அத்தியாயம்-3
கோவையின் மத்தியில் எளிமையான தோற்றத்தில் இருந்த நடுத்தர வீடு அது.. அந்த வீட்டில் உள்ளே இருந்து அந்த அதிகாலை நேரத்திலும் சாம்பிராணி வாசம் நன்றாக கமகமக்க.. அந்த வீட்டினையே தெய்வகடாச்சமாக காட்டியது. அந்த வீட்டின் சாமி அறையில் மணி அடிக்கும் சத்தம் கேட்க கூடவே..
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே..
என்று தன் குரலில் மொத்த பக்தியையும் தேக்கி வைத்துக்கொண்டு காசிநாதன் ஆரத்தியை காட்டிக்கொண்டிருக்க.. அவருக்கு அருகில் அதனை கடமையும், பக்தியுமாக கும்பிட்டுக்கொண்டிருந்தார் அவரின் தர்மபத்தினி வாசுகி. இருவரின் மனதிலும் கவலை அப்பிக் கிடந்தது. அதற்கு காரணமும் இருந்தது. ஆனால் அவர்களால் அந்த கவலையை தாங்கள் கும்பிட்டுக்கொண்டிருக்கும் விநாயகரிடம் தான் காட்ட முடிந்தது.
வாசுகிக்கு கண்கள் கலங்கி போக.. காசிநாதன் விபூதியை எடுத்து நெற்றியில் திருநீரை அப்பிக்கொண்டவரின் கண்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டிருக்கும் மனைவியை தான் மிரட்டியவாறே இருந்தது. அதில் வாசுகி தன் அழுத கண்களை அழுத்தமாக துடைத்துக்கொள்ள..
“ம்ச் நொய் நொய்ன்னு அழாத வாசு.. பாப்பா மட்டும் அத பாத்தா என்ன நடக்கும்னு தெரியும்ல.. இன்னிக்கி ஃபுல்லா பாப்பா நம்மள திரும்பி கூட பாக்க மாட்டா.. அதுதான் வேணும்றியா..”என்றவறோ சாமி அறையில் இருந்து வெறியேற… வாசுகியும் குங்குமத்தை எடுத்து நெற்றியின் உட்சியில் வைத்துக்கொண்டவறோ தன் கணவனை பிந்தொடர்ந்து வெளியில் வந்தார்.
“என்னையே அடக்குறீங்களே உங்க பொண்ண கொஞ்சம் தட்டிக்கேட்குறீங்களாங்க..”என அடங்கிய குரலில் அதே நேரம் அவரை குற்றம் சாட்டுவது போல வாசுகி பேச.. அதற்கு ஹாலில் போடப்பட்டிருந்த ஈசி நாற்காலியில் போய் உட்கார்ந்தவாறே முறைத்தவாறே..
“காலையிலையே ஆரம்பிக்காத வாசு.. என்ன நடக்கனுமோ அது நல்லபடியா நடக்கும்.. பொலம்பாத பொலம்புனா மட்டும் எல்லாம் உடனே நடக்கும்னு ஏதாவது சித்தர் சொல்லிருக்காறா..”என கேலியாக பேசியவரை கண்டு முறைத்த வாசுகி..
“இந்த பேச்சுக்கு மட்டும் ஒன்னும் குறை இல்லங்க.. கிட்டதட்ட மூணு வருஷம் ஓடி போச்சி நம்ம காதம்பரிக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சி.. ம்ம் எங்க ஆரம்பிச்சோமோ அங்கையே மறுபடி வந்து நிக்கிற மாதிரி ஒவ்வொரு தரமும் அங்கையே வந்து நிக்கிறோம்.. இதுக்கு என்னதாங்க வழி..”என கலங்கிய குரலில் பேசியவரை காண காசிநாதனுக்கும் வருத்தமாக தான் இருந்தது.
அவருக்கும் ஒரு தாயாக வாசுகியின் நிலை புரியதான் செய்தது. தான் பெற்ற பெண்ணுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க தானே அனைத்து தாயும் ஆசைக்கொள்வார்கள் அதனை தான் அவரும் நினைக்கின்றார்.. இதில் தவறு இருப்பதாக காசிக்கும் படவில்லை தான். ஆனாலும் வாசுகியின் புலம்பலை எதார்த்தமாக தன் பெரிய மகள் பார்த்தாலும் அங்கு தேவை இல்லாத பேச்சுக்களும், சங்கடங்களும் தான் தோன்றும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதனால் தான் வாசுகியை பெரும்பாலான நேரத்தில் அவர் அடக்குவதும்.
