மோகங்களில் 25
ஆழ்ந்த ஒரு முத்தம்!!
அவளை ஆள வேண்டும் தவிப்பு இருந்தாலும் அதனை தாண்டி அவள் செய்துவிட்டு வந்த காரியம், அவள் மேல் பொல்லாத கோபத்தை ஏற்படுத்தி இருந்தது துருவுக்கு.
மெல்ல அவனை விட்டு அவளை தள்ளி நிறுத்தியவன் அவளை பார்வையிட்டான். வேரிலிருந்து பிடுங்கப்பட்ட கொடி போல் வதங்கி துவண்டு நின்றாள். கொடி கம்பை தேடும் முல்லை கொடியாய் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் அனு.
‘இந்த பார்வைக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன். போடி!’ என்று பிடிவாதமாக அழுத்தத்தோடு அவள் முன் கைகட்டி நின்று இருந்தான் துருவ்.
“வல்லவா..” என்று மெல்ல அவள் ஆரம்பித்தவள் சட்டென்று அதை மாற்றி “சார்..” என்று அழைக்க.. இன்னும் அவனது கோபம் அதிகமாக, அவளை முறைத்தவன் “நான் சாராடி.. சாரா உனக்கு?” என்று அவள் அருகே நெருங்கி நின்று உருத்து விழிக்க..
இல்லை என்று சிறுபிள்ளை போல வேகமாக தலையாட்டினாள் அனு.
இப்படி பரிதாபமாக இருக்கும் அவள் மீது கோபப்படவும் முடியாமல்.. அவள் வருத்தப்படுவதை தாங்கவும் முடியாமல்.. அவள் செய்த செயலுக்கு தண்டிக்கவும் முடியாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான் துருவ்.
“ஏன் அப்படி செஞ்சிட்டு வந்த?” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு துருவ் கேட்க.. தவிப்போடு அவனைப் பார்த்தாள் ‘என்னை புரிந்து கொள்ளேன்!’ என்று!!
“வாயைத் திறந்து சொல்லு டி! இந்த கண்ணால பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்” என்றான் கடினமாக!
“அது.. பயாலஜிக்கல் மதர்..” என்று அவள் ஆரம்பிக்க..
“ம** …” என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவளை திட்டினான். இம்மாதிரி லோக்கல் வார்த்தைகள் எல்லாம் இவள் சில சமயம் பேசுவாள், அவளது ஏரியாவில் கேட்டிருக்கிறாள். ஆனால் துருவ்வோ ஹைஃபை..!! அவனிடம் லோக்கல் ஆளை பார்த்து சிறிது சிரிப்பு கூட அவளுக்கு வர.. இதழோரம் சிரிப்பில் துடிக்க அவனைப் பார்த்தாள்.
அருகே நெருங்கியவன் அவள் இதழ்களை கிள்ளி எடுத்து “சிரிக்கிறியா நீ?? நான் இவ்ளோ கோபப்பட்டு திட்டிக்கிட்டு இருக்கேன்.. உனக்கு வேடிக்கையா இருக்கா டி!” என்று உறுமினான்.
அனுவின் சிவந்த மெல்லிய கீழ் உதடு அவன் கைவசம் இருக்க.. இவளோ இப்போது சிரிப்பை கண்களில் காட்டி “இல்லை..” என்றாள்.
“இப்படி பார்த்த.. உன்னை எல்லாம்…” என்று அவள் இதழை நறுக்கென்று கிள்ளி விட்டான்.
அவளோ உதட்டை வருடி கொண்டே அவனை கீழ்கண்ணால் பார்க்க.. “பார்க்காத டி.. பார்க்காத டி.. இப்படி பார்த்து தொலையாத! இப்படி பார்த்து பார்த்து தான்.. நான் பைத்தியமா நிக்கிறேன் உன் மேல..” என்று அதற்கும் அவள் மீது எரிந்து விழுந்தான்.
“ஆமா.. ஆமா.. ரொம்ப முத்தின பைத்தியமா தான் நிக்கிறீங்க” என்று முணுமுணுத்தாள்.
“இல்லையா பின்ன? போனவ மூன்று மாசமா திரும்ப வருவ வருவேன்னு ஏங்கி ஏங்கி உனக்காக பைத்தியம் மாதிரி நிற்கிறேன் டி நானு” என்று சொல்லவும் அவள் அதிர்ச்சியோடு அவனை பார்க்க.. சுவாசிக்க மறந்து மீன் குஞ்சு என திறந்திருந்து அவளது இதழ்களுக்குள் தன்னிதழ்களை கொடுத்து சுவாசம் கொடுத்து பெற்றவன், மீண்டும் ஒரு ஆழ்ந்த முத்தத்தை கொடுத்து விட்டே நகர்ந்தான்.
