Share:
Notifications
Clear all

மோகங்களில் 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

மோகங்களில் 24

 

 

 

அது ரேணிகுண்டா… நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் அனுப்ரியா. இங்கேதான் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து விட்டு, அவள் தங்கியிருக்கும் சிறு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறாள். 

 

என்னது அனுப்ரியாவா? இங்கேயா?

ஆம் அவளே தான்! 

 

துருவ்வை பிரிந்து வந்து விட்டாளா?

 

ஆம்.. வந்தே விட்டாள்!! அவளின் உயிரை பிரிந்து.. உணர்வுகளை தொலைத்து.. உயிர்ப்பினை‌ மறந்து..!!

மூன்று‌ மாதம் ஆகிறது!!

 

ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள் அனு. கண்களில் எப்பொழுதும் இருக்கும் அந்த துள்ளல் மறைந்து ஒரு வெறுமையும் வலியும் மட்டுமே காணப்பட்டது. உடலோ மெலிந்து முன்னிலும் அரைவாசியாக இருந்தாள்.

 

அன்று உளறியது போல துருவை விட்டு பிரிந்ததும் இறந்து விடவே துணிந்தாள். ஆனால் ஆசை கொண்ட மனதும் காதல் கொண்ட உள்ளமும்.. அவனை எட்ட இருந்தாலும் பார்க்கும் இந்த சந்தோஷம் வேண்டும் என்று நினைத்தே இன்னும் பெயருக்கு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அனு.

 

அப்பொழுது பஸ்ஸில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க.. அடி மனதில் இருந்த தன் பிஞ்சு குழந்தைகளின் நினைவு அவளுக்கு வந்தது. குழந்தைகளின் நினைவில்.. தாய்மை பெருக்கில்.. அவள் அணிந்திருந்த ரவிக்கை நனைந்தது தாய்ப்பால் சுரந்து..!!

 

குழந்தைகளை நினைத்த மாத்திரத்திலேயே பால் சுரக்கிறது என்றால்.. அவள் தானே தாய்??!!

 

ஆனால் மருத்துவ அறிக்கை அப்படி சொல்லவில்லையே?? அந்நிகழ்வினை நினைத்ததும் கண்கள் கசிய.. கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளெழுத்து பார்த்தும், அது அணை உடைந்த வெள்ளமாய் கன்னங்களில் வழிந்து சென்றது..!!

 

குழந்தை பிறந்த மூன்று நாள் வரை அனைத்தும் நல்ல விதமாக தான் சென்றது. பிரசவித்த அன்று முழுக்க இவள் மயக்கத்தில் இருந்தாலும்.. பம் செய்து பிள்ளைகளுக்கு தாய்ப்பாலை கொடுத்தாள் வைதேகி. அடுத்த நாள் கண் விழிக்கவும் குழந்தைகளை தூக்கி வந்து காட்ட.. 

 

“வல்லபா.. இவனுங்க யாரை போல இருக்கானுங்க? உங்கள மாதிரியா? இல்ல.. ஒரு வேளை அப்சரா போலா?” என்று பயம் அவளுக்கு!

 

“எப்படி பிறந்த உடனே அடையாளம் தெரியும்? போகப் போக தான் தெரியும்!! அசடு..!!” என்று அவள் தலையில் தட்டினான் துருவ்.

 

அனுவோ கலக்கத்துடன் துருவை பார்க்க.. “இவங்களுக்கு நீ தான் அம்மா!! நீ தான பெத்த.. அப்ப இது உன் குழந்தைங்க தான். வேற ஏதும் மனசுல போட்டு குழப்பி அழுது கரைந்து உடம்பை கெடுத்துக்காதே அனுமா.. அப்புறம் நான் பொல்லாதவன் ஆயிடுவேன் பார்த்துக்கோ..!” என்று திட்டியவுடன் கண்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

 

ஆனால் மனதில் அந்த எண்ணம் உறுத்திக் கொண்டே தான் இருந்தது. வளர்ந்த கருவை இவள் வயிற்றில் வைத்ததாக கூறினார்கள், அப்படியென்றால்..??

 

அப்படி என்றால்..?? இந்த குழந்தைகளுக்கு பயாலஜிக்கல் மதர் அப்சரா தானே என்ற எண்ணம் அவளுக்கு..