“இங்க பாரு வாசு.. நாம கலங்கி போய் நின்னா எல்லாம் சரி ஆகிடுமா சொல்லு.. பாப்பா தான் நாம கலங்கி போய் நிக்கிறதுக்கு வருத்தப்படும்.. ஏற்கனவே பாப்பாக்கு பயங்கர மனக்கஷ்டம் இதுல நாம வேற அத கஷ்டத்துல போய் தள்ளனுமா..”என அர்த்தமாக பேசியவரை கண்ட வாசுகிக்கும் அவர் கூறுவது புரியதான் செய்தது. ஆனால் பெத்த மனம் விடமாட்டேன் என்கிறதே.
வாசுகியோ.. “நம்ம கனகம் அண்ணாகிட்ட பேசிட்டீங்களா.. அவரு என்ன சொன்னாரு..”என்றவரின் குரலில் இப்போது கவலையை விட கொஞ்சம் ஆர்வம் மிளிர்ந்தது.
அதற்கு ஆம் என்று தலையாட்டிய காசியோ.. “அதெல்லாம் நிறைய பேசியாச்சி வாசு. அவனும் நிறைய வரன்கள பாத்துட்டு தான் இருக்கான்.. ஆனா அவங்கள எல்லாம் நம்ம பாப்பாக்கு முன்னாடி கொண்டு வர அவனே பயப்படுறான்.. பாப்பாவ பத்தி நிறைய மாப்ள வீட்ல சொன்னாலும் அவங்க அவள முதல பாக்கும் போது பாக்குற பார்வைய மட்டும் மாத்துறதா இல்ல.. பாப்பாவும் முதல அவங்க பார்வைய தானே ஆராய்றா..”என்றவருக்கும் மனம் கசங்கி பிழிய தான் செய்தது.
“பார்வைய வித்தியாசமா பாக்க இங்க என்னங்க இருக்கு.. பாப்பா கால பத்தி எல்லாருக்கும் சொல்லிதானே கூப்டுறோம்.. ஆனாலும் அவள இப்டி வித்தியாசமா பாக்குறாங்க.. ம்கூம்.. நல்ல ஆடி ஓடிட்டு இருந்த புள்ள.. அதுக்கு போயா இப்டி விசக்காய்ச்சல் வந்து கால் வளஞ்சி போனும்..”என்று மறுபடி கண்ணீருடன் புலம்பியவறோ.. “நம்ம எப்டிலாம்ங்க கடவுள கும்புடுறோம்.. ஆனா அவரு ஏங்க நமக்கு கருண காட்ட மாட்டிங்கிறாரு..”என்று மறுபடி அவர் புலம்ப ஆரம்பிக்க.. காசிநாதனுக்கு வாசுகியை சரிக்கட்டவே நாக்கு தள்ளியது.
“அய்யோ போதும் வாசு.. காலையிலையே இப்டி புலம்புறத மொத நிப்பாட்டு.. மணிய பாத்தியா பசங்க எழுந்துடுவாங்க.. எழுந்ததும் பெரியவ வேலைக்கும் சின்னவ காலேஜிக்கும் போவ நிக்காதா.. போ போய் சமையல பாரு..”என்றவர் அன்று வந்திருக்கும் தின நாளிதழை எடுத்து வைத்து உட்கார்ந்திவிட்டார். தன் கணவனின் போக்கை கவனித்த வாசுகியோ மனம் தாளாமல் பெருமூச்சைவிட்டவாறே சமையலைறைக்குள் புகுந்துக்கொண்டார்.
வாசுகி அங்கிருந்து நகர்ந்ததும் தான் காசிநாதன் தன் தலையையே நிமிர்த்தினார்.. அவருக்கும் தினம் தினம் மனைவியின் புலம்பலை கேட்டு தானே நாள் விடிவதும், முடிவதுமாக இருக்கின்றது. தன் பெரிய மகளின் வாழ்க்கையை எண்ணி அவருக்கும் கவலை இருக்க தான் செய்கின்றது.. இல்லை என்றேல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் அதற்காக யாருக்கோ தெரியாதவனிடம் பெண்ணை கட்டிக்கொடுத்துவிட முடியுமா.
