Share:
Notifications
Clear all

மோகங்களில் 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

மோகங்களில்… 22

 

 

“இப்ப இத குடிக்க போறியா இல்லயா?” என்று துருவ் அதட்டலாக கேட்டாலும் அதில் மித மிஞ்சிய இருந்தது என்னவோ அன்பும் அக்கறையும் அதைவிட நேசமும் தான்! அதை தான் நான்கு கண்கள் மிக வன்மமாக பார்த்திருந்தன..!!

 

துருவ், அனு மறுக்க மறுக்க அவளை தன் தோள் வளைவில் பிடித்து அவளுக்கு அந்த சீரக தண்ணீரை புகட்டினான். 

 

“அய்ய ச்சீ..” என்று அவள் வாயை துடைத்துக் கொள்ள.. மெலிதாக அவளது கன்னத்தை கடித்தவன் “சொல்ல.. சொல்ல கேட்காம அவ்வளோ சாப்பிட்டா இப்படிதான் கண்ணு.. அனுபவி..” என்றான்.

 

“உங்களுக்கு கொஞ்சம் கூட என் மேல பாசமே இல்ல.. இருந்தா இப்படியா கதற கதற…” என்று அவள் முடிக்கும் முன்..

 

“ஏதே..‌?? கதற..‌ கதற… ஒன்னுமே பண்ணலையே டி!” என்று அவன் அலற..

 

“ச்சே.. அது இல்ல.. அன்பே இல்லாம கதற‌ கதற குடிக்க கொடுத்தீங்கனு சொன்னேன்..!”

 

“யாருக்கு அன்பில்ல? நேசம் இல்ல? எனக்கா? அதை காட்ட எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கல.. கிடைக்கும் போதும் பாருடி என் பர்ஃபாமென்ஸ!!” என்று அவன் தன் சட்டை காலரை தூக்கிக் கொள்ள..

 

“இப்ப புரியுதா உங்கள நான் ஏன் பூமர் அங்கிள்னு சொல்கிறேனு?” என்றவள் உதட்டை சுழித்து கேட்க..

 

இப்பொழுது அவளுக்கு முன்னே வந்து அவளது இரு தோள்களிலும் கைகளை போட்டவன், “அப்படி என்ன சொல்லிட்டேன்? எதுக்கு என்னை பூமர் அங்கிள்னு சொல்ற?” என்று வினவினான்.

 

“வாய்ப்பை தேடிக்கிட்ட.. வாய்ப்பு வரும் வரணும் எதிர்பார்த்து கிடைக்கிறது தான் பூமர் அங்கிள்ஸ்.. ஆனால் வாய்ப்பை உருவாக்கியவன் தான் புத்திசாலி என் மாதிரி 2 கே கிட்ஸ்!” என்று அவள் சிரிக்க மீண்டும் சுள்ளென்ற ஒரு வலி அவளது வயிற்றில். இப்பொழுது இடுப்பிலிருந்து விரவி வலிக்க ஆரம்பித்தது. அவள் அவர் வயிற்றை பிடித்துக்கொண்டே சிரித்தாள்.

 

“என்னது வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுமா? நீ வேற மாசமா இருக்கியே தாங்க மாட்டனு நான் விலகி விலகி என்னை கட்டுப்படுத்தி கஷ்டப்பட்டு இருந்தா.. இதுவும் சொல்ல இதுக்கு மேலேயும் சொல்லுவ டி! இதுல சிரிப்பு வேறு உனக்கு” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட.. மலர்ந்து சிரித்தாள் மாது.

 

இனி இம்மாதிரி சிரிப்பு அவளது வாழ்க்கையில் இல்லை என்பது போல…

அதே நேரம்.. “சூப்பர்.!! கட்டின பொண்டாட்டிக்கு டைவர்ஸ் கொடுத்து தள்ளி வைத்துவிட்டு.. கண்டவ கிட்ட உருகுறிங்க மருகிறீங்க.. சபாஷ்..! என்ன பாசம்? என்கிட்ட மட்டும் தான் அப்போ வேஷமா?” என்று வன்மமாக வந்தது வார்த்தைகள் எல்லாம் அப்சராவின் வாயில் இருந்து.. அருகில் மருமகளுக்கு சப்போர்ட்டாக நின்று இருந்தார் மாமியார் சசிகலா!