 

அதனை மெய்ப்பிக்கும் வகையில் அடுத்த இரண்டு நாட்களில் அவள் முன் தோன்றினாள் அப்சரா, துருவ் இல்லாத சமயம் பார்த்து..

 

இவளுக்கு துணைக்கு இருந்த வைதேகியை “நீங்க குழந்தைகள் பக்கத்துல இருங்க வைதேகி கா.. அவங்கள விட்டு இந்த பக்கம் வந்துராதீங்க.. எனக்கு என்னமோ எதுவோ தப்பா நடக்க போற மாதிரி ஃபீல் ஆகிட்டே இருக்கு” என்று போக மறுத்தவளை‌ விடாப்பிடியாக அனுப்பி வைத்தாள்.

 

வைதேகியும் “இல்ல மேடம் இங்கே பாதுகாப்பாகத் தான் இருக்கும்! டோண்ட் வொர்ரி மேடம்.. மனசை குழப்பாதிங்க.. நான் உங்கள் விட்டு போனால் சார் என்னை திட்டுவார்” என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. எங்கே அப்சரா வந்து குழந்தைகளை எடுத்துச் சென்று விடுவாளோ என்ற பயம் அவளுக்கு.

 

ஆனால் அப்சராவின் டார்கெட் குழந்தைகள் அல்ல.. இவள் தான் என்பதை அனு அறியவில்லை!!

 

அப்சராவுக்கு நோகாமல் பெற்றெடுத்த குழந்தைகளும்.. வசதி வாய்ப்புகளோடு கூடிய துருவும் தேவை!! அதற்கு இடைஞ்சலாக இருக்கும் இவளை மட்டுமே அப்புறப்படுத்த எண்ணியே இவளை பார்க்க வந்தாள்.

 

வந்தவள் ரொம்ப அக்கறையாக “என்ன அனு உடம்புக்கு பரவாயில்லையா?” என்றதும் ‘சாத்தான் எதுக்கு வேதம் ஓதுகிறது!’ என்பதைப் போல அப்சராவை அமைதியாக வெறித்துப் பார்த்தாள் அனு.

 

“அப்புறம் எப்போ கிளம்ப போற?” என்றதும் திடுக்கிட்டு “நான் எதுக்கு போகணும்?” என்று மென் குரலில் கேட்டாலும் உறுதியாக வந்தது அனுவின் குரல்.

 

அவளும் சில மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்து போட்டு “இந்த குழந்தைங்க எனக்கும் துருவுக்கும் பிறந்த குழந்தைங்க.. நீ வெறும் வாடகை தாய் மட்டும் தான். இனி உனக்கு இங்கே இடமில்லை போ..” என்றாள்.

 

ஏற்கனவே இந்த உண்மை தானே அனுவை வருத்திக் கொண்டிருந்தது. அதை கண்களால் பார்த்த பிறகு திடமான மனது உடைந்து விட.. அதை காட்டிக் கொள்ளாமல் “நீங்கதான் புருஷன் வேணாம் குழந்தைங்க வேணாம்ன்னு போயிட்டீங்க தானே.. இனி அவங்கள பத்தி உங்களுக்கு என்ன கவலை? நான் என் குழந்தைகளை என் வீட்டுக்காரரையும் விட்டுப் போக மாட்டேன்” என்றாள் உறுதியாக அனு.

 

“எனது வீட்டுக்காரனா?” என்று சிரித்தவள் “நீ ஒரு வாடகை தாய்! அதை மீறி நீ உரிமை கொண்டாட முடியாது. வேணா அவரை கொண்டாடலாம்..” என்றாள் வன்மமாக!

 

“ஆனால் அதற்கும் நான் கேஸ் பைல் பண்ணுவேன். குழந்தை பெத்து கொடுக்க வந்தவ.. இப்போ என் புருஷன புடிச்சிகிட்டா.. அவரை மீட்டு கொடுங்க.. என் குழந்தைகளை மீட்டுக் கொடுங்கள்னு சட்ட ரீதியாக போவேன்” என்றதும் ‘துருவுக்கு இல்லாத செல்வாக்கா?’ என்று உதட்டை சுழித்த அனு “உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்!” என்றாள்.

