அசுரன் 7
இருவர் கண்களும் ஒன்றையொன்று அதி தீவிரமாக கவ்விக் கொண்டிருந்தது.
அதில் முன்னிருந்த காதல் இல்லை…
இளமையின் தேடலும் இல்லை..
பெரும் காமமும் இல்லை..!
‘நீயா இப்படி பேசுவது?’ என்று அவனின் கண்கள் நம்பா இயலாமல் பார்த்திருக்க..
‘ஆம்.. நானே தான். இனி இந்த நான் தான் நிரந்தரம்.!’ என்று அவளின் விழிகள் இளகாமல் பதில் பேச…
அப்போது ஆருஷியின் அறைக்கதவு தட்டப்பட்டது. சற்றென்று இருவர் பார்வைகளும் ஒருங்கே கதவை நோக்க.. இவளோ உதடு கடித்து “போச்சு.. போச்சு.. அத்தையா ஆச்சியானு தெரியலையே?” என்று கையை பிசைந்து கொண்டு தவித்தாள்.
சிறுவயதில் இவள் பெற்றோர்களை இழந்த சமயம் தூங்கும் போது அலறி எழபவள், அதன்பின் தூங்காமலே மொட்டு மொட்டென்று விழித்திருப்பாள்.
முதலில் இவளை சமாதானம் செய்து விட்டு சென்றதும் இவள் தூங்குகிறாள் என்று ரூபிணியும் வள்ளியம்மையும் நினைத்திருக்க.. ஆருஷியோ நடு இரவில் மொட்டு மொட்டு என்று விழித்து பயந்தபடியே அமர்ந்திருப்பதை அதன்பின் தான் கண்டறிந்தார்கள்.
இவள் கொஞ்சம் சத்தம் செய்தால் கூட விழிப்போடு இருந்து உடனே வந்து விடுவார்கள் இருவரும். அவள் தூங்கும் வரை அருகில் இருந்து அதன் பின் தான் செல்வர்.
இவள் இங்கே ராவண்னிடம் பேசிய போது கத்திய சத்தத்தை கேட்டு இருக்க கூடும் போல..
“கண்டிப்பாக ஆச்சியாக இருக்காது அவரால் முன்ன போல மாடி ஏற முடியாது. ஆனா.. லிப்டின் மூலம் வரலாமே..!” வள்ளியமையால் மாடி ஏற முடியாததால் வீட்டின் உள்ளே இரண்டு லிப்ட் இருக்கும்.
இவள் தன்னந்தனியாக புலம்பி கொண்டிருக்க “யாரது வந்திருக்கிறது?” என்று கேட்டவனை முறைத்து…
“பாரு.. எல்லாம் உன்னால தான்..! அத்தையா ஆச்சியான்னு தெரியல..!” என்று தவித்தாள்.
அவனோ நெற்றி சுருங்கி புரியாமல் அவளைப் பார்த்தான் “எப்பொழுதும் கொஞ்சம் அலர்ட்டா தான் இருப்பாங்க” என்றாள்.
“இது ஏசி ரூம்..! இதுல நீ கத்துறது அவங்களுக்கு எப்படி கேட்கும்?” என்று யோசித்தவனுக்கு அருகில் இருந்த சிறு அலாரமொன்றை காட்டினாள். அதிக டெசிபலில் இவளுடைய சத்தம் இரவு நேரத்தில் கேட்டால்.. அவர்கள் இருவர் அறையிலும் அலாரம் அடிப்பது போல அழகப்பன் செய்து வைத்திருந்தார்.
“அடிப்பாவி..!” என்று நெஞ்சை பிடித்தான் இராவண்.
“நல்ல வேளை ஜஸ்ட் மிஸ்..! இப்பவே சொல்லி வைச்ச.. நாள பின்ன உன்ன கல்யாணம் பண்ணிட்டு இந்த ரூம்ல நாம எதுவுமே பண்ண முடியாது போலயே..??” என்று அவன் கவலையில் அவன் உழல..
முதலில் அவன் பேசியது புரியாமல் பார்த்தவள், புரிந்ததும் “எக்ஸ்கியூஸ் மீ..!! யார் உன்னை இங்கே கட்டிக்க தவம் செஞ்சிட்டு கிடக்கா.. கிளம்பி போற வழிய பாரு.. இப்ப நான் மட்டும் கதவை திறந்தேன்.. பெரிய பிரச்சினையாயிடும்..! உன்னோட டாக்டர் தொழிலுக்கு அவ பேரு தான் கிடைக்கும்..!” என்றாள் ஏற இறங்க அவனை பார்த்து..