அதுவும் அவருக்கு மிகவும் பிரியமான மகளாயிற்றே. காதம்பரி பிறந்தவுடனே தனக்கு தன் அன்னையே வந்து பிறந்திருப்பதாக நினைத்தார் காசிநாதன். காசிநாதன் பிறந்தவுடனே அவரின் அன்னை கமலம் இறந்துவிட்டார். காசிநாதனுக்கு முன்பு அவருக்கு ஒரு மகள் பிறக்க.. அவரின் பெயரோ லோகாம்பிகா. காசிநாதனை சிறிய வயதில் இருந்து வளர்த்தது அனைத்தும் லோகாம்பிகா தான். சொத்திற்கு ஒன்றும் குறை இல்லை. தந்தை குணாலன் தன் மனைவி இறந்த பிறகு தன் மக்களே போதும் என்ற நிலையில் மகளையும், மகனையும் சிறப்பாக வளர்த்து ஆளாக்கினார்.
லோகாம்பிகாவிற்கு படிப்பு அவ்வளவாக ஏறவில்லை. அதனால் பத்தாம் வகுப்பிற்கு பின்பு வீட்டிலையே இருந்துவிட்டார். ஆனால் காசிநாதன் அப்படி இல்லை. நன்றாக படித்து அந்த காலத்திலையே கிராம நிர்வாக அலுவலர் ஆகிவிட்டார். லோகாம்பிகா தன் தம்பியை நிலையான ஒரு வேலையில் உட்கார வைத்த பின்பே திருமணம் செய்துக்கொண்டார். ஏனோ சொத்துக்களை நம்பி வாழ்ந்துவிட கூடாது என்று குணாலனின் வாக்குப்படி நல்ல வேலையில் உட்கார்ந்தார் காசிநாதன்.
அதன் பிறகு லோகாம்பிகாவிற்கு பக்கத்தில் ஊரிலையே மில் உரிமையாளரான வேதநாயகத்தை பேசி முடித்து திருமணம் செய்து வைத்தார் குணாலன். வேதநாயகம் நல்ல குணம் தான். ஆனால் அவரது குடும்பம் தான் கொஞ்சம் கெடுப்பிடியான ஆட்கள். அந்த கெடுபிடியான ஆட்களால் நல்ல அன்பு நிறைந்த லோகாம்பிகாவின் குணம் அல்லவா மாறிவிட்டது.
ஆம் புகுந்த வீட்டில் லோகாம்பிகாவின் குணங்கள் அடிப்பட்டு அடிப்பட்டு இப்போது அவர் குணமே கெடுபிடியாக மாறிவிட்டது. இது செய்தால் குற்றம் அது செய்தால் தவறு. இப்படி செய் அப்படி செய் என்று முன்பு ஆணையிட்டு, அதிகாரம் செய்து அவரை ஆட்டிப்படைத்து இப்போது அவருக்கான நேரம் போல அனைவரையும் ஆட்டி வைக்கின்றார். ஆம் தன் புகுந்த வீட்டின் முழு பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டவர் தன் கணவன், மாமியார், மாமனார் ஏன் தன் இரண்டு பிள்ளைகள் என்று அனைவரையும் தன் கைக்குள் வைத்து அடக்குகின்றார் அவர்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இதில் தேவையில்லாமல் அவரின் அதிகாரத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பது என்னவோ அப்பாவியான வாசுகியும், அக்காவின் மீது வளர்த்த பாசமும், அதிகப்படியான அன்பும் வைத்திருக்கும் காசிநாதன் தான். இவர்களுடன் சேர்ந்து அப்பாவியான அர்ச்சனாவும். ஆனால் அவருக்கு எப்போதும் கட்டுப்படாமல் சுற்றும் ஒரே ஆள் காதம்பரி மட்டுமே.
அதனாலே காதம்பரியை சிறுவயதில் இருந்தே லோகாம்பிகாவிற்கு பிடிக்காது. அதனை பல தடவை வார்த்தைகளாலும் காட்டி வதைத்திருக்கின்றார். சிறுவயதில் அதனை கேட்டு காதம்பரி அழக கூட செய்திருக்கின்றாள்.. ஆனால் இப்போது பதிலுக்கு பதில் பேசிவிட்டே ஓய்வாள். அதற்கும் லோகாம்பிகா அவளை கடுமையாக சாடுவார்.
