அசுரன் 5

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அசுரன் 5

 
பார்க்கிங் தூணில் தோளை முட்டுக் கொடுத்து, வலது புற பாக்கெட்டில் கைவிட்டு ஸ்டைலாக நின்று இருந்த ராவண்னை கண்டதும் அல்லுவிட்டது சுக்ரேஷூக்கு.
 
“போச்சு.. போச்சு.. எல்லாத்தையும் கேட்டுட்டான் போலவே.. இவ.. இந்த ஆருஷியும்.. அவ வாயும்..” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் சுக்ரேஷ்.
 
இவர்களை நோக்கி அழுத்தமான அடிகளோடு ராவண் வர.. “போச்சு.. போச்சு.. வரானே.. வரானே.. கிட்ட வரானே..! சுத்தம். போச்சு, இன்னைக்கு அப்பா கிட்ட வாங்கி கட்ட போறோம்..! இவன் ஏதாவது பேசினால் கம்முனு கேட்டுட்டு போயிடணும். எதிர்த்து பேச்சு என்ன மூச்சு கூட விடக்கூடாது..!” என்று பயத்தோடு நின்று இருந்தான் சுக்ரேஷ்‌.
 
அவனின் பயம் எல்லாம் ராவண் ஏதாவது பேசினால் அதற்கு பதில் பேசும் தன் மாமன் மகளை கண்டு தான்..!
 
பின்னே.. இவன் பாட்டுக்கு மருத்துவமனை வேலையை விட்டு பாதியில் சென்று விட்டால்?? காம்பன்ஷேசன் அது இது என்று கேட்டால்?? என்ன செய்வது? கிரிதரனிடம் பேச்சு வாங்கி மாளாது..!
 
“இந்த ஆருஷியும் வாயை கொஞ்சம் அடக்க கூடாதா? ஆண்டவா.. என் மாமி போல இவளுக்கு வாயை கொஞ்சமாக வைத்திருக்கக் கூடாதா? என் அம்மா போல அதிகமாக வைத்து விட்டாயே..!” என்று அவசரமாக கடவுளிடம் வேண்டுதலையும் பிரார்த்தனையையும் கூடவே தங்களை நோக்கி வரும் இராவண்னை பார்த்து பவ்யமாக சிரித்து வைத்தான் சுக்ரேஷ்.
 
சுக்ரேஷை ஒரு மார்க்கமாகவும்.. ஆருஷியை பல மார்க்கமாகவும் பார்த்துவிட்டு அவர்களை கடந்து சென்றான்‌‌, எதுவும் பேசாமலே..!
 
அந்த மார்க்கத்திற்கான காரணங்கள் விரைவிலேயே தெரிய வரப் போவது தெரியாமல் செல்லும் ராவண்னை இகழ்ச்சியாக பார்த்து சிரித்தாள் ஆருஷி.
 
“பாரு.. பாரு.. பெருசா அந்த டாக்டர் என்னமோ பெரிய பருப்புனு பேசின.. கடைசியா பப்புரு மிட்டாய் கணக்கா எப்படி பயந்து போறான் பாரு??” என்று சொல்லி சொல்லிச் சிரித்தாள் காரில் வரும் போது சுக்ரேஷிடம் ஆருஷி.
 
ஆனால் அவனோ கோபமாக அவளை கடிந்துக் கொண்டான். “அவசரப்பட்டு யாரையும் நாம கணிக்க கூடாது ஆருஷி.. நம் கணிப்பை கடந்தவங்களும் உண்டு..! பொறுமையா இருன்னு சொன்னா நீ கேட்கவே மாட்டேங்குற.. எங்க அம்மா கூட சேர்ந்து சேர்ந்து நீயும் அவசர குடுக்கையாகவே மாறிட்ட.. என்னமோ போ..!” என்று புலம்பி தள்ளி விட்டான்.
 
வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக அம்மாவை அழைத்து ஆருஷியை பார்த்துக் கொள்ள சொன்ன சுக்ரேஷ் அவசரமாக மருத்துவமனையை நோக்கி ஓடினான். 
 
“இவள் பேசிய பேச்சைக் கேட்டு அந்த திமிரு புடிச்ச சைக்கோ டாக்டர் எதுவும் செய்யாமல் இருக்கணுமே ஆண்டவா..! ஏதாவது செஞ்சா அப்பா பேசி பேசியே காது வழியா மொத்த ரத்தத்தையும் வரவைச்சு என்னை சாகடித்து விடுவார்” என்று புலம்பலோடு..!
 
ஆருஷியின் வீடு அந்த காலத்து பெரிய வீடு. 
 
அக்குடும்பத்தின் ஆணிவேர் அழகப்பன் வள்ளியம்மை தம்பதியினர்..!!
 
இன்றோ ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டது. வயோதிகத்தின் காரணமாய் படுக்க படுக்கையாக இருக்க.. அவர்களின் கிளைகள் தான் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
 
கிளைகள் என்று சொல்வதை விட கிளை. ஆம்.. அவர்களை தாங்கிப் பிடிப்பது அவர்களது மகள் குடும்பம் தான். 
 
மகன் சிறுவயதிலே வெளிநாட்டுக்கு படிக்க சென்றவன் அங்கேயே நல்ல வெள்ளை நிறத்து கோல்டன் கலர் சிகை கொண்ட அழகியோடு, படிக்கும் காலத்திலேயே லிவிங் வில் இருந்து பின் திருமணம் செய்து கொண்டான். 
 
மகனின் இந்த போக்கை கண்டு கொதித்து எழுந்தார் அழகப்பன். 
 
“எத்தனை பாரம்பரியமிக்கது நம்ம குடும்பம்.. அதன் பாரம்பரியம் தெரியும் தானே? போய்யும் போய்யும் ஒரு வெள்ளகாரி கூட குடித்தனம் நடத்துறியே டா? வெட்கமா இல்ல? ஒழுங்கா அவள தல முழுகிட்டு வீடு வந்து சேரு.. நீ படிச்சு கிழச்சது எல்லாம் போதும்” என்று ஃபோனில் கத்த.. அவரை கத்தலில் விட்டு, காதலில் திளைத்து விட்டான் அவன்.
 
அழகப்பனோ மானம் மரியாதை குடும்ப கவுரவம் என்று அதிகமாக பார்ப்பவராயிற்றே??!!
 
அப்புறம் என்ன?? வழக்கமான டிபிக்கல் தந்தையை போல தலை முழுகி விட்டார் மகனை, ஒரு சொம்பு தண்ணீரை தலையில் ஊற்றி..!
 
காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர் அழகப்பன். சிறு வயதிலேயே பிழைக்கச் சென்னை வந்தவர் அண்ணாச்சி என்ற பெயரில் தொடங்கிய பாத்திரக்கடை இன்று பாத்திர கடலாக சென்னையில் 3 கிளைகளோடு வளர்ந்து பிரம்மாண்டமாக நிற்கிறது.
 
கூடவே அவர் ஆரம்பித்த மருத்துவமனை இன்னும் பிற தொழில்களும் வாரிசான மகன் காதலி பின்னால் சென்று‌ விட..
 
 
“போடா போ..! உனக்கு நான் அப்பன்..! நீ போனால் உன் பின்னே வா கெஞ்சிக் கொண்டு வருவேன்னு பார்த்தியோ?” என்று வீம்பு கொண்டவர், தனது மகள் மீனாட்சிக்கு பொருத்தமான வரனாக சந்திரசேகரனை திருமணம் செய்து வைத்தார். 
 
சந்திரசேகனும் மாமனாருக்கு ஏத்தபடி நடப்பவர். தொழில்களில் எல்லாம் அவருக்கு பக்கபலமாக உறுதுணையாக இருந்தார். 
 
