அசுரன் 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அசுரன் 6

 

 

ராவண்னின் அதி நெருக்கம்.. ஆண்மையின் அரவணைப்பை அவளுக்கு உணர்த்தி.. அவள் பெண்மையை விழிக்கச் செய்தது போல.. சட்டென எழுந்த ஒரு பெருமூச்சுடன் அவனை தள்ளி விட்டாள் ஆருஷி.. !! 

 

“ஸ்டே அவே..‌!” என்று கத்த தான் முயன்றாள். ஆனால் காத்து தான் வந்தது அவளது தொண்டையில் இருந்து.

 

“ஐ வில் ட்ரை பாஸ்..!” என்று கண்சிமிட்டி அவன் கூற.. அதே நேரம் கதவை திறந்து கொண்டு வந்தார் இன்பராஜ். நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஆரத்தோ மருத்தவர். சட்டென்று ஆருஷியிடம் இருந்து தனது தூரத்தை அதிகப்படுத்தினான் இராவண். இயல்பாக இருவரும் பேசுவது போல நிலை.

 

“சாரி.. டாக்டர்..! ஒரு எமர்ஜென்ஸி என்று மன்னிப்புக் கேட்டவர், “வெல்கம் பேக் ஆருஷி மேடம்.. ஹௌ இஸ் யுவர் ஆங்கிள் நௌ?” என்று விசாரிக்க..

 

“பர்ஃபெக்ட்லி ஆல் ரைட் நௌ டாக்டர் அண்ட் தாங்க்ஸ் டாக்டர்” என்றவள் “நீங்க வர சொன்னதா சிஸ்டர் சொன்னாங்க..” என்று இன்பராஜூடம் அவள் கேட்க..

 

நெற்றி சுருங்க யோசித்தவர் "இல்லை மேடம்.. நான் ஒன்னும் உங்களை வர சொல்லலையே? ஜஸ்ட் உங்க ஹெல்த் பத்தி பேசிட்டு இருந்தேன். ஒருவேளை அதனால சொல்லி இருப்பாங்களோ?" என்று அவரும் யோசிக்க..

 

ஆருஷி ராவண்னை பார்க்க அவனும் அடக்கப்பட்ட சிரிப்போடு அவளைப் பார்த்து மீண்டும் கண்சிமிட்டினான்.

 

ராவண்னிடம் ஒரு‌ முறைப்பை கொடுத்துவிட்டு கிளம்பி விட்டாள்.

 

“பிராடு பைய.. இவன் தான் ஏதோ பிராடு பண்ணி என்ன வர வச்சிருக்கான்” என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றாள் ஆருஷி.

 

அவள் சென்றதும் ஏற்கனவே இருவரும் பேசிக் கொண்டிருந்த பிறந்த குழந்தைகளுக்கு வரும் எலும்பு சம்பந்தப்பட்ட வியாதி பற்றிய டாபிக்கை இன்னும் தீவிரமாக பேச ஆரம்பித்தார்கள் ராவண்னும் இன்பராஜூம்.

 

 

பிறை நிலா உலாவும் அழகிய இரவு…

அறையில் சில வாசனை மெழுகுபத்திகள் ஆங்காங்கே ஏற்றி இருக்க..

இருளும் ஒளியும் கலந்து தேவலோகமாய் காட்சியளித்தது அந்த அறை.

 

அந்த அறையில் தான் படுத்திருந்தாள் மாது ஒருத்தி வதனத்தில் பிறந்த குழந்தையின் கவலையில்லா புன்னகை…!

 

மெல்லிய காற்று அவள் உடலோடு விளையாட ஆங்காங்கு சிலிப்பிக் கொண்டு நின்றது அவ்வளவு முடிக்கற்றைகள். அந்த காற்றோடு அவை சண்டையிடுகின்றனவோ?

 

மெல்ல புரண்டு படுத்தாள் பாவை‌. அவளது பால் நிற மேனியின் அங்கலாவணியங்கள் பார்ப்பவருக்கு மெல்லிய சலனத்தையாவது ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்..!