 

“நான் என்ன அனுனு நெனச்சியா? எல்லாமே நேர வழியில் போக? நான் சொன்னது லீகல் ப்ராசஸ்.. ஆனால் குழந்தைகளை நானே கடத்தி நான் கம்ப்ளைண்ட் கொடுப்பேன். குழந்தைகள நீ தான் கொன்னுட்டேன்னு சொல்லுவேன்! ஏன் நானே கொன்னா கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.. ஏன்னா எனக்கு கிடைக்காதது உனக்கு மட்டும் எதுக்கு கிடைக்கணும்?” என்று அனுவை மனரீதியாக பலவீனப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

 

ஒரு கட்டத்தில் “என்ன வேண்டும் உனக்கு?” என்று அனு அழுக..

 

“இங்கிருந்து நீ போகணும்! உன்னுடைய எச்சம் மிச்சம் எதுவும் இருக்க கூடாது. எந்த தகவலும் துருவுக்கு நீ கொடுக்கக் கூடாது! எப்போ உன் மூலமா துருவுக்கு தகவல் கிடைக்குதோ.. அப்பவே குழந்தைங்கள் உயிரை நீ மறந்துவிடலாம்” என்றாள் கொடூரமாக..

 

“இரண்டு நாள் டைம் கொடு!”” என்று அனு கெஞ்ச..  

 

“முடியாது!” என்ற மறுத்தவள், அப்பொழுதே அவளை யாரும் அறியாமல் சென்னையை தாண்டி விட்டு வர செய்தாள்.

 

எங்கே திரும்பி இங்கே வந்துவிடுவாளோ என்று தனக்கு தெரிந்த நபர் மூலம் ரேணுகொண்டாவில் வேலை வாங்கி கொடுத்து, சிறு வீடு என இவளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து துரத்தி விட்டாள் அப்சரா.

 

தொழிலதிபி கனவெல்லாம் இப்பொழுது நினைவிலேயே இல்லை. குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? நாம் இல்லாமல் துருவ் என்ன பாடு படுகிறானோ? அந்த பாதாகி குழந்தைகள ஒழுங்காக பார்த்துக் கொள்வாளா?’ என்றஎண்ணமே!!

 

அதிலும் முதல் இரண்டு நாட்கள் அவளுக்கு பால் கட்டிக் கொள்வதை பார்த்த பக்கத்து வீட்டு தமிழ்ப் பெண் “இங்க பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல்ல இருக்கு.. அங்க போய் நீ உன்னோட பாலை தானம் பண்ணலாம் இல்ல காசுக்கு கூட விக்கலாம்.. நிறைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாமல் இப்படி வாங்கி கொடுப்பாங்க” என்றாள்.

 

“காசு எல்லாம் வேண்டாம் நான் தானமாகவே தருகிறேன்” என்று காலை, வேலை முடிந்து வரும் மாலை, இரண்டு வேளையிலும் தன் பாலை தானமாக கொடுத்து வந்து கொண்டிருக்கிறாள் அனு.

 

“நான் இங்கே செய்யும் இந்த தானம் என் பிள்ளைகளுக்கு எப்படியாவது சேரட்டும்! யாராவது அவர்களுக்கு தாய் பால் கொடுக்கட்டும்” என்று நித்தமும் வேண்டிக்கொண்டே கொடுக்கிறாள். 

 

இப்போதும் அந்த கார்மெண்ட்ஸ் அக்கவுண்டில் வேலை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்று தாய்ப்பாலை தானம் அளித்து விட்டு வரும் பொழுது தான் இந்த நினைவுகள் எல்லாம்…

 

“இன்று ஏன் அதிகமாக நினைவுகள் வருகின்றன?” என்று அவளுக்கு அவளை கேட்க..

 

“நீ மறந்தால் தானே நினைக்க!” என்று அவளது மனசாட்சி திட்டிவிட்டு சென்றது. அப்போது மீண்டும் குழந்தைகள் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தாள்.

 

இவள் எழுந்து கொண்டு “உட்காருங்க..” என்றதும் அந்த பெண் தெலுங்கில் நன்றி சொல்ல.. கண்களுக்கு எட்டாத சிரிப்போடு அந்த குழந்தையின் கன்னத்தை மெல்ல வருடி கொடுத்தாள் அனு.