காதம்பரி அதற்கும் பதில் கொடுத்தால் லோகாம்பிகா தன் தம்பியையும், வாசுகியையும் தான் கடுமையாக விமர்சிப்பார்.
“பாருடா உன் பொண்ணு எப்டி எல்லாம் திமிரா பேசுறான்னு.. இதான் உன் பொண்டாட்டி வளத்த லட்சணமா.. பெரியவங்களுக்கு மரியாத தரதே தெரியாதா உன் பொண்ணுக்கு.. இஷ்டத்துக்கு பேசுறா அதான் ஆண்டவன் அளந்து வச்சிருக்கான் கால..”என்று அவரும் அவளின் குறையையே பெரிது பண்ணி பேச.. மற்றவர்களை அடக்குவது போல காசிநாதனால் அடக்க முடியாது. லோகாம்பிகா அவரை வளர்த்த பாசம் கண்ணை மறைக்க தன் அக்காவை எதிர்த்து பேச அவருக்கு மனமே வராது.
வாசுகிக்கோ இன்னும் சுத்தம். தன்னை லோகாம்பிகா தான் பெண் பார்த்து காசிநாதனுக்கு கட்டி வைத்தார் என்ற எண்ணத்திலையே ஒவ்வொரு முறை காதம்பரியை அவர் ஏதாவது கூறும்போது காதம்பரியை ஏதெனும் பேசாமல் கண்களாலையே கெஞ்சிவார் வாசுகி. சிறுவயதில் காதம்பரியின் எதிர்த்து பேசுவதால் அடி கூட கிடைத்திருக்கின்றது வாசுகியிடமிருந்து.
“அவங்க என்ன பேசுனாலும் தயவு செஞ்சி எதிர்த்து பேசாத காது..”என்று தன் அன்னை கெஞ்சினாலும் அவள் அவரை முறைத்துவிட்டு செல்வாளே தவிர கேட்கமாட்டாள். ஏனென்றால் அவர் அப்படி லிமிட் தான்டி தான் பேசுவார்.
சிறுவயதில் அதற்காக சூடு கூட வாங்கிருக்கின்றாள். அனைத்தும் காசிநாதனுக்கு தெரியாமல் தான். என்ன இருந்தாலும் அக்கா மீது பாசம் எவ்வளவு இருக்கின்றதோ அதே அளவு பெரிய மகள் மீதும் இருக்கும். அதனால் ஏதெனும் தேவை இல்லாத பிரச்சனை வருமோ என்று தன் நாத்தனாருக்காக தன் மகளுக்கு சூடு வைத்ததை கணவரிடம் மறைத்துவிட்டார். அடுப்பிற்கு பக்கத்தில் நின்றிருந்ததாள் சுட்டுவிட்டது என்று வாசுகி கதை கட்டிவிட்டார்.
லோகாம்பிகாவிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். மகன் கார்த்திகேயன். எம்டெக் படித்து முடித்து கோயம்புத்தூரில் ஒரு கம்பெனி ஒன்றினை நிர்வகித்து வருகின்றான். அப்படியே அன்னையின் குணத்தை பற்றிக்கொண்டிருப்பவன்.
அவனுக்கும் காதம்பரிக்கும் எப்போதுமே ஒத்துவராது.. அறியாத வயதில் ஆரம்பித்த மோதல். இப்போதும் அதிகமாகியதே தவிர குறையவில்லை. அதுவும் இடையில் நடந்த விடயத்தால் மொத்தமாக மோதலாகி போயிருந்தது.
லோகாம்பிகாவின் மகள் சிந்துஜாவிற்கோ காதம்பரி வயது தான். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. காதம்பரியை அதனை வைத்து தான் அடிக்கடி லோகாம்பிகா குறை கூறுவார். “பாத்தியா உன் வயசு தான் ஆகுது.. ஆனா இன்னிக்கி கல்யாணம் ஆகி அவளுக்கும் ஒரு வயசுல குழந்தை இருக்கு.. வாய அடக்குனாலே போதும் உனக்கும் கல்யாணம்ன்ற வேடிக்கை எல்லாம் நல்லாவே நடக்கும்..”என்று அவளை மனம் நோகும்படி பேசுவார் அவர்,
“நல்ல மனசு இருக்குறதால தான் நான் யாரையும் லவ்வுன்னு பண்ணி இழுத்துட்டு வரல.. உங்க பொண்ணு மாதிரி..”என்று அவருக்கு பதில் அளித்துவிட்டே நகருவாள். அதில் லோகாம்பிகாவின் முகம் கறுத்து போகும்.