“அந்த லூசு கிறிக்கி.. அவ பயாலஜிக்கல் மதர்னு சொன்னா நீ அப்படியே நம்புவியா? செவுலேயே இரண்டு அப்பு அப்பி விரட்டிவிட வேண்டியது தானே.. அப்படியே அவ இருந்தாலும் இருந்துட்டு போட்டுமே.. அதை நான் பார்த்துக்க மாட்டேன்னா? இத்தனை மாசம் அவனுங்கள பெக்குறத்துக்குள்ள நீ என்னென்ன கஷ்டப்பட்டேன்னு கூட இருந்து பார்த்தவன் நான்!! அப்படி இருக்கும் போது.. எப்படி டி அவனுங்களை அவ கையில தூக்கி கொடுக்க உனக்கு மனசு வந்தது?” என்றதும் அவள் அன்று நடந்ததை அழுகையுடன் கூறி முடிக்க இன்னும் ரௌத்திரம் பெருகியது துருவுக்கு அப்சரா மீது… கூடவே இவள் மீதும்!!
வீட்டுக்கு சென்று அவளுக்கு தேவையான உடைகள் பிள்ளைகளுக்கு தேவையானவற்றையெல்லாம் பார்த்து பார்த்து இவன் வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வர அங்கே அனுவின் இடத்தில் அப்சரா அமர்ந்திருந்தாள் ஒய்யாரமாக..
அருகே தவிப்போடு நின்ற வைதேகி “சார் அனு மேடத்தைக் காணும். நான் ஹாஸ்பிடல் ஃபுல்லா செக் பண்ணிட்டேன். நான் வரும்போது இவங்க தான் இருந்தாங்க.. எது கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாங்க சார்” என்றாள் படப்படப்போடு..!!
இவன் அழுத்தமாக அப்சரா முன்னே நிற்க.. “என்ன துருவ் உன்னோட கீப் இல்லைன்னு பாக்குறியா?” என்றதும் இவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவளை பேச விட்டான்.
“அவ இனி வர முடியாத இடத்துக்கு அனுப்பி வச்சிட்டேன். சரியா? மீறி வரவும் மாட்டா.. பணத்துக்கு வந்தவ தானே பணத்தை காமிச்ச உடனே போயிட்டா” என்று எள்ளின நகையாடினாள்.
“இனிமே எவளையும் நம்ம வாழ்க்கைக்குள்ள இடையில் கொண்டு வரவே கூடாது துருவ். நீ நான் நம்ம குழந்தைகள்னு.. ஒரு குடும்பமா…” அவள் அவனை அணைக்க வர அவளை தன் ஒற்று விரலை நீட்டி தள்ளு நிறுத்தினான் துருவ்.
“ஏன் கனடாவில் போட்ட ஆட்டம் பத்தாதா இல்லை ஒரு வாரமா கோவாவில் போட்ட ஆட்டமும் போதாதா உனக்கு?” என்றதும் அவளுக்கு திக்கென்றானது.
“ப்ரண்ட்ஸ விட்டுட்டு ஃபேமிலி கூட வாழ முடியுமா உன்னால??” என்று அவன் எள்ளலாக கேட்க.. தகதகவென்று கோபம் பெருகியது அவளுக்கு.
“நீ மட்டும் ரொம்ப நல்லவனா? நீயும் இன்னொருத்தி கூட தானே இருந்த! அதே மாதிரி நானும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்ல இருந்தேன். அதுக்கு இதுக்கும் சரியா போச்சு.. டார்லிங்..” என்று அவனை தோளோடு அணைக்க வந்தாள்.
“ச்சீ..” என்று தள்ளி நின்றவன் அவளைப் பார்த்து முகம் சுழித்தான். “நீ என் பொண்டாட்டியாக இருந்த காலத்தில கூட உன்கிட்ட அத்து மீறி நான் நடந்ததில்லை!” என்றான்.
“அதுதான் எனக்கும் புரியல துருவ்.. பொண்டாட்டியா உரிமையா இருக்கும்போது என்கிட்ட ஒன்னும் செய்யாதவன்.. என்ன பார்த்து இவகிட்ட போன.. இவ பின்னாடி அலைஞ்சுகிட்டு நிக்கிற..” என்றாள்.