“அப்படியா எங்க கூப்பிடு பாப்போம்? என் டாக்டர் தொழிலுக்கு அப்படி என்ன அவ பேரு கிடைக்குதுன்னு நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்று, அதுவரை எதிரில் அமர்ந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் இப்பொழுது நல்ல சாவதானமாக அவளுக்கு அருகிலேயே கட்டிலில் சாய்ந்து கொண்டு காலை நீட்டியபடி அவளிடம் பேச அவளுக்குத்தான் உள்ளுக்குள் நடுக்கமானது.
என்னதான் இருவருக்குள்ளேயும் இப்போது காதல் ரத்து வந்து விட்டாலும்.. இதற்குப் முன் ஈருடல் ஓர் உயிராய் இருந்தவர்கள் தானே?
‘இப்பொழுது கதவை திறந்து அத்தையோ ஆச்சியோ வந்தால்.. அவர்கள் இவனை பார்த்தால்.. கண்டிப்பாக இந்த பக்கி எல்லா உண்மையும் சொல்லிடுவான்.. அச்சோ ஆண்டவா..!” என்ற தலையை பிடித்தவள்…
பின் வீரியத்தை விட காரியமே பெரிது என்று புரிந்து “ப்ளீஸ்.. தயவு செய்து இங்கிருந்து கிளம்பு..!” என்று அவனிடம் கைகூப்ப.. அந்தக் கைகளோடு தன் கைகளை கோர்த்தவன்,
“அப்போ ஒரு டீல்..! நாளைக்கு ஈவ்னிங் ஈஸிஆர் ரோட்ல இருக்குற ரெஸ்டாரண்ட்ல யூத் செலிப்ரேஷன் நடக்குது நீ அங்க கண்டிப்பா வர உன் கிட்ட நான் பேசணும்.!” என்றான்.
வர முடியாது என்பது போல அவள் அமர்ந்திருக்க “நீ வர..! அப்படி நீ வரலைன்னா இப்போ யாருக்கும் தெரியாம உன் ரூம்குள்ள வர தெரிஞ்ச எனக்கு.. வாசக்கதவு திறக்க சொல்லி எல்லாரும் முன்னிலைலும் உன் ரூம்க்குள்ள வருவேன்..! அப்போ இப்படி வெறும் முத்தத்தோடு போகாது நம் உறவு.. மொத்தமா..” என்றதும் சட்டென்று அவன் வாயை பொத்தினாள் ஆருஷி.
அவனோ அவளின் தளர்விரல்களை தனது முரட்டு அதரங்களாலும் கற்றை மீசையாலும் இம்சை படுத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் அதே ஜன்னல் வழியாக குதித்து வெளியேறினான்.
“இவன்லாம் எப்படி டாக்டருக்கு படிச்சான்? இத்தனை கிறுக்குத்தனம் பண்றான் குரங்கு மாதிரி..” என்று தலையில் அடித்துக் கொண்டவள் அவசரமாக அந்த ஜன்னலை சாற்றி உள்பக்கம் தாள் போட்டு அதன் பின்னே கதவை சென்று திறந்தாள். அங்கு ரூபிணி நின்றியிருக்க
“என்ன அத்தை?” என்றாள் ஒன்றுமே நடக்காதது போல..
“இல்ல கண்ணு.. அலாரம் அடிச்சுது டா.. நீ எதுவும் தூக்கத்தில் பயந்து கத்துனியா தங்கம்?” என்று கிட்டே வந்து அவளது கன்னத்தை வருடியப்படி கேட்டார்.
“அது… அது.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. நல்லா தானே தூங்கினேன் அத்த..!” என்றாள் மீண்டும் கொட்டாய் விட்டுக் கொண்டு, ஏதோ இவ்வளவு நேரம் அவள் தூங்கினது போலவே நடிப்பை அப்படி கொட்டிக் கொண்டிருந்தாள் ஆருஷி..!
ஒரு பக்கம் தன் மனதுக்கு இனியவர்களிடம் இப்படி நடிக்கிறோமே என்று அவளுக்கு வருத்தமாக இருந்த போதிலும்.. இன்னும் சிறிது காலம் மொத்தமாக இந்த ராவண்னை தலைமுழுகி விட வேண்டும். சொந்த வீட்டில் கூட சுதந்திரமாக இருக்க முடியவில்லை என்று அவள் தன் போக்கில் கண்களை மூடி யோசிக்க..