ஆம் அவரது மகள் சிந்துஜா காதல் திருமணம் தான். அதுவும் அவளுடன் பள்ளியில் படித்த தோழனை தான் திருமணம் செய்திருக்கின்றாள். பள்ளியில் இருந்து ஆரம்பித்த காதலாம். சிந்துஜா இதனை முதலில் வீட்டில் கூற அவ்வளவு எதிர்ப்பு அதற்கு. அதுவும் லோகாம்பிகா தான் முதலில் சிந்துஜாவிற்கு தடையாக இருந்தார்.
“உன்ன படிக்க அனுப்புனா காதலா பண்ற..”என்று சிந்துஜாவினை அறைய.. சிந்துஜாவோ அடுத்த இரண்டு நாட்களில் வீட்டினை விட்டு வெளியேறிவிட்டாள்… "என் லவ்வுக்கு அஸப்ட் பண்ணுனு நான் கேட்கல.. பெத்தன்ற முறையில தகவலா சொன்னேன்.. அதுக்கு அடிக்கவா செய்ற.. நீயா கல்யாணம் செஞ்சிவச்சிருந்தா இந்த அசிங்கம் உனக்கு தேவையா..”என்று சிந்துஜா தெனாவட்டாக எழுதி வைத்துவிட்டு செல்ல..
லோகாம்பிகாவின் கணவன் வேதநாயகமோ மகள் மீது இனியில்லா பாசத்தை வைத்திருப்பவர்.. அவரோ லோகாம்பிகாவை தாளித்து எடுத்துவிட்டார். “வீட்ல முறையா வந்து சொன்ன பொண்ண அடிச்சி இப்டி ஊர விட்டு ஓட வச்சிட்டல்ல நீ.. ராட்ஸஸிடி நீ.. இப்போ என் பொண்ணு எங்க இருக்காளோ...”என்று புலம்பியவர் எப்படியோ சிந்துஜா காதலித்த பையனின் வீட்டிற்கு சென்று அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்துவிட்டார்.
தன் மகளை கையோடு அழைத்து வந்தவர் அடுத்த வாரத்திலையே இருவருக்கும் ஊரரிய திருமணமும் செய்துவிட்டார்.. லோகாம்பிகா முதலில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தன் மகள் காதலித்து திருமணம் செய்த கோபிநாத் கொஞ்சம் வசதியில் உயர்ந்து இருந்ததால் சரி என்று ஒத்துக்கொண்டார்.
இப்போது தான் போன வருடம் சிந்துஜாவிற்கு ஒரு மகன் பிறக்க லோகாம்பிகா அவளை முழுதாக ஏற்றுக்கொண்டார். சிந்துஜாவிற்கு தன் அன்னையின் குணம் அவ்வளவாக பிடிக்காது. அதுவும் காதம்பரியிடம் அவர் நடந்துக்கொள்ளும் விதம் சுத்தமாக பிடிக்காது. சிந்துஜா அப்படியே அவளின் தந்தை போல.. நல்ல குணம்.
“ஊனத்த வச்சி அவள எதுக்கும்மா இப்டி ஒதுக்கிட்டும், தாளிச்சிக்கொட்டிட்டும் இருக்க.. அவ குணத்துக்கு பக்கத்துல என்னால கூட போக முடியாது.. தேவ இல்லாம அவகிட்ட வச்சிக்கிட்டு அப்புறம் வாங்கிக்கட்டிக்காத.. இன்னிக்கி மாமாவும், அத்தையும் அமைதியா இருந்தாலும் இப்டியே எப்போதும் இருப்பாங்கனு சொல்ல முடியாது..”என்று மிரட்ட.. அவரோ அதனை காதில் கூட வாங்குவதாக இல்லை.
“போடி என் தம்பியும், அவன் பொண்டாட்டியும் எப்போதும் என்ன மீறவும் மாட்டாங்க, என்ன எதிர்க்கவும் மாட்டாங்க..”என்று தன் தம்பியின் அன்பை அவர் தவறாக உபயோகிக்க… என்றாவது ஒருநாள் அது வரம்பு மீறி போகும்போது தன் தம்பியின் தந்தையின் சீற்றமான முகத்தை பார்க்க தான் போகிறார் என்று அவருக்கு புரியாமல் போனது.
(வரலாமா...)