“உன்கிட்டயும் என்கிட்டயும் இல்லாதது! என்ன தெரியுமா? அனுவின் நேர்மை.. உண்மை! உண்மையாய் இருக்கிற கற்பு நிலை.. அன்பு அக்கறை பாசம் இது எதுவுமே உன்கிட்டயும் கிடையாது என்கிட்டயும் கிடையாது! பணம் மட்டும் வாழ்க்கை இல்லைன்னு எனக்கு புரிய வைத்தவ அவ.. தொழில் மட்டுமே எந்நாளும் கூட வராதுனு எனக்கு தெளிய வைத்தவள் அனு!! ஆமா.. என்ன சொன்ன என் அனுவ.. கீப்பா?? யாரு கீப்? அவ என் லீகல் வொய்ஃப்!” என்று அவள் முன்னே சில டாக்குமண்ட்டை தூக்கி போட்டவன் “எனக்கும் அவளுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகி மூணு மாசம் ஆகுது. அனு சட்டப்படி என் வைஃப்!! உனக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆனதும் சட்டப்படியே..” என்றான்.
“ஓஹ்.. அவ சட்டப்படி உன் பொண்டாட்டி ஆகலாம். ஆனா.. குழந்தைங்க உனக்கு கிடையாது! இந்த குழந்தைகளோட பயாலஜிக்கல் மதர் நான்” என்றாள் ஆங்காரமாய்..!
அவளை பார்த்து வாய் புத்தி சிரித்தவன் “அப்படின்னு நீ உளறிட்டு இருக்க.. உருட்டு உருட்டு.. தாரதிகிட்ட என்ன சொன்ன ஞாபகம் இருக்கா?” என்றது அவளுக்கு மனதுக்குள் சிறு நடுக்கம். .
“இங்கே பார் தாரதி.. எனக்கு வர வாடகைத் தாய் பிரெஷா இருக்கணும். அவளோட ஓவத்திலிருந்து தான் எனக்கு குழந்தை உருவாக்கணும்.. என் வீட்டுக்காரர் என்னோட வாழ்வதே இல்லை.. எனக்கும் பெருசா இப்பல்லாம் குடும்ப வாழ்க்கையில் இன்ட்ரஸ்ட் இல்ல! பிரண்ட்ஸ் அவங்க கூட ஜாலியா சுத்துறது இப்படித்தான் புடிச்சிருக்கு.. நாள பின்ன ஏதாவது அவனுக்கு எனக்கும் பிரச்சனை வந்து குழந்தையோட அம்மா நீ தான்.. நீ தான் பார்த்துக்கணும் சொல்லி என்கிட்ட கொடுத்துட்டா. அப்பப்ப என்னால முடியாது! அதனாலதான்.. ஆனா இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும். வெளி பார்வைக்கு என் கருவில் இருந்து வந்ததாகவே இருக்கட்டும்” என்று அவள் டீல் போட்டது இப்போது அவளுக்கு பாதகமானது.
“உனக்கு அரை மணி நேரம் தான் டைம். அதற்குள் அனு எங்கன்னு நீ சொல்லணும்” என்றதும் “முடிஞ்சா அவளை கண்டு பிடிச்சுக்கோ! என் மீது கையை வெச்சின நான் போலீஸ் மீடியா என்று போய் உன்னை நார் நாரா கிழிச்சிடுவேன்" என்று மிரட்டினாள்.
“சீப்பே.. என் பொண்டாட்டிய எப்படி கண்டுபிடிக்கணும் எனக்கு தெரியும்!”என்றவன் அடுத்த இரண்டே நாட்கள் அவள் எங்கே என்று கண்டுபிடித்தான்.
ஆனால் அவளாக வருவாள் என்று இவன் நினைத்திருக்க.. காத்திருக்க.. அவளோ அப்சராவுக்கு பயந்து வரவே இல்லை. அதிலும் பால் அவள் தானமாக கொடுக்கிறாள் என்று அறிந்து அவளது தாய்ப்பாலை வாங்கி வந்தே தன் குழந்தைகளுக்கு புகட்டினான். அதே ரேணிகுண்டாவில் தான் இந்த மூன்று மாதமாக இவர்களது ஜாகையும். ஆனால் இது எதுவுமே அறியாது சோகப் பார்வையாக அனு நடமாடிக் கொண்டிருந்தாள்.