ரூபிணி அவள் தூக்க கலக்கத்தில் இருக்கிறாள் என்று நினைத்து “சரி சரி கண்ணு.. நீ தூக்கம் வந்தா போய் தூங்கு.. திரும்ப ஏதாவதுனா அத்தைக்கு ஃபோன் பண்ணு சரியா? இப்படி நீ உனக்குள்ளேயே எதையும் போட்டு மருக கூடாது. எதா இருந்தாலும் அத்தை கிட்ட சொல்லணும் கண்ணு.. அத்தை எல்லாம் சரி செய்வேன்..போ.. போ.. போய் தூங்கு” என்று அனுப்பி வைத்தார்.
அப்பாடி என்று பெரும் மூச்சோடு விட்டத் தூக்கத்தை தொடர முயல.. தூக்கமோ வருவேனா என்று அவளிடம் ஆட்டம் காட்டியது..!
அந்தப் பொல்லா ராட்ஷஸனின் முரட்டு அதிரங்களும்.. கற்றை மீசையின் குறுகுறுப்பும்.. அவள் முகம் முழுவதும் வருடிய ஆடவனது விரல்களும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து வந்து போக..
அவனின் ஸ்பரிசம் வேண்டுமென.. அவனின் இறுக அணைப்புக்குள் சிறை இருக்க வேண்டுமென..
அவளின் ஒவ்வொரு அணுவும் துடியாய் துடித்தது.
உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருவருக்கும் பொது தானே..!
“ச்ச.. என்ன மானங்கெட்ட உடம்பு இது..” என்று புரண்டு புரண்டு படுத்தவளால் அதற்கு மேல் தூக்கத்தை தொடர முடியாமல் விடிந்த பின்னே உறங்கலானாள்.
“இந்நேரத்துக்கு பாப்பா பூஜைக்கு வந்த நின்னுடுவா.. ஏன் இன்னும் ஆருவ காணும். ரூபிணி போய் என்னன்னு பாருமா” என்று வள்ளியம்மை ரூபிணியிடம் கூற.. கணவனுக்கும் மகனுக்கும் காலை உணவினை பரிமாறிக் கொண்டிருந்தவர் “இதோ அத்தை” என்று மாடி சென்றார்.
காலையில் பெட் காஃபி கூட அவளது அறைக்கு வெளியே இருக்க..
“என்ன காபி கூட எடுக்கல இவ?” என்றபடி கதவை தட்ட.. அவள் நேற்று இரவு தாழ் போட மறந்துவிட்ட கதவு திறந்து கொண்டது. உள்ளே பார்த்தால் ஒயிலாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஆருஷி.
“ஆருக்கண்ணு.. ஆரு.. கண்ணு என்ன ஆச்சு? இன்னும் தூங்கிட்டு இருக்க?” என்று அவளது கன்னத்தில் தட்டி எழுப்பினர்.
“அத்த.. ப்ளீஸ் விடிய காலையில் தான் தூங்கினேன். கண்ணெல்லாம் எரியுது.. இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்குறேன்” என்று மறுபக்கம் அவள் புரண்டு படுத்தாள்.
“என்ன கண்ணு இது? காலை எந்திரிச்சி ஹாஸ்பிடலுக்கு போகணும்னு சொல்லி இருக்கேன் இல்லையா? இப்படி தூங்கினா என்ன அர்த்தம்? எந்திரி கண்ணு..” என்று அவர் எழுப்ப..
“ப்ளீஸ்.. அத்த..” என்று ஒற்றைக் கண்ணை திறந்து அவள் கெஞ்ச..
“வர வர நீ சரியா இல்ல ஆரு. காலைல நேரத்தோட எழுந்திருக்கவே மாட்டேங்குற.. நானோ இல்ல அத்தையோ வந்து எழுப்பினால் தான் படுக்கையை விட்டு எழற.. இதே போல தான் படிக்கிற இடத்திலேயும் இருந்தியா நீ? இல்ல இல்ல இப்படியே இருந்தா சரி வராது..! எழுந்திரு மொதல்ல..” என்று அவளது போர்வை பிடித்து இழுத்தார்.