அழகப்பனுக்கு யாரை எங்கே அடிக்க வேண்டும் என்று நன்றாக தெரியும்.
இல்லையென்றால் இப்ப பெரிய சென்னை மாநகரத்தில் பாத்திர கடல்களை கட்டி ஆள முடியுமா என்ன?
 
சந்திரசேகரின் ஒரே தங்கை ரூபிணி. பெற்றோர்கள் அற்ற அவர்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டவர், தனது பங்காளி மகனான கிரிதரனுக்கு திருமணம் செய்து வைத்து தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். 
 
தன் வாழ்வு மட்டுமல்லாமல் தங்கையின் வாழ்க்கையையும் வளமாக மாற்றிய மாமனார் மீது ஏக மரியாதை பக்தி சந்திரசேகருக்கு. அதனால் அவர் எள் என்பது முன் எண்ணெயாக அனைத்து வேலைகளையும் கணக்கச்சிதமாக முடித்து வைப்பார். மாமனார் என்ற மரியாதையை தாண்டி அதிக விசுவாசம் கொண்டவர் சந்திரசேகர்.
 
மரியாதை தெரிந்த மாப்பிள்ளையின் மீது அத்தனை நம்பிக்கை. கூடவே ஒற்றை மகளின் கணவன் என்று பாசம் வேறு. 
 
அதுவும் திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பின் பல லட்சங்களை வைத்தியத்துக்கு செலவழித்து பிறந்தவள் ஆருஷி வள்ளியம்மை. 
 
அவள் பிறப்பதற்காக அழகப்பன் தண்ணீராய் பணத்தை செலவு செய்து மகளுக்கு அத்தனை வைத்தியம் பார்த்தார். அந்த வைத்தியத்தின் முடிவில் அவர்கள் குல வாரிசாக வந்து உதித்தாள் ஆருஷி.
 
எதையும் வியாபாரமாகவே பார்க்கும் அழகப்பனுக்கு, “ஒத்த குழந்தைக்கு நம்ம எத்தனை செலவு செஞ்சு இருக்கோம். நாம ஏன் இது மாதிரி ஹாஸ்பிடல் கட்ட கூடாது?” என்று மருமகனிடம் கேட்க…
 
என்றைக்கு மாமனாரின் பேச்சிற்கு மறுபேச்சு பேசி இருக்கிறார் சந்திரசேகர்? அவரும் சரி என்று கூற அப்படி உதயமானது தான் இப்பொழுது ராவண் பணி செய்யும் மீனாட்சி மருத்துவமனை.
 
வள்ளியம்மை “எவ்வளவு சம்பாதிச்சாலும் கொஞ்சம் புண்ணியத்தையும் நாம சேர்த்து வைக்கலாம் தப்பு இல்லை..!” என்று அவ்வப்போது தர்ம காரியங்களில் பலவற்றில் ஈடுபடுவார். அப்படி அவர் ஈடுபடும் ஒரு காரியம் அவர்கள் மருத்துவமனைக்கு அவ்வப்போது இலவச கேம்ப்கள் நடத்துவது. 
 
முதலில் இதை அழகப்பன் தடுத்தாலும், “சும்மா இருங்க.. கோடி கோடியா நீங்க சேர்த்து வைத்த காசு நமக்கோ இல்லை நம்ம பிள்ளைகளுக்கு சேராது. நம்ம சேர்த்து வைக்கிற புண்ணியம் தான் சேரும். நம்மால பலனடைஞ்சவங்க அவங்க மனசு நிறைஞ்சு நல்லா இருன்னு சொல்ற ஒரு வாழ்த்து தான் அத்தனை செல்வம்..! அதை நீங்க என்னைக்கு புரிஞ்சுக்க போறீங்கன்னு தெரியல.. மத்த விஷயத்துல நான் உங்களை தடை பண்றது இல்லைல.. அதே மாதிரி இந்த விஷயத்துல நீங்க என்னை தடை பண்ணவே கூடாது..!” என்று‌
உத்தரவு போட்டுவிட..!
 