துருவ் அனைத்தையும் சொன்ன நிமிடம் அதிர்ந்து சில நொடிகள் பேச்சற்று நின்றவள், அடுத்த நொடி
தவிப்பைத் தாங்க முடியாமல்.. தாவி வந்து அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவன் முகத்தில் ஒரு இன்ச் விடாது முத்தம் கொடுத்தாள், அழுகையுடன்..
அவனோ அவளின் உச்சியில் முத்தம் கொடுத்து “கதற அடிச்சிட டி அனுமா!” அவளோ அவன் மார்பில் புதைந்து அழுக..
அவனது மார்பைவிட்டு மெல்ல மெல்ல அவன் முகத்தை மேலேற்றினான். “இத்தனை நாள் என்னை காய விட்டல.. ஏங்க விட்டல.. உன்னை இனி விடுவதாயில்லை.. இந்த பூமர் அங்கிள் பர்ஃபார்மன்ஸை நீ பார்” என்றவன், அவளது சங்கு கழுத்தில் கடித்துவன் மென்மையாகவும்.. சற்று வன்மையாகவும்!!
அவள் தாடையிலும் கன்னத்திலும்.. நாவால் நக்கி கடித்து உறிஞ்சினான்..!!
அவன் நெஞ்சில் தேங்கிக்கிடந்த.. அவள் மீதான.. அன்பு.. காதல்.. காமம்.. மோகம் எல்லாம் அணை உடைந்த வெள்ளமெனப் பொங்கிப் பெருகி வர… அவள் முகமெங்கும் முத்த மழையாகப் பொழியத் தொடங்கினான் துருவ்..!!
அவள் மீது அவனுக்கிருந்த.. கோபம்.. ஆதங்கம்.. வருத்தம்.. எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டிருந்தது. அவனுக்குள் பொதிந்துப் போயிருந்த காதல் உணர்வு அவனது மற்றவற்றை வீழ்த்தி இருக்க..
அவனது சித்தம் முழுவதும் அவள் மீதான பித்தம் ஏறிப்போயிருக்க.. இப்போதைய அவனது ஒரே உணர்வு.. அவளை ஆட்கொள்ள வேண்டும் என்பதாய் இருந்தது..!!
அதேபோல அவன் மீது ஏங்கிப் போயிருந்த அனுவின் பெண்மை.. இப்போது நந்தவனத்தில் பூத்த பூவென மலர்ந்து நறுமணம் பரப்பியது..!!
காதல் நிறைந்த இரண்டு உள்ளங்களும்... குற்றவுணர்வாலும் கோபத்தாலும்.. அடக்கி வைத்திருந்த தம்தம் உள்ளக்கிடங்கை.. காதலை இணை மீது கொண்ட மோகத்தை தயக்கமின்றி வெளியேற்றின..!!
இது வெறும் காமத்தின் தேவை மட்டும் அல்ல… உள்ளத்தில் பொதிந்து கிடந்த..
அன்பின் தேடல்..!
ஆசையின் தடவல்..!
காதலின் தீண்டல்..!!
மோகத்தின் பாடல்..!!
இரண்டு இதழ்களும் இதழ்களும் சந்தித்துக்கொண்ட போது..
இரண்டு இதயங்களுமே உருகிக் கரைந்து விட்டன..!
இருவரின் இதயத் தவிப்பும் ஒரே நேரத்தில் பொங்கி எழுந்து.. இருவரின் உணர்வுகளையும் இடம் மாற்றிக் கொள்ளத் தவித்தது..!!
எவ்வளவோ முறை அனுவை முத்தமிட்டு இருக்கிறான் தான் துருவ்.
ஆனால்.. இது போல இதயம் கலந்துவிடத் தவிக்கும் ஒரு ஆழ்ந்த.. முத்த அனுபவத்தை அவன் வேறு எப்போதும் உணர்ந்ததில்லை..!!
அனுவின் பெண்மைக்குள் தொலைந்து விடவே விரும்பினான் துருவ்!
ஒரு சிறு பனித்துளியாகி அவளுக்குள் உருகிக் கரைந்து அப்படியே காணாமல் போய் விட வேண்டும்..!
ஒரு பெரும் ஆழி பேரலையாய் அவளை தன்னுள் பொதித்து அடக்கி ஆண்டிட வேண்டும்..!
இந்தப் பிறவிக்கான தேடல் இத்துடன் நிறைவு பெற்றுவிட வேண்டும் என்கிற ஆழமான ஒரு இதயத் தவிப்பை உணர்ந்தான் துருவ்..!!