 

இருவரையும் பார்த்ததும் அனுவுக்கு வெலவெலத்து போனது. அதில் அப்சரா முன்னாலேயே அவள் கணவனுடன் தான் இருப்பதைக் கண்டு அவளுக்கு ஒரு ஒவ்வாத தன்மை தோன்ற.. மெல்ல அவன் பிடியிலிருந்து விலக முனைய.. அவளை இறுக்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டான் துருவ்.

 

அனு கலங்கிய கண்களுடன் இறைஞ்சிய பார்வை அவனை பார்க்க.. அவனோ இறுகிய முகத்தோடு அவளை உருத்து விழித்தவன் கண்களில் ‘இவ்விடம் விட்டு நீ அகலக்கூடாது!’ என்ற கட்டளை இருந்தது.

 

துருவை மீற முடியாமல் அதேசமயம் அப்சரா முன் அவன் கணவன் கை வளைவில் நிற்க முடியாமல் நெளிந்தாள். பாசம் வைத்து பேசிய சசிகலா முன்னிலையில் தான் ஒரு குற்றவாளியை நிற்பதைக் கண்டு வேதனை அடைந்தாள் அனு.

 

“ஆமா.. பொண்டாட்டி பொண்டாட்டி நீ பேசிறியே? நீ யாரோட பொண்டாட்டி?” என்று நக்கலாக கேட்டான் துருவ் வல்லப்!!.

 

“என்னடா இப்படி கேக்குற இவதான் உன் பொண்டாட்டி!! ஊர் அறிய உலகறிய சடங்கு சம்பிரதாயத்தை முன்னிறுத்தி தாலி கட்டி என் வீட்டுக்கு மருமகளா வந்தவடா.. இவ உன் பொண்டாட்டி இல்லாம வேற எவ உன் பொண்டாட்டியா ஆக முடியும்?” என்று பேச்சு மகன் இடம் இருந்தாலும் கண்களால் எரித்தார் அனுப்ரியாவை.

 

அனுவை காலையில் அவர் பார்த்த பார்வைக்கும் இப்பொழுது அவர் பார்க்கும் பார்வைக்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்!!

 

மனிதரின் மனதை சற்று நேரத்தில் மாற்றி விடுகிறது இந்த சூழ்நிலை காரணங்கள்.. மனிதன் மாறுவதற்கு காரணம் அவனது மனமா இல்லை சூழ்நிலைகளா??

 

சசிகலாவை பார்த்தவன் “இதில் நீங்கள் தலையிடக்கூடாது ம்மா..” என்றான்.

 

“நான் ஏன் தலை கூட கூடாது? பெத்த மகனே தப்பு செய்யும் போது என் மருமகளுக்கு சப்போட்டா நான் இருக்கிறதுல என்ன தப்பு?” என்று விவாதித்தார்.

 

“தப்பு செய்யும்போது தண்டிக்காம கண்டிக்காம விட்டுட்டு இப்போ வந்து கண்டிக்கிறீங்களா?” என்று விரக்தியாய்ஸசிரித்தவன் வைதேகி அழைத்து “பார்த்துக்கோங்க சிஸ்டர்!” என்று அனுவை அவரிடம் ஒப்படைத்தவன், அவளை விட்டு நீங்கி அப்சரா முன் தன் உயரத்துக்கு நின்றவன், இரு கைகளையும் மார்க்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

 

“சொல்லுங்க மிஸ் அப்சரா..!” என்று அழைக்க.. அவள் திடுக்கிட்டு அவனைப் பார்க்க “என்ன மிஸ் என்று கூப்பிடுகிறேனேனு பார்க்கிறாங்களா? நீங்க மிர்ஸஸ் எ தகுதி இழந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. நீங்களும் விருப்பப்பட்டு தானே கையெழுத்து போட்டீங்க.. இப்ப என்ன திடீர்னு வந்த பிரச்சனை பண்றீங்க? அதுவும் எங்க அம்மா கூட கூட்டணி சேர்ந்துகிட்டு” என்று அவளை பன்மையில் விளித்து தள்ளியே நிறுத்தி இருந்தான் துருவ்..