“இன்னிக்கு ஒரு நாள் மட்டும் லீவு போட்டுக்கிறேன் அத்த ப்ளீஸ்.. ரொம்ப தூக்கம் தூக்கமா வருது. நான் தானே அதோட எம்டி. அதனால யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க..” என்று அவள் மீண்டும் கண்களை மூடியபப்டி முணுமுணுக்க..
“உடையவன் பார்க்கலைன்னா ஒரு முழம் கட்டனு சொல்லுவாங்க கண்ணு.. எந்த வேலையா இருந்தாலும் நாம பக்கத்தில் இருந்து பாக்கணும். ஹாஸ்பிடல் சின்ன இடம் தான். அதுக்கே இப்படி அலுத்துகிற.. அப்புறம் நம்ம பாத்திர கடை எல்லாம் நீ எங்கேனு போய் பாத்துக்குவ? நான் சொன்னது சரிதான்.. உனக்கு ஹாஸ்பிடல் தான் சரி..! ஆனா அதுக்கே இப்படி ஸ்கூல் பிள்ளைங்க மட்டம் போடுறதுக்கு சொல்ற காரணத்த போல சொல்றியேடா கண்ணு.. எந்திரி கண்ணு.!” என்று அவளை எழுப்பினார்.
ஒரு வழியாக எழுந்தவள் காபி எங்கே என்று கேட்க..
“முதல்ல போய் பல் துலக்கு.. இந்தா உன்னோட மொபைலில பாட்டு போட்டுட்டே துலக்கு. அப்பதான் சீக்கிரம் வருவ.. இல்லன்னா அங்கேயும் போய் தூங்குவ..” என்றார் சிரித்துக் கொண்டே..
“என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க அத்தை..” என்று அவர் கன்னத்தை பிடித்து ஆட்டியப்படி போனுடனேயே குளியலறைக்குள் நுழைந்தாள் ஆருஷி.
குளியலறையில் இருந்து கேட்கும் பாட்டை கேட்டவர் “ச்ச என்ன பாட்டு இது ஒரு எழவும் புரியல.. ஆனா இப்பவுள்ள புள்ளைக இந்த மாதிரி பாட்டு தான் கேட்டு ரசிக்குதுங்க இதுல என்ன புரியுதுன்னு இவங்களுக்கு? என்னமோ?” என்று புலம்பி செல்ல..
அதற்குள் கிரிதரனும் சுக்ரேஷூம் காலை உணவு உண்டு விட்டு ஹால் ஷோபாவில் வள்ளியம்மையிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கிரிதரன் அழகப்பன் உடல்நிலை பற்றி கேட்டு கொண்டிருந்தார்.
“பெரியம்மா நாம ஏன் ஃபாரின்ல இருக்குற பாப்புலர் நியூராலஜிஸ்ட் கிட்ட காட்டக்கூடாது பெரியப்பாவ” என்று கேட்க..
“இத்தனை வருஷமா இந்த வீட்ல தானே இருக்கே கிரி.. உன் பெரியப்பா பத்தி உனக்கு தெரியாதா? அதெல்லாம் ஒத்துக்க மாட்டார் மனுஷன். விடு கிரி..” என்று அலுப்போடு சொன்னவர்..
ரூபிணியை பார்த்து “என்னமா ஆரு இன்னும் எழுந்துக்கலையா?” என்று கேட்டார் வருத்தத்தோடு.
“நைட் ஏதோ படம் பார்த்திருப்பா போல அத்த.. அதான் தூங்கிட்டா அசதியில.. வந்துருவா அத்தை” என்றார் ரூபிணி.
“நீ என்னைக்கு அவள விட்டு கொடுத்திருக்க? அந்த புள்ள இன்னும் கொஞ்சம் பொறுப்பா இருக்கலாம்” என்று வள்ளியம்மை கூறினாலும் அதில் தன்னை குறித்த பெருமையைக் கண்டு பூரித்து போனார் ரூபிணி.
ஒரு வழியாக குளித்து கிளம்பி மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
அவள் வரும் வரை சுக்ரேஷும் அவளுக்காக காத்திருக்க.. “ஏன் தான் நீ இப்படி பண்றன்னு எனக்கு தெரியல ஆருஷி.. உன்னால என் வேலையும் கெடுது. நான் இனி உன் கூட காலையில ஹாஸ்பிடல் வரல.. அப்பா கூடவே ஸ்டோர்ஸ் பார்க்க போகிறேன்” என்று கார் ஓட்டியப்படியே அவன் புலம்பித் தள்ள..