 
“ம்ம்.. சரி பிழைச்சு போ..!” என்று விட்டுவிடுவார் அழகப்பன். 
 
வயோதிகத்தின் காரணமாக அழகப்பன் அவ்வளவாக வெளியில் அலைய மாட்டார். பெரும்பாலும் அவர்களது மெயின் ப்ரான்ச்சில் அமர்ந்து கொண்டு மற்ற கிளைகளை இங்கிருந்து சிசிடிவி மூலம் கண்காணிப்பார்.
 
சில சமயம் அங்குள்ள கணக்கு வழக்குகளை இங்கிருந்து கம்ப்யூட்டர் மூலம் திடீரென்று சோதனை செய்வார். அதனால் எப்பொழுதும் அனைத்தையும் பக்காவாகவே வைத்திருப்பார் சந்திரசேகர். 
 
கூடவே கிரிதரனையும் தன் கூடவே வைத்துக் கொள்ள மச்சான்கள் இருவரும் அழகப்பன் தொழிலை நன்றாகவே பராமரித்தனர்.
 
அதற்காக அவர்களையும் அப்படியே விட்டுவிடவில்லை அழகப்பன். 
 
இப்படி அடுத்தவனுக்கு சொத்து சேர்க்க நாம உழைக்கிறோமே? நமக்கு என்ன தந்தாங்க? நாம இதிலிருந்து கொஞ்சம் சுரண்டினால் என்ன? என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விடக்கூடாது என்று மாதம் மாதம் லாபத்தில் குறிப்பிட்ட தொகை இருவருக்குமே கொடுத்து விடுவார் அழகப்பன். 
 
அதனால் ஒரே வீட்டில் இருந்தாலும் சாப்பாட்டு மற்ற செலவுகள் அழகப்பன் பார்த்தாலும், அவரவர் செலவை அவரவர் தனியாக பார்த்துக் கொள்வார்கள். மனைவி மக்களுக்கு வாங்கிக் கொடுப்பது சொந்தமாக நிலங்கள் ப்ளாட்டுகள் வாங்குவது கார் பைக் என்று அவரவர் விருப்பம்…
 
இப்படியாக அவர்கள் குடும்பம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் அவர்கள் வாழ்க்கையை திருப்பி போட்டது ஒரு விபத்து..! அதுவும் குலதெய்வ கோயிலுக்கு சென்ற வேளையில்..!
 
மகன் வீட்டை விட்டுச் சென்றதும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதையே நிறுத்திவிட்டார் வள்ளியம்மை. எப்பொழுதுமே வீட்டின் பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து வழிபட்டுக் கொள்வார்.
 
அழகப்பன் எவ்வளவு எடுத்து சொன்னாலும் சரி.. மீனாட்சி கடிந்து கொண்டாலும் சரி.. ஆருஷியும் செல்லமாக பாட்டியை வைதலும் சரி.. அவர் தன் நிலையிலிருந்து பிறழாமல் இன்று வரை அப்படித்தான் இருக்கிறார். 
 
ஆனால் மற்றவர்கள் எப்பொழுதும் செல்வார்கள். அதற்கு வள்ளியம்மை தடைச் சொல்ல மாட்டார். 
 
வள்ளியப்மைக்கு துணைக்கு என்று சந்திரசேகரன் தங்கை ரூபிணியையும் அவளது கணவன் கிரிதரனும் இருந்து கொள்வார்கள். 
பிள்ளைகள் ஆருஷியும் சுக்ரேஷும் பெரியவர்களோடு செல்வார்கள். 
 
அந்த முறை தை மாதம் பொங்கல் வைக்க சென்று வரலாம் என்று அழகப்பன் முடிவெடுத்து மகள் மருமகனோடு சென்றார். 
 