 

தான்‌ அணைத்திருப்பது யார் என்பதை உணராமல்.. அவள் பெண்மைக்கான அரவணைப்பாக ஏற்று.. அணைத்திருப்பவனின் இடுப்பில் கை போட்டு அவனைத் தழுவியப்படி உறங்கினாள்.

 

அவளது செழுமையான முந்தானைக் குழந்தைகள் அவன் நெஞ்சில் மெத் மெத்தென பதிய.. அவள் முகம் அவன் முகத்துடன் ஒட்டிக் கொண்டது. அவளின் பவழ இதழ்கள் அவன் உதடுகளை உரசியது. அவள் விட்ட மூச்சுக் காற்று மெல்லிய இளஞ் சூட்டுடன் வந்து அவன் முகத்தில் மோதி விலகிப் போனது..! 

 

அவள் இடது கால் உயர்ந்து அவன் காலில் படர்ந்தது, மெல்லிய பூங்கொடி பற்றுக்காய் பெரும் மரத்தினை பற்றுவது போல..

 

அவளின் இந்த அதீத நெருக்கம் அவனை குப்பென தாக்கியிருந்தது. அவன் உடம்பு முழுவதும் படர்ந்த தாப உஷ்ணம் ஜுர வயப் பட்டவனாக உணர வைத்தது.. !! அவள் மேனியில் சுகந்த வாசனை அவனை நிலைக்குலையச் செய்தது.

 

தான் அணைத்திருப்பது தன் தலையணை அல்ல தலைவனை என்பதை உணராத அளவுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் பேதை. அவனது தேகமோ தன் வெப்பத்தை அவளது பெண்மைக்குள் கரைத்து.. தன்னைக் குளிர்வித்துக் கொள்ளத் துடித்தாலும்.. தன் துடிப்பு… தவிப்பு எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டான் பெரும் பாடுபட்டு. 

 

பின் அமைதியாக ரசனையாக அவள் தழுவலை ரசித்து.. அவளின் சுவாசத்தை சுவாசித்து.. அவளின் பெண்மையின் மெல்லிய கதகதப்பை தனக்குள் உணர்ந்து கொண்டிருந்தான்..!!

 

பல நிமிடங்களுக்கு மேலாகவே அந்த நிலையில் அவன் கிறங்கியிருந்தான்..! அவளின் அருகாமையில் தன்னை தொலைத்து மயங்கி முயங்கி இருந்தான்..!

 

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அவளின் அழகு வதனத்தில் விழுந்து தவழ்ந்து கொண்டிருந்த அவளின் கூந்தல் உதிரிகளை தன் ஒற்றை விரலால் நகர்த்தி அவள் காதோரம் ஒதுக்கி விட்டான்.. 

 

அதி மென்மையாக... 

நனி காதலாக..

வளர்‌ மோகமாக..

 

மெல்ல அவள் உணரா வண்ணம் தன் அதரங்களை அவள் நெற்றியில் பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான். அந்த முத்தம் தந்த பூரிப்பும் நிறைவும் அவனுக்கு கிடைத்த பேர் புகழுக்கு இன்பத்துக்கு முன் எதுவுமே இணையில்லை எனத் தோன்றியது..

 

வெகு நாளைக்கு பின் அவளை தீண்டியதும் தன் ஆண்மை தேகச் சிலிர்ப்பை தன்னுள் தக்க வைத்துக் கொண்டு மென்மையாக அவள் நெற்றியில் இருந்த தன் அதரங்களை கீழே இறக்கினான். 

ஆனால் அவளை விட்டு பிரிய மனமில்லை..!

 

அவளின் வெப்ப சுவாச மூச்சை முகர்ந்து.. தன் தன் நுரையீரலில் அல்ல இதயத்தில் நிலைத்து கொண்டிருந்தான், பின்னாளுக்காக..!