அதெல்லாம் கண்டுக்காமல் ராவண் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தாள் ஆருஷி.
‘அவன் சொன்னது போல போகலைன்னா.. கண்டிப்பா வீட்டுக்கு வருவான் அந்த ராட்ஷஸன். வீட்டுக்கு வந்தா.. ஆச்சி.. அதுக்கு மேல தாத்தா.. ஓ மை காட்.. அவங்களை எல்லாம் சமாளிக்கிறதுக்கு அந்த ஒருத்தனையே சமாளிக்கலாம்..!’ என்று யோசித்தவள் மறுநாள் பள்ளியில் படித்த தோழியின் பிறந்தநாள் விழா என்று பொய் கூறி ராவண் சொன்ன அந்த ரெசார்ட்டுக்கு சென்றாள்.
பர்த்டே பார்ட்டி என்று சொல்லிவிட்டோம் அதற்கு தகுந்தது போல உடை அணியவில்லை என்றால் வீட்டில் கேட்பார்களே என்று அழகாக பார்ட்டி கவுனில் தயாராகி வைரங்கள் பூட்டி நட்சத்திரங்களுக்கு போட்டியாக மின்னியபடி வந்த மருமகளை திருஷ்டி கழித்தார் ரூபிணி. “பத்திரமா போயிட்டு வா கண்ணு” என்று அனுப்பி வைத்தார்.
அந்த யூத் செலிப்ரேஷனுக்குள்ளே நுழைந்து எங்கே இவன் என்று தேடிக்கொண்டே வர சற்றென்று அவளது கரம் பற்றி இழுக்கப்பட.. அதில் திடுக்கிட்டவள் வீறிட்டு கத்தும் முன், தன்னோடு இருக்கி அணைத்தவனை கண்டு திகைத்தாள்.
ஏனென்றால் முகத்தில் பாதி மறைத்தால் போல மாஸ் போட்டு இருந்தான். முகம் தெரியவில்லை என்றாலும் ஸ்பரிசங்கள் சொன்னதே அது அவன்தான் என்று..!
“பாப்பா.. அழகா அம்சமா இருக்க டி இந்த டிரஸ்ல” என்று அவளின் நெளிவு சுழிவுகளையும் ஏற்ற இறக்கங்களையும் கொஞ்சம் அபிரிமிதமாகவே காட்டிய உடைய கண்டு அவன் ரசிக்க.. இவளுக்கு அவஸ்தையாக இருந்தது.
“நீ சொன்னபடி நான் பார்ட்டிக்கு வந்துட்டேன். இதோட நம்மளோட எல்லாமே முடிஞ்சது..!”
“எல்லாமேனா..??” அவன் கேள்வியாய்..!
“எல்லாமேன்னா எல்லாமே தான்..!” அவள் பதிலாய்..!
அவனோ அமைதியாக அவளை கூர்ந்து பார்த்தவன் அங்கே இசைக்கு தகுந்தாற் போல ஆடிக்கொண்டிருந்த இளம் ஜோடிகளுக்கு இடையே புகுந்தான்.
“இங்கு பாரு மாறா.. இனி ஒரு தரம் என்னை பார்க்க என் வீட்டுக்கோ இல்ல அன்னைக்கு ஆர்த்தோ டாக்டர் இன்பராஜ் வர சொன்னாருன்னு அடுத்தவங்க கேபினுக்கோ வர வச்சு முடிஞ்சு போன நம்ம உறவை புதுப்பிக்க நினைக்காதே..! அது இனி முடியாது..!” என்றாள் கட்டன் ரைட்டாக..!
“குட்..! என்னை சரியாக புரிஞ்சவ நீ மட்டும் தான்..!”அவனது கண்களோ அந்த இருளிலும் மின்ன..
‘என்ன சொல்லி தொலைச்சோம் இவன் கண்கள் ஏன் இப்படி ஆயிரம் வாட்ஸ் பல்பு போல மின்னுது?’ என்று யோசித்தவளுக்கு அவள் மனதில் ஆழப் பதிந்து இருந்த அந்த “மாறா” தான் காரணம் என்று அக்கணம் தெரியவில்லை.