 

வார்த்தைக்கு வார்த்தை “டேய்களா.. அம்மா உங்களை விட்டுட்டு போயிடுவேன் ..பெரிய தொழிலதிபதியாகப் போறேன்!” என்று அத்தனை தடவை சொல்லிக் கொண்டிருந்தாலும், அவளை அறியாமல் அம்மா என்ற உணர்வு அவளுள் இருந்தது அப்சரா வந்த பிறகு புரிந்தது.

 

அதுவும் குழந்தைகள் பிறந்த இந்த மூன்று மாதத்திற்குள்ளாக அவள் துடிப்பு துடிப்புக்கும் அழுத அழுகைக்கும் ஒரு எல்லையே இல்லை..!!

 

பஸ் நின்று நின்று போக கூட்டம் இன்னும் இன்னும் அதிகமாக, அப்படி இப்படி என தொட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞன் இப்போது அவளை கோழி அடை காப்பது போல முழுவதுமாக அவளின் பின்னால் அணைத்து கொண்டிருந்தான். அவன் மூச்சு காற்று அவள் பிடரியில் தாராளமாகவே பட்டது.

 

அதுவரை தன் குழந்தைகள் நினைவில் இருந்தவளுக்கு தன்னை யாரோ உரசி நிற்பது போல தெரிய அவசரமாக தள்ளி நின்றாள். மீண்டும் அந்த உருவம் அவளுக்கு வெகு அருகிலேயே நின்றது.

 

அவள் ஆத்திரத்தோடு திட்டத் திரும்பினாள். திட்ட வாய் திறந்தவளோ பிளந்த வாயை மூடாமல் நின்றிருந்தாள்.

அவளை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல்ஃ ஆனால் அவளுக்கு வெகு அருகில் உரசும்படி நின்று கொண்டிருந்தது வேற யாரும் இல்ல.. துருவ் வல்லப் தான்!!

 

‘இவன் எப்படி இங்கே?’ என்று அதிர்ச்சியாக பார்த்தவளை கண்டு கொள்ளாமல் அவன் நின்றுயிருக்க இவளோ தனது நெஞ்சு படப்படப்போடு வேகமாக திரும்பிக் கொண்டாள்.

 

பேருந்து கூட்ட நெரிசலில் அவனது முகம் தானாகவே அவளது முதுகிலும் பின் கழுத்திலும் தோளிலும் பட்டு பட்டு சென்றது. அவள் எவ்வளவு விலகினாலும் அவன் தொடர்ந்து அதை செய்துகொண்டு இருந்தான். அவர்கள் அப்படி அந்நியோன்யமாக நின்று கொண்டிருப்பதை யாரேனும் பார்த்தால் கண்டிப்பாக அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்று நினைப்பார்கள் அல்லது காதலர்கள் என்று நினைப்பார்கள்.

அவன் அவளை முழுமையாக தனது சொந்த மனைவியை போல அணைவாக நின்றுக் கொண்டு பின்னங்கழுத்தை முகர்ந்து கொண்டிருக்க…

 

அவளால் அப்படியும் இப்படியும் திரும்ப முடியவில்லை. ஒரு வேளை திரும்பி அவனை நேருக்கு நேராகப் பார்த்தால், முறைத்தால்.. அவன் விலகி நின்று விடலாம்.. ஆனால் அவளால் அதனை செய்ய முடியுமா? அவனை நேர்கொண்டு பார்க்க முடியுமா? அவள் செய்த செயலுக்கு அவன் முறைத்தால் இவள் பஸ்மமாகி விடுவாளே??

 

அனுவோ ஊர் வந்து விட்டதா என்று பார்க்க.. துருவோ குனிந்து முழுமையாக இப்போது ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க.. அவனது முன் பகுதியும் அவளது பின் பகுதியும் நன்றாகவே உராய்ந்து, தீப்பொறி பற்றியது.