 

எத்தனை தான் பெரும் செருக்கும் திமிரும் ஆணவமும் கொண்ட ஆண்மகனாக இருந்தாலும் பெண்மையின்றி எதுவும் நிறைவு பெறாது என்பதை சிறிது காலமாக உணர்ந்து தான் இருந்தான் கோமகன்.

 

அவளின் சிவந்த கனிந்த இதழ்கள் 

அவன் இதழ்களை இணை சேர்க்க கூவி அழைக்க..

 

மெல்ல அவைகளின் ஆசைகளை ஆவணப்படுத்தினான் ஆடவன்.. இதழ்களை இணைக் கோர்த்து.‌.!

 

ஒரே முத்தம்தான்.. அதுவும் மெல்லிய முத்தம் தான்..!

 

சட்டென அவள் முகம் சிலிர்த்து சிணுங்கியது. உதடுகள் சுருங்கி.. மீண்டும் இயல்புக்குத் திரும்பியது..!! 

 

அவள் உதடுகளின் தாக்கம் அவனுள் பெரிய ஏக்கத்தை எழுப்பியது. மீண்டும் மீண்டும் அவை வேண்டுமென ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாட்டினான் இந்த ஆறடி உயர ஆண்மகன்..!

 

அவள் மீண்டும் இயல்பு நிலையில் தூங்க.. தன் உதடுகளால் அவளது ஒட்டிய உதடுகளை மெல்ல பிரித்து, அவள் கீழ் உதட்டை மட்டும் கவ்வி மெதுவாக உறிஞ்சினேன்.. !!

 

”ம்ம்ம்ம்.. !!” என்கிற நீளமான முணகல் ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட, அவள் கை அவனின் முதுகில் சற்று அழுந்திப் பதிய.. சற்றே திணறித்தான் போனான் திணறடிக்கும் அவளின் நெருக்கத்தில்.. அசரடிக்கும் அவள் அழகில்..!

 

அவள் உதட்டின் தேனரசம் அவனுக்குள் இறங்க.. அவனோ கிறங்கினேன். அவள் பின் கழுத்தில் தன் கையை வைத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான்..!! தினவெடுத்த திமில்கள் இரண்டும் அவன் நெஞ்சில் நசுங்க.. அவள் உதடுகளோ அவன் முத்தத்தை ஏற்று அவனுக்காக விரிந்தது.. !!

 

அவள் உதட்டில் அமுதம் பருகிய அவன் சுவைப்பை நீட்டிக்க.. கொஞ்சம் அழுத்தமாக..!

கொஞ்சம் தாபமாக..!

 

அவனின் முத்த யுத்தத்தில் அவளின் தூக்கம் மெல்ல மெல்ல களையத் தொடங்கியது. அவளது முகம் சற்று அசைந்து.. இமைகளுக்குள் இருந்த விழிகள் நகர்ந்து.. பின் படக்கென கண்கள் திறந்தன.. !! 

 

அவள் உதட்டை உறிஞ்சிக் கொண்டிருந்த அவனை விழிகளை அகல விரித்துப் பார்த்தவள் திடுக்கிட்டு உடனே தனது உதடுகளை பிடுங்கிக் கொண்டு சடாரென அவள் இடது கை வைத்து அவன் முகத்தை இரண்டடி பின்னால் தள்ளி விட்டாள்.

 

அடுத்த நொடியே அவள் மென்மைகள் அவன் முரட்டு நெஞ்சை விட்டு அகன்றன. அவன் மேல் கிடந்த அவளது இடது கால் விலகிப் போனது.. !!

 

”குட் மார்னிங்.. பாப்பா… !!” எதுவுமே நடக்காததை போல அவன் வசீகரமாய் சிரித்தான்.

 

‘ பட் ‘ டென அவன் கன்னத்தில் அடித்தாள் அவனின் பாப்பா.