ஆருஷி அப்பொழுது பத்தாவது பொதுத் தேர்வு எழுத இருப்பதால் அவள் செல்லவில்லை. சுக்ரேஷூம் இருந்துவிட.. இவர்கள் மூவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழியிலேயே, எதிரே வந்த லாரியால் அடித்து தூக்கி எறியப்பட்டது அவர்கள் சென்ற கார். 
 
அதில் முன்னிருக்கையில் இருந்த‌ அழகப்பன் கதவு திறந்து கீழே விழுந்து விட.. அப்பளமாக நொறுக்கப்பட்ட காரில் இருந்து அதை வெட்டி எடுத்து தான் துண்டாகப்பட்ட பாகங்களாக மீனாட்சியையும் சந்திரசேகரையும் வெளியவே எடுக்க முடிந்தது. 
 
கீழே விழுந்த அழகப்பனுக்கு இடுப்புக்கு கீழ் எதுவும் வேலை செய்யவில்லை. 
 
அன்று முதல் அனைத்தும் மாறிவிட அழகப்பன் தலைமையில் அனைத்தையும் இப்பொழுது பார்த்துக் கொள்வது கிரிதரன். 
 
இறந்து போன பொண்ணுக்காக அழுவதா? இடுப்புக்கு கீழே வேலை செய்யாமல் இந்த முதிர்ந்த வயதில் கஷ்டப்படும் கணவனுக்காக வருந்துவதா?? இல்லை பெற்றவர் இருவரையும் பறி கொடுத்து இரவெல்லாம் தூங்காமல் வீறிட்டு அழுது எழும் பேத்திக்காக கவலைப்படுவதா? இப்படி தாங்களை அம்போ என்று விட்டு சென்ற மகனுக்காக கோபப்படுவதா? என்று தெரியாமல் தவித்துப் போனார் வள்ளியம்மை. 
 
அவருக்கு அந்நேரத்தில் உற்றத் துணையாக இருந்தது ரூபிணி தான். 
 
“நீங்க மாமாவ பாருங்க அத்த.. நாங்க ஆருஷிய பார்த்துக்கொள்கிறோம்” என்று ஆருஷியின் மொத்த பொறுப்பும் ரூபிணிடம் செல்ல..
அவளும் அத்தையோடு ஒட்டிக்கொண்டாள்.
 
 இப்பொழுது சுக்ரேஷ் சொல்வது போல அவளின் அந்த அதீத கோபம் சட்டென்று யோசிக்காமல் பேசுவது இதெல்லாம் ரூபிணி இடமிருந்து அவளுக்கு வந்த அரிய கலைகள்..!
 
இப்பொழுது காலில் சுளுக்கோடு வந்திருந்த பேத்தியை கண்டு பயந்து கண்கலங்கினார் வள்ளியம்மை. 
 
“நம்ம குடும்பத்துக்கு ஏற்கனவே நேரம் சரியில்ல கண்ணு.. நீ ஏன் கண்ணு இப்படி அலட்சியமா இருக்க..” என்று அவர் அழுக..
 
“ஐயோ ஆச்சி.. எனக்கு ஒன்னும் இல்ல. வழுக்கி விழுந்துட்டேன் அவ்வளவுதான்.. சுளுக்கு புடிச்சிருக்கு ஒரு வாரத்துல சரியாகிவிடும்” என்று பாட்டியை தேற்றினாள் ஆருஷி.
 
“இந்த ஸ்டூல் மாதிரி இருக்க செருப்பெல்லாம் போடாதன்னு சொன்னா நீ ஏன் கண்ணு கேட்க மாட்டேங்கிற? இப்படி போட்டு இருந்தா கால் எப்படி பேலன்ஸ் பண்ண முடியும்? இதுவே நீ நார்மலா செருப்பு போட்டு இருந்தேனா வழுக்குற நேரம் உன்னால பேலன்ஸ் பண்ணி இருக்க முடியும் இல்ல..” என்று அவர் அறிவுரை கூற, அதெல்லாம் அவளுக்கு வேப்பங்காய் கசந்தது.
 