அந்தத் தவிப்பின் வெளிப்பாடாய் அனுவின் உதடுகளைக் கடித்துக் குதறுவது போல உறிஞ்சிச் சுவைத்தான் துருவ்..!!
அவனது ஏக்கமும்.. தவிப்பும்.. மிக ஆழமாக அவளுக்குள் பாய.. அவனைத் தழுவிக்கொண்டு.. கண்மூடிக் கிறங்கிக் கிடந்தாள் அனுப்ரியா.
“போலாம் டி.. வீட்டுக்கு..!”
“நான் என்ன உங்க பொண்டாட்டியா?” என்று சீண்டினாள்.
“ம்ஹூம்.. கீப்.. லவர் “ கொஞ்சினான்.
“போடா.. பொறுக்கி.. பிராடு..” அவன் நெஞ்சில் செல்லமாய் அடித்தாள்.
“வாடி செல்லம்..” என்றவன் அவளை தன் மீது போட்டுக் கொண்டான்.
“பொறுக்கி.. பொறுக்கி” லேசான தயக்கத்துக்குப் பின் உடம்பை மேலே தூக்கி
கை ஊன்றி எழுந்து அவன் மேலேறிப் படுத்தாள். அவள் மென்மைகளை அவன் நெஞ்சில் அழுந்த..
“ஒரு நிமிசம் இரு” அவள் நெஞ்சில் கை வைத்து தூக்கிப் பிடித்தான்.
“என்ன?”
“அப்படியே என் மேல படு.. இந்த இறுக்கம் வேணும்.. உன் உடும்பு சூடு வேணும்.. உன் வாசம் வேணும்.. உன் ஸ்பரிசம் வேணும்.. விலகாத டி! “ என்றவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
பின் அவளை நெஞ்சில் பதிய வைத்து அவள் முதுகை வளைத்து அணைத்து இறுக்கினான்.
அவள் கிறக்கமாகச் சிரித்தாள்.
“என்ன இதுலாம்?”
“சுகம்டி..”
“ம்ம்.. ம்ம்.. “
“ஏங்குனவனுக்கு தான் தெரியும் அந்த தவிப்பு.. தகிப்பு எல்லாம் “ சிறிது நேரம் அவளோடு அங்கேயே கட்டுண்டு இருந்தான். பின் வா போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர.. அந்த பகுதி மக்கள் ஆவென்று பார்க்க..
“என்ன மக்கள் நீங்க எல்லாம்.. ஒருத்தி புருஷன் கிட்ட கோச்சிக்கிட்டு வந்தா இப்படித்தான் விட்டு வச்சிருப்பீங்களா? பேசி அனுப்ப வேணாமா?” என்று அவர்களைப் பார்த்து அவன் கேட்க..
‘இவன் என்னாட இவன் பொண்டாட்டி கோவிச்சிட்டு வந்ததுக்கு நம்மள பேசுறான்?’ என்று திகைத்து பார்க்க.. அனுவை அழைத்துக் கொண்டு ரேணுகொண்டாவில் அவன் தங்கி இருந்த வீட்டுக்கு வந்து விட்டான்.
அவள் வரும்பொழுது குழந்தைகள் அழும் சத்தம் அவள் காதை நிறைக்க.. துருவ்வை திரும்பி ஒரு கெஞ்சல் பார்வை பார்த்தவள், அடுத்த நிமிடம் விரைந்து விட்டாள் தன் மகன்களை காண…
வைதேகியும் சுகனும் தான் இருவரையும் வைத்து சமாதானப்படுத்திக் கொண்டு இருக்க.. இவள் வந்ததுமே “மேடம் வந்துட்டீங்களா?” என்றபடி வைதேகி புன்னகைக்க.. சுகனும் அவளை சந்தோசத்தோடு பார்த்தான்.
அழுகையோடு தலையாட்டியவள் இரு மகன்களையும் தன் மடியில் ஏந்தி கொள்ள… அப்பிஞ்சுகளும் தங்கள் அன்னையை உணர்ந்ததுவோ.. அவள் மார்பை முட்டி முட்டி அழுதம் கேட்க..
பிள்ளைகளை நினைத்தாலே அவளுக்கு அமுது ஊரும்.. இப்படி கையில் ஏந்தி அவர்களும் முட்டியவுடன் தாங்க முடியாமல் தவித்தவளுக்கு.. சுகன் வைதேகி கண்களை காட்டிவிட்டு வெளியே செல்ல.. வைதேகி தான் உதவி புரிந்தாள்.