அவனோ தன் கோட்டின் உள்ளே இருந்த மற்றொரு மாஸ்கை அவளுக்கு அணிவித்து அந்த இளம் ஜோடிகளுக்கு இணையாக இவனும் ஆட.. அவளையும் சுழற்ற..
“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ம்ப்ச்..” என்று அவன் மீண்டும் பேச..
“உஷ்..! இந்த நேரம் இந்த கணத்தை அனுபவிக்கணும் அதிகம் பேசாதடி பாப்பா..!” என்று அவள் காது மாடலில் லேசாக கவ்வி அவன் பேசிய வார்த்தைகளை உள்ளுக்குள் அவளுக்குள் சிலிர்த்தது.
அவன் கைகளுக்குள் அவன் தவற விட்ட வைரம் இப்பொழுது..!
ஆதலால்.. இந்த கணத்தை இழக்க அவன் விரும்பவில்லை..!
ஒவ்வொரு நொடியும் ரசனையோடும் உள்ளிருந்த ஆத்மார்த்த காதலோடும் தன்னவளோடு இந்நிமிடத்தை அனுபவிக்க ஆரம்பித்தான்..!
பின் அவன் எண்ணம் புரிந்து அவன் லயதிற்கும் பாடலின் தாளத்திற்கும் ஏற்ப தன் உடலை வளைத்து நெளித்து ஆடத் தொடங்கினாள் ஆருஷி. அந்த முரட்டுக் கைகள் அவளின் இடையை வளைத்து அணைத்து தன்னை நோக்கி இழுத்து என பல லாவங்களை கையாண்டது. அவளும் அவனுடன் குழைந்தும்.. நெளிந்தும்.. இணைந்தும்.. விலகியும்.. அவனுடன் நடனம் ஆடினாள். அவனோ சல்சா ஜாஸ் என்று மேற்கத்திய நடனங்களை பயின்றவன். இவளோ நம்மூர் பரதநாட்டியத்தை பயின்றவள். இதற்கு முன் இருவரும் இணைந்து ஆடியதும் உண்டு. ஆனால் இவர்களின் இந்த லாவகமும் லயமும் தாளத்திற்கு ஏற்ப இணைந்தும் பிரிந்தும் அவர்கள் ஆடியது அவர்களின் தேர்ந்த நடனப் பயிற்சியை கட்டியம் கூறியது.
ஒருவரின் உடலோடு ஒருவரின் உடல் உரச.. அவர்களின் உயிரோடு உயிர் கலக்க அந்த நிமிடங்களை அவர்கள் ஆழ்ந்து அனுபவித்தனர். அவனின் பரந்து விரிந்து மார்புகளில் அவளின் மென்மைகளின் ஸ்பரிசம் உணர.. அவன் கைகளில் அவளின் மெல்லிய இடையின் மென்மையும்.. வழவழப்பும்.. உணர, அவனின் ஒவ்வொரு அணுவும் அவள்மேல் பித்தாகி அவனை வீழ்த்திக் கொண்டிருந்தது. இது ஏதும் அறியாதவள் மேலும் மேலும் அவனோடு இணைந்து ஆடி தன் ஸ்பரிசத்தால்... விழி வீச்சால்.. அவளின் மென்மையால் அவனை தன் மீது பித்தனாக்கி கொண்டிருந்தாள் தன்னையும் அறியாமல்…!!
முதலில் நடனத்தைக் ஆரம்பித்தது என்னவோ ஆணவன் தான், ஆனால் நேரம் செல்ல செல்ல அவனை தனக்குள் ஆட்கொண்டாள் பாவையவள். அவள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் அவன் நடன அசைவுகள் மாற, முற்றிலும் அவள் வசமனான் ராவண்.
“இதைத் தான் டி எதிர்பார்த்தேன் பாப்பா உன்னிடம்… வேண்டும் வேண்டும்.. உன் மொத்தமும் என்னிடம்..!” என்று அவன் கண்கள் மோன நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆனால் அதை கவனிக்கும் நிலையில் எல்லாம் ஆருஷி இல்லை. வெகு நாட்களுக்கு பின் தன்னவன் உடனான ஒரு உற்சாக நடனம்..!
அவள் அதிலேயே அமிழ்ந்து போனாள்..!
அவனுள் கரைந்து போனாள்..!
அவனில் உருகி நின்றாள்..!