 

“பாருங்க அத்த.. என்ன எல்லாம் பேசுறாரு?” என்று முறையிட்டவள், “நானா டைவர்ஸ் கேட்டேன்? இவரா கேட்டாரு.. இவரா தானே கொடுத்தார்! இவர் தானே என்னை அனுப்பி வச்சாரு.. இப்ப என்னை குறை சொல்றாரு” என்று அவள் நீலி கண்ணீர் வடிக்க..

 

“நீ அழுகாதாம்மா.. என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் மருமக! என் பையன் கூட படுத்தவெல்லாம் எனக்கு மருமகள ஆக முடியாது!” என்று இவர்களை தப்பான அர்த்தத்திலேயே பார்த்தார் சசிகலா.

 

அவரின் அந்த வார்த்தைகள் தீயாய் தகித்தது அனுவிற்கு. கண்களை மூடி கண்ணீர் உகுக்க.. அந்த கண்ணீர் கூட வெண்ணீராய் வழிந்தது அவள் கன்னங்களில்…

 

அம்மாவின் வார்த்தைகளில் கண்கள் எல்லாம் கோபத்தில் சிவக்க.. நரம்புகள் முறுக்கிக் கொண்டு ரௌத்திரமாய் பொங்கியவன், பின் தன்னை அடக்கிக் கொண்டவன் நிதானமாக அன்னையைப் பார்த்தான்.

 

“வாவ்.. வாட்.. அ… பர்ஃபாமென்ஸ்!! எல்லார் வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை நடக்கும்.. இங்கே என்னடா ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு சீரியல் ஓட்டுறீங்க?” என்று அவன் வியப்பது போல பேசினாலும் அதில் நக்கல் தொணியே தெறித்தது.

 

“துருவ்..!” கத்தியவர், “எந்த அம்மாவும் புள்ள சந்தோஷமா வாழனும் தான் ஆசைப்படுவா.. இப்படி கெட்டு சீரழிஞ்சு போகணும்னு ஆசைப்பட மாட்டா.. நானும் அது தான் ஆசை படுறேன். நீயும் என் மருமகளும் சந்தோஷமா வாழனும் தான் ஆசைப்படுறேன்” என்றார் தாடாகை போல ஆவேசமாக…

 

கைத்தட்டி சிரித்தவன் “நீங்க ஒரு அக்மார்க் இந்திய மம்மினு ப்ரூவ் பண்ணிட்டீங்க.. ஆனா நிக்கிற இடம் தான் தப்பு!! உங்களுக்கு விதித்தது இந்த ஜென்மத்துல இவதான் உங்க மருமகள்” என்று அனு அருகில் போய் நின்றான்.

 

“அப்புறம் பேர குழந்தைகள்.. இவ வயிற்றில் இருக்குது பாத்திங்களா இந்த குழந்தைகள் தான் உங்க பேர புள்ளைங்க” என்றதும் அவரோ முகம் சுழித்து அனுப்ரியாவை வெறுப்போடு பார்த்தார்.

 

அவரின் பார்வை வீச்சு தாங்க முடியாமல் மனம் பதைப்பதைக்க மெல்ல மெல்ல அவளுக்கு பிபி ஏறியதோடு அடுத்து ஒரு வலி சுருக்கென்று வயிற்றில்.. அதை பல்லை கடித்துக்கொண்டு தாங்கி நின்றவள், அந்த வலியை தன் கைகளை கோர்த்து இருந்த துருவிற்கு அழுத்தத்தினால் கடத்தினாள்.

 

அவள் கை அழுத்தத்தில் சட்டென்று திரும்பி பார்த்தவன் அவள் வலியை அடக்கி உதட்டை கடித்து நிற்பதை பார்த்து அதிர்ந்தான்.

 

அவளின் உதட்டை கடித்தவே அவளின் வலியை அவனுக்கு உணர்த்த “சிஸ்டர் பாருங்க.. வலிக்கு போல” என்று பதறினார்

 

“இன்னும் நாள் இருக்கே சார்.. ஒரு வேளை ஃபால்ஸ் பெயினா கூட இருக்கலாம் சார்” என்றாள் வைதேகி.