அரைமணி நேரம் மகன்களுக்கு அழுது ஊட்டி.. அவர்களை கொஞ்சி சீராடவே நேரம் கரைய.. கதவை தட்டி விட்டு வந்தவனை கண்டு வைதேகி ஒரு தலையசைப்போடு சென்று விட்டாள்.
துருவைப் பார்த்து சிரித்தவளை தன் வயிற்றோடு கட்டிக் கொண்டவன், “என்னை மட்டுமல்ல பிள்ளைகளையும் ரொம்பவே ஏங்க வச்சிட்ட.. இனி வீட்டை விட்டு எங்களை விட்டு வெளியே போக பாரு.. கால ஒடச்சிடுறேன்!” என்று வார்த்தைகள் கோபமாக வந்தாலும் அவன் விரல்களும் அவள் தலையை மென்மையாக கோதி விட்டன.
அவன் சட்டை நனைவதில் இருந்தே அவள் அழுகையை புரிந்து கொண்டவன், “அழுகாதடி!” என்று கண்களை துடைத்து விட்டு மனைவிக்கு அருகில் அமர்ந்து கொண்டு.. மகன்களில் ஒருத்தனை தன்னோடு தூக்கிக் கொண்டான்.
“வைதேகி கா பாவம் இல்ல.. எப்படி தான் சமாளிச்சாங்களோ? அவங்களுக்கே பெரிய ஃபேமிலி எப்படி இங்கே வந்து தங்குனாங்க?” என்று அவள் மகன்களை கொஞ்சிக் கொண்டே கூற..
“சுகன் கட்டி தூக்கிட்டு வந்துட்டான்” என்றதுன் அவள் அதிர்ச்சியோடு பார்க்க.. “தாலி கட்டி தாண்டி!” என்றான் சிரித்துக் கொண்டே…
“பிள்ளைகளை கூடவே இருந்து கவனிக்க வேண்டும் என்று நான் கேட்டேன்.. அவங்க வீட்டுல தயங்குவாங்கன்னு யோசிச்சாங்க வைதேகி.. அவங்க வீட்டாளுங்களும் அப்படி எல்லாம் போக தேவையில்ல.. பொம்பள இல்லாத வீட்டுக்கு உன்ன அனுப்ப முடியாதுனு அவங்க கொஞ்சம் மோசமா வைதேகிய பேசிட்டாங்க.. பார்த்துக் கொண்டிருந்த சுகனுக்கு தாங்கல.. நர்ஸா தானே கூட்டிட்டு போகக்கூடாது என் பொண்டாட்டியா கூட்டிட்டு போகிறேன்னு அவங்களுக்கு முன்னாலேயே தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டான்” என்றதும் அவளுக்கு சுகனை நினைத்து ஆச்சரியம்.. தன்னை நினைத்து குற்ற உணர்வு!!
தன் குழந்தைகளுக்காக எத்தனை பேர் முயற்சி செய்திருக்க தான் மட்டும் இப்படி நடந்து கொண்டோமே என்று..!!
“விடு டி.. ரொம்ப ஃபீல் பண்ணாத..” என்றான் மனைவி உள்ளம் அறிந்து.
“அண்ணா சாருக்கு இருந்த தைரியம் உங்களுக்கு இல்லவே இல்லை" என்று அவள் குழந்தைகளை பார்த்துக் கொண்டே கூற..
என்ன என்று கேட்டவனிடம் “தாலி கட்டி அவர் எப்படி அலேக்கா வைதேகி அக்காவை தூக்கி வந்தார் ஆனா நீங்க..” என்று அவள் உதட்டை பிதுக்க.. அவள் உதட்டை கிள்ளி எடுத்தவன் “நான் ஆறு மாசத்துக்கு முன்னாடியே உன்னை சட்டப்படி பொண்டாட்டிய ஆக்கிட்டு தான் உன்னை நெருங்கினேன் தெரியுமா?” என்றதும், அவளுக்கும் தெரியும் தானே ஆனாலும் சுகனை வைத்து வைத்தே அவனை சீண்டி எடுத்தாள் அன்று முழுவதும்..
மறுநாள் காலை திருப்பதியில் பிரம்ம முகூர்த்தத்தில் தங்கள் திருமணத்தை முடித்து.. ஏழுமலையானையும் பிள்ளைகளோடு சென்று தரிசனம் செய்து சென்னை வந்து சேர்ந்தனர்.
Super