“ஐயோ ஆச்சி..! அழுது புலம்பாத தாத்தா கிட்ட எதுவும் சொல்லாத..!” என்று கட்டளை இட்டவள்,
 
இந்த ஆச்சிக்கு எப்ப தான் இந்த மாடல் டிரெண்ட் எல்லாம் புரிய போகுதோ?” என்று புலம்பிய படியே அத்தையை பற்றுக் கோலாக பிடித்தப்படி தன் அறைக்குச் சென்றாள் ஆருஷி.
 
அழகப்பனுக்கு தன் பேத்தி என்றால் கொள்ளை பிரியம். அதனால் அவரிடம் எதையும் சொல்லி அவரை கவலை படுத்த வேண்டாம் என்று செல்லும் பேத்தியைக் கண்டு பெருமூச்சு விட்டார்.
 
அதே நேரம் அவளின் குணத்தையும் கண்டு வருத்தத்துடன் பார்த்திருந்தார் வள்ளியம்மை. என்று இவள் மாறப் போகிறாள் என்று..!
 
ஒரு வாரமாக ஆருஷி மருத்துவமனை பக்கம் செல்லவே இல்லை.
 
 கிரிதரனும் அதற்கு அனுமதிக்கவில்லை “என் கூட வந்து நம்ம கடைல ஒக்காந்துக்கோ பாப்பா.. அங்க எல்லாம் எங்கேயும் அலைய தேவையில்லை” என்று இரண்டு முறை அங்கு அழைத்து செல்ல..
 
அவளுக்கோ அந்த கசகச பேச்சு.. ஒரே கூட்டம்.. ஜனசந்தடி.. கூச்சல் சத்தம் இதெல்லாம் அலர்ஜியாக இருக்க.. இரண்டு நாள் சென்றவள் மூன்றாம் நாள் “மாமா என்னால் ஆகாது. நான் கால் நல்லான உடனே ஹாஸ்பிடல் பக்கமே போய்க்கிறேன் நீங்களே இதெல்லாம் மேனேஜ் பண்ணிக்கோங்க” என்று விட்டாள்.
 
“இதெல்லாம் உன் சொத்து பாப்பா நீ தான் பார்த்துக்கணும். அப்புறம் எப்ப தான் நீ இதெல்லாம் பழகுவ?” என்று அவர் அலுப்பாக கேட்க..
 
“நான் ஏன் பார்த்துக்க போறேன் எனக்கு புருஷனா வரவன் கிட்ட இதெல்லாம் பார்த்துக்க சொல்லிடுவேன். எனக்கு இருக்கவே இருக்கு ஹாஸ்பிட்டல் எனக்கு அது போதும். நான் அதை மெயின்டன் பண்ணிக்கிறேன். நான் படிச்சதும் அதுக்கு தானே?’ என்ற அவளை ஆயாசமாக பார்த்தவர் மனைவியிடம் கைகாட்டி சென்று விட்டார் 
 
ஒரு வாரம் கழித்து இப்பொழுதுதான் மருத்துவமனை உள் நுழைகிறாள்‌ ஆருஷி.
 
அவள் தன் கேபினுக்குள் நுழைய.. “மேடம் உங்களை டாக்டர் இன்பராஜ் நீங்க ஃப்ரீ ஆனதும் வந்து பார்க்க சொன்னார்” என்று விட்டு சென்றாள் ஒரு செவிலியப் பெண்.
 
மதிய உணவு வேளையின் போது அவள் டாக்டர் இன்பராஜை பார்க்க செல்ல.. அங்கே அவளை வரவேற்றது என்னவோ டாக்டர் இராவண் திரேந்திரன் மாறவேல் தான்.
 