 

அவன் அவளது முடியை கையில் பிடித்து அளைந்தான். அவள் திடுக்கிட்டு பார்க்க… “உங்க முடி என் முகத்தில் பிரஷ் அடிச்சுகிட்டே இருக்குங்க. முகம் புல்லா பட்டு அங்க இங்க இருக்கு, உங்க முடி எடுத்து முன்னால் போட்டுக்கோங்க" என்றான் யாரோ போல..

 

அவள் பஸ் சீட்டின் கம்பியை பிடித்து இருந்ததால், அவளால் உடனே செய்ய முடியவில்லை..

 

அவனது பேச்சும் அவளுக்கு அந்நியமாக பட்டது. ஆனால் செய்கை?? அதுவும் பப்ளிக் பஸ்ஸில் என்னென்ன செய்கிறான் இவன் என அவள் நினைத்தவாறே தன் முடியை எடுத்து முன்னால் போட்டாள். 

 

கூந்தல் போர்வை இல்லாத தன்னுடைய முதுகு இப்போது முழுக்க அவனுக்கு இலக்கு என்பது அவளுக்கு தெரியவில்லை. அவனை புரியவில்லை!!

மழை லேசாக தூறல் போட..

“என்ன? தண்ணி மேல் பட்டுச்சா?” என்றான்‌ அக்கறையாக..

"................"

"உங்களை தான்" அவன் இன்னும் நெருங்கி வந்து பேச அவளிடம் பேச.. அவன் மூச்சு காற்று பின் முதுகிலும் கழுத்திலும் பட்டு பெண்ணவளை தகிக்க வைத்தது. 

"இ.. இல்ல" என்று அவள் மறுக்க.‌ 

"அப்ப இது என்ன ஈரம்?" என்று அவன் சுட்டிக்காட்டிய இடத்தை கண்டு அதிர்ந்தாள். அவள் ரவிக்கையின் ஓரம் பால் கசிந்திருந்தது.

“ம்ம்ம்.. சொல்லுங்க மேடம்? என்ன ஈரம்?” அவள் பதில் சொல்லவேயில்லை.

அவள் மெல்லிடையை அவன் தொட அவன் கையை அவள் விலக்க.. அவன் எல்லை மீற.. சேலை மூடாத அந்த இடுப்பு பாகத்தை அவன் தொட்டு தடவினான். வெளியே மழை பிய்த்து கொண்டு அடிக்க ஆரம்பித்தது. 

அவனது ஐந்து விரல்கள் அவளின் நாபிப் பள்ளத்தை வீணை போல மீட்டியது. அவளால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் தன்னையும் அறியாமல் அவன் மீது சாய்ந்து விட்டாள்.

அவன் அவளது பின்னங்கழுத்தில் தனது முகத்தை கொண்டுவந்து யாரும் பார்க்காத வண்ணம் உதடுகளால் தேய்த்து “சொல்லுங்க மேடம்? என்ன ஈரம்? உங்களுக்கு குழந்தைகங்க இருக்காங்களா?” 

 

 

“ஓஹ்.. இல்லையா? அப்புறம் ஏன் ஈரம்?” என்று வார்த்தைகள் தேள் கொடுக்காக வந்தது. ஆனால் அவன் விரல்களோ அவளை தீண்டி தீண்டி தகிக்க வைத்தது.

“வல்லபா.. ப்ளீஸ்..” என்று அவள் அழுகையை அடக்க..

மாலை நேரம் என்பதால் இருள் கவிழத் தொடங்க பஸ்ஸில் விளக்குகள் ஏதும் போடாததால்.. அந்த இருட்டை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனது உதடுகளை நேரடியாக கொண்டு வந்து அவளது பின்னங்கழுத்திலும் தோளிலும் வைத்து வைத்து சத்தமில்லாமல் ஒற்றி ஒற்றி எடுத்தான்.

“சொல்லு டி? அட்லீஸ்ட் கல்யாணமாவது ஆகிடுச்சா? புருஷன் இருக்கானா?” என்று அடிக்குரலில் சீறினான். 

அது முத்தம் போல் இருக்கவில்லை ஆனாலும் அது முத்தம் தான். தன் ஆத்திரத்தை தீர்க்க.. தன் தாபத்தை போக்க.. இத்தனை நாள் பிரிவினை ஈடுக்கட்ட.. என்று ஆங்காரமான முத்தம்!! இப்படி அவன் தனக்கு பொதுவெளியில் முத்தம் கொடுப்பதை அனுவால் அனுமதிக்க முடியவில்லை. 

