வரமாட்டேன்னு சொன்ன.. வந்துட்ட..!” என்றவனின் ஆண்மை கலந்த குரல் கிறக்கமாக கேட்க..

“டாக்டரே..!” என்று உற்சாகமாக திரும்பினாள் ஆருஷி..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top