 

”ச்சீய் இடியட்.. என்னடா பண்ணிட்டு இருந்த..??” தூக்கக் கலக்கத்தை வெளிப் படுத்தும் விதமாக அவள் குரல் கரகரவென ஒலிக்க…

 

”ஜஸ்ட் ஒன்.. கிஸ்.. அவ்வளவு தான் டி..! அதைத் தாண்டி எதையுமே நான் செய்யல டி பாப்பா” என்றான் ரசனையாக அவளது இதழ்களை தன் கட்டை விரலால் வருடி.

வேகமாக அவனைப் பின்னால் தள்ளி விட்டாள்.

 

”நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்.. !! எவ்ளோ தைரியம் உனக்கு.. ? என்னை இப்படி கட்டிப் புடிச்சு படுத்துட்டு… கிஸ் பண்ணிட்டு இருக்க.?? எப்படி நீ உள்ள வந்த?” என்று திகைப்பாய்‌ தன் அறையை கதவை பார்க்க.. அதுவோ உள்ளுக்குள் தாழ் போடப்பட்டு இருந்தது.

 

விலகா அதிர்ச்சியோடு அவனை பார்க்க.. அவனோ கண் சிமிட்டி விசில் அடித்து அவள் பால்கனி ஜன்னலை காட்டினான்.

 

“எத்தனை முறை இப்படி வந்து எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு பாப்பா..” என்று அவன் விஷமமாய் கூற…

 

பேதைக்கோ கடந்த கால காதல் கூட கசடுகளாய் கசக்க.. “ஐ கால் செக்யூரிட்டி..! உன் பேர நாறடிக்குறேன் பாரு.." சீற்றமாய் அவள் பொங்க..

 

“தாராளமா கூப்பிடு.. இன்பேக்கெட் உங்க செக்யூரிட்டியில ஒருத்தன் நான் உள்ள வரும்போது என்னை பார்த்துட்டான். நீ தான் இப்படி மிட் நைட்ல என்னை வர சொன்னேனு சொல்லித்தான் வந்து இருக்கேன்.. கூப்பிட்டா உன் பேரும் சேர்ந்து தான் நாறும்” என்றான் அசலாட்டாய்..!

 

“ஹௌ டேர் யூ?” என்று ஆவேசமாய் எழ… சட்டென்று தடுமாறி அவன் மீதே விழுந்தாள். மீண்டும் ஒரு இதழணைப்பு இம்முறை அவள் விழிப்புடன் இருக்கையில்.. கொஞ்சம் கொதிப்புடன் இருக்கையில்..!

 

”என் பாப்பாவ.. என் செல்லத்த கிஸ் பண்ண.. எனக்கு என்ன பயம்..??”

அவள் நெற்றி முட்டி கூறியவனை விலகியவள்,

 

”எது செல்லமா..? நீ என் ஹஸ்பண்டுனு நினைப்போ..?” நிதானமாக அவனை கூர்ந்து பார்த்து கேட்டாள். அவள் இயல்புக்கு வந்து விட்டாள்.

தூக்கத்தில் இருந்து விழித்த போது உண்டான அதிர்ச்சி.. கோபம்.. பதட்டம்.. இப்போது அவளை விட்டு நீங்கியிருந்தது..

 

“அப்போ இல்லையா?? இந்த மாறா‌ இல்லைன்னா மாறும் இந்த உலகத்தில் எதுவுமே இல்லைன்னு சொன்ன பாப்பாவா டி நீ?” என்று இன்னும் காதல் சொட்ட சொட்ட வந்து விழுந்தது அவனது வார்த்தைகள். 

 

“இல்ல இல்ல.. நான் உன் பாப்பா இல்ல.. நீ என்னோட மாறா இல்லை..! அந்த காதல் கிறுக்கு பிடிச்ச கிறுக்கச்சி செத்துட்டா.. அவ எப்பவோ செத்துட்டா.. டாக்டர் இராவ

ண் திரேந்திரன் மாறவேல்.. இப்போ இங்க இருக்கிறது ஆருஷி.. ஆருஷி வள்ளியம்மை..!” என்று அந்த அறையே அதிர கத்தினாள் ஆருஷி..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top