அவனை கண்டதும் வேகமாக வெளியே போக முயன்றவளை தடுத்தது இராவண்னின் குரல்..!
 
“பார்க்கிங் போகலாமா?” அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப, அவளுக்கு வெகு அருகில் அவன்..!
 
கிட்டத்தட்ட சுவற்றோடு அவளை சிறையெடுத்து போல நின்றிருந்தான் அவன்.
 
அவன் கண்களை அவ்வளவு பக்கத்தில் பார்க்க… அவளுக்குள் என்னென்னவோ நிகழத் தொடங்கியது..!!
 
அந்த கண்களில் தெரிவது என்ன..?? கோபமா? ஆசையா..?? 
தாபமா? மோகமா…??
 
ஹாசல் நிற கண்களும் அவன் கூர் பார்வையும் அவளுள் ஏதோ செய்தது.
 
ஆருஷியின் நீளக்கண்களும்.. சிறகை போன்ற இமைகளும் மிகவும் கவர்ச்சியானவை..!! 
 
நீளமான மூக்கு..!! அதில் சிறிய ஒற்றை வைர மூக்குத்தி..!! கீழே தடித்த உதடுகள் கொண்ட சிவந்த அதரங்கள்..! சங்கு போன்ற வெண்ணிற நீளக்கழுத்து.. அந்தக் கழுத்தில் ஒட்டி உறவாடும் டைமண்ட் பென்டண்ட் செயினும்..!!
 
ம்ம்ம்.. அதற்கு கீழ் செல்ல முயன்ற‌ கண்களுக்கு கடிவாளமிட்டான் மருத்துவன்.
 
“அப்போ.. என் முடிய பிடிச்சு அடிக்க போறது இல்லையா பாஸ்?” என்றான்‌ வரவழைக்கப்பட்ட சோகத்தோடு. 
 
அவனை முறைத்து பார்த்தவள், “நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா.. கண்டிப்பா அது ஒரு நாள் நடக்கும்..!” என்றாள் கண்களில் கனல் தெறிக்க..
 
“ஐ அம் வெயிட்டிங்..!” என்றான் கண்களில் மின்னல் அடிக்க..
 
“ம்ம்ம்.. அப்புறம் எப்படி இருக்கீங்க.. பாஸ்?”என்றவன் அகலமாகப் புன்னகைத்தான். அதில் அவள் சீண்டப்பட..
 
“நீங்களே பாருங்களேன்.. எப்படி இருக்கேனு?” என்று நேராக நின்று கேட்டாள்.
 
அவளை அவன் ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து..
“சூப்பர்…!! லாஸ்ட் டைம் பாத்ததவிட.. இப்ப இன்னும் கூடியிருக்கு” என்றான் விஷமமாக.
 
“என்ன கூடியிருக்கு.?” என்றவள் கண்கள் கூட அவனிடம் சீற..
 
அவள் கோபத்தில் குளிர் காய்ந்தவன், சிரித்து “கொழுப்பு..!!” என்றான்.
 
“ஹலோ டாக்டர்.. மைண்ட் யுவர் வோர்ட்ஸ்!” என்று அவள்‌ விரல் நீட்டி எச்சரிக்க..
 
“இப்படி என் முன்ன விரல் நீட்டி பேசாதேனு உனக்கு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்..” என்று அவளை நெருங்கியவன், “அன்னைக்கு என்ன சொன்ன.. பார்க்கிங் தூணுல என் முடிய புடிச்சு முட்டணுமா? அதை விட
பெட்டர் ப்ளேஸ் சொல்லவா?” என்றவன்,
 
“உன் செக்ஸி லிப்ஸ்..!” என்று அவளது கீழ் அதரத்தை வருடினான் அதி அழுத்தமாக.. 
நனி ஆசையாக..
பெரும் தாபமாக..!
 

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top