அவனின் மென் தொடுகை மெல்ல மெல்ல வன்மையாக மாறி அவனின் வேட்கையை உணர்த்தினான். அதை உணர்ந்து கொண்டவளோ அதைத்தன் ஸ்பரிசத்தில் ஏற்று உள்ளத்தில் குழைத்து கண்களில் காட்டினாள். கரைபுரண்ட காதலில் ஆக்டோபஸ் போல தன் விழி வீச்சுகளால் தனை இழுக்கும் அந்தப் பாவையை கண்டவன் தாங்க மாட்டாமல் இறுக அணைத்து தன் முத்தங்களால் கண்களை தண்டித்தான்.
அவள்இடையைப் பற்றியிருந்த கைகள் இன்னும் இறுக்கமாக அவளை தன்னோடு நெருக்கி அனைத்துக் கொண்டது.
புரியாத பாடலுக்கு துள்ளல் இசையோடு நடனமாடிக் கொண்டிருந்தவர்களோடு இவர்களும் ஐக்கியமாகி விட.. ஆருஷியுமே இடையில் வந்த மாதங்களை மறந்து.. அவள் காதல் ரத்து செய்ததையும் மறந்து தண்டவனோடு இழைந்து இழைந்து ஆடினாள்.
ராவண் அவளின் உதட்டை மென்மையாக கையாள ஆரம்பித்தான். உதட்டை கவ்வியவன் அதில் கவி பாட ஆரம்பித்தான். கண்கள் மூடி அதனில் சுகித்தவள் தலைத் தூக்கி அவனின் சட்டையை பிடித்திழுத்தாள் தன்னருகே இன்னும் நெருக்கமாக..!
அதரங்களை அவன் மெல்ல கடித்திட..
வலியோட சுகம் கூட்டிட.. ஆருஷியின் விரல் நகங்கள் அவன் முதுகில் ஆழப் பதிந்தது.
அவளுக்கு வலியை கொடுத்து தனக்கும் வலியை எடுத்துக் கொண்டான்.. காதல் அசுரன் ராவண்..!
காதலில்.. அதி மோகத்தில்.. வலி கூட சுகம் தானே..!
“ஹ்ம்ம்....” என்றாள் முகத்தைச் சுருக்கி கண்கள் திறக்காமலே சிரித்தாள் ஆருஷி. இம்முறை கடித்தலை இவள் செய்தாள். ராவண் அழுத்தமான ஹ்ம்ம் சொல்லவில்லை. மாறாக, அவளின் இடையில் அழுத்தமாக பதிந்தன அவன் கரங்கள்.
இப்போது “ஸ்ஸ்ஆஆ வலிக்குது..!” என்று தள்ளி விட்டாள் ஆருஷி. எட்டிப் போனவனோ இதழ் கடித்து சிரித்தான்.
“இன்னும் எதுவும் மாறலடி பாப்பா..! எல்லாமே அப்படியே தான் இருக்கு..! நமக்குள் எதுவும் மாறல.!” என்றவனின் வார்த்தைகளில் கொதித்து எழுந்தாள்.
அதன் பின்னே சுற்றம் மறந்து அவனோடு தான் இணைந்தது.. இழைந்தது ஞாபகம் வர தன்மீதே அத்தனை கோபம் அவளுக்கு..!
‘எனக்கு அத்தனை வலி கொடுத்தவன் இன்று அது எதையுமே உணராமல் எப்படி இவனால் என்னோடு இழைய முடிகிறது? பழையபடி பேச முடிகிறது?’ என்று உள்ளம் வெதும்பியவள், அவள் அனுப்பவித்த அதே வலியை.. அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அவனுக்கு வலி கொடுத்தே ஆக வேண்டும் என்று வீம்பு பிறக்க..
“அன்னைக்கு நீ சொன்னது ஞாபகம் இருக்கா.. மிஸ்டர் ராவண்? குளிச்சா எல்லாம்.. எல்லாமே போயிடுமென்னு..! தண்ணியோட அந்த ஞாபகங்களும் எல்லாம் எனக்கு போயே போச்சு..! கூடிய சீக்கிரம் நான் என் அத்தை பையன் சுக்ரேஷை கல்யாணம்
பண்ணிக்க போறேன்..” என்றாள் அவன் முகம் மாற்றத்தை பார்த்துக் கொண்டே.. நொடி நிமிடமானாலும் அந்த அழுத்தமான முகத்தில் தெரிந்த சிறிய அதிர்ச்சி அவளுக்கு மிக மிக உவப்பாக இருந்தது.