ஆனால் அவளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அவனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் முடியவில்லை.. ஏன் தற்காத்துக் கொள்ள வேண்டும்? அவன் என்னவன் அல்லவா?

இல்லையில்லை!! என்று அப்சரா வந்து கத்துவது போல இருக்க.. 

தன் இரு காதுகளையும் இறுக்க பொத்திக் கொண்டாள் அனு.

அவள் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது அவளது காது மடல்களை உரசினான்.

"ஆ ..ம்ம்ஸ்ஸ்" அவளது மொத்த உடலும் இலவம் பஞ்சாக அந்த பேருந்தில் மிதக்க.. அவள் கண்களை மூடி அவன் மீது பின்னோக்கி சாய்ந்து..

“ப்ளீஸ்.. வல்லபா…” என்று அவள் அவன்‌ நெஞ்சோரம் நெருங்கி நின்று கெஞ்ச..

அவனோ.. அவளை யார் நீ என்று பார்த்து வைத்தான். அதிலும் அவன் கண்களில் தெரிந்த வெறுமையில் அவள் மறித்தே போனாள்.

“ப்ளீஸ்.. இதுக்கு என்னை நீங்க கொன்னே இருக்கலாம்” என்று அவள் மென் குரலில் கூற..

“ஸ்டாப்..” என்று துருவ் குரலில் பேருந்து நிற்க.. அவளைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு இறங்கியவன் சென்றது என்னவோ அவள் தங்கியிருந்த வீட்டுக்கு தான்.

எப்படி இவனுக்கு தெரியும் என்று அதிர்ச்சியோடு அவன் பின்னே அனு செல்ல.. உள்ளே நுழைந்தவன் கதவை தாழிட்டு விட்டு விட்டான் ஒரு அறை அவளை..

 

 

அவள் அதிர்ந்த பார்க்க.. “எவ்வளவோ ஒருத்தி ஏதோ சொன்னானு நீ பாட்டுக்கு விட்டுட்டு வந்துடுவியா? நீயும் இப்ப வருவ அப்ப வருவேன்னு நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. இந்த சோகத்திலேயே சுகம் கண்டவ மாதிரி வேலைக்கு போற.. பால் தானம் கொடுக்கிற.. திரும்பி வர.. அழுவுற தூங்குற என்னடி நெனச்சிட்டு இருக்க? அங்கு ஒருத்தன் உன்னையே நினைச்சு உருகிட்டு இருக்கான்னு கொஞ்சம் கூட உனக்கு தெரியல?? ரெண்டு பிள்ளைகளை பெத்து விட்டுட்டு வைத்திருக்கோமே அவனுங்க தேடுவானுங்க தெரியல?? எங்களை விட்டு பிரிஞ்சி இருக்கோம்னு என்று நினைவு வரல??” என்றதும் அவள் கதறி அவன் மார்பில் சாய…

 

 

“நான்.. நான்.. தான்.. பயாலஜிக்கல் மதர்.. இல்லையே??” என்று உதடு பிதுங்க அழுதவளின் முகத்தை இரு கைகளால் தாங்கியவன்,

 

அவள் கண்களுக்குள் பார்த்து “பயாலஜிக்கல் மட்டுமல்ல எல்லாமே அவனுங்களுக்கு நீ தான்..! நீ மட்டும் தான்..! அவங்களுக்கு அம்மா டி நீ!!” என்றவன் அவளது துடித்த உதடுகளை கவ்வி கொண்டான்..

அதி காதலாக…

பெரும் தாபமாக..!!


   
Quote
(@srd-rathi)
Member
Joined: 6 months ago
Messages: 11
 

👍👍


   
ReplyQuote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

சூப்பர் டா துரு நீ🥰

எங்க நா ரசிச்ச அனு காணோம்????

அவளை எல்லாம் பேசும் போதே ரெண்டு விட்டு இருக்க வேணாமா டா அனு நீ????

டாக்டரையே வெச்சி செஞ்ச....இப்ப இவ என்ன பெரிய இவளா????

கம் ஆன் அனு.....பேக் டூ ஃபார்ம்


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top