 

“அவள செக் பண்ணுங்க முதல்ல” என்றான். மெல்ல அழைத்து சோஃபாவில் அமர வைத்து எங்கு எங்கு வலி இருக்கு என்று கேட்க அவள் சொல்வதை கவனத்துடன் குறித்துக் கொண்டிருந்தாள் வைதேகி. அதேசமயம் மகன் சொல்லிய இந்த ஜென்மத்தில் இதுதான் பேரக்குழந்தைகள் என்பதில் மெல்ல அனுவை எட்டிப் பார்த்தார் சசிகலா.

 

சசிகலாவின் பார்வை அனுவை ஒரு பரிதாபத்தோடு பார்த்தை கொண்டாள் அப்சரா. அது எங்கே பாவமாக மாறி அனுதாபமாக மெருகேறி சொந்தமாக மாறிவிடப் போகிறதோ என்று பயந்த அப்சரா.. 

 

“பார்த்தீங்களா அத்தை.. யாரோ ஒருத்தி பொறக்குற குழந்தையை அதுதான் உங்க குடும்பத்து வாரிசுனு சொல்றாரு..” என்று மீண்டும் நேருக்கு நீலிக் கண்ணீர் வடித்ததோடு மட்டுமல்லாமல் அவர் தோளில் முகம் சாய்ந்து கதறினாள்.

 

சசிகலாவும் மருமகளுக்கு ஆறுதல் அளித்தார். “எப்படியாவது அவன் கூட ஓட்டிட்டு இருக்குற அந்த பொண்ண விரட்டி விட்டுட்டு… உன்னை நான் அங்க உட்கார வைக்கிறேன் அப்சரா.. அழுகாதே!” என்று அழுகும் மருமகளுக்கு அவன் ஆறுதல் அளிக்க.. 

 

இந்த நாடகத்தை கண்டு கொள்ளவே இல்லை துருவ். அவன் கவனமும் அக்கறையும் அனைத்துமே அனுவின் மேலே இருந்தது. அவளுக்கு அடுத்தது முகம் வியர்த்து வழிய “சார் இவங்களுக்கு பிபி சூட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். நம்ம ஹாஸ்பிடல் போறது பெட்டர் சார்” என்றாள் வைதேகி.

 

“ஆனா.. இது லேபர் பெயின் தானா?” என்று அவன் பதட்டத்தோடு கேட்க..

 

“கொஞ்சம் ஃபால்ஸ் பெயின் போல மாதிரி தெரியுது. ஆனா இன்னொரு டைம் வந்தா நம்ம உறுதிப்படுத்தலாம் சார்! இன்னும் எனக்கு யூட்ரஸ் மவுத் விரிஞ்சுடுச்சா என்னன்னு தெரியல.. அதை இங்க பார்க்க முடியாது சார்.அதுக்கு ஹாஸ்பிடல் தான் சார் போக முடியும்” என்றவள், ‘இங்கே சரி வராது!’ என்று கண்களாலேயே அவர்களை காட்டினாள் வைதேகி.

 

அவனுக்கு நிலைமை புரிய “நான் கார எடுக்க சொல்றேன்” என்றவன் சுகனை அழைத்தபடி அவன் வெளியே வர.. பாதையில் நின்றிருந்த இருவரையும் ஒரு தள்ளாக தள்ளிவிட்டு இவன் சுகன் என்று அலறலோடு வெளியே வந்தான்.

 

இவ்வளவு அழுது கண்ணீர் வடித்தும் தன்னை திரும்பி கூட பார்க்காமல் வயிற்று வலி என்றவுடன் அவளுக்கு சேவகம் செய்ய போய்விட்டானே என்று அப்சராவுக்கு மனது வலித்தது

இவனோடு 5 வருடங்கள் வாழ்ந்த என் மீது இவனுக்கு இந்த அளவு நேசம் வேண்டாம்.. ஒரு பாசம் கூட இல்லையா? என்று கோபம் பெருக்கெடுக்க.. வெகு வேகமாய் அனு முன்னாடி வந்து நின்றாள் சூர்ப்பனகையாய்..!!

 

“மேடம்.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நல்ல மூச்சு உள்ளேயே இழுத்து வெளிய விடுங்க.. இப்படி நீங்க டென்ஷன் ஆகி பிபி ஏத்துனீங்கன்னா ரொம்ப கஷ்டம் வயிற்றில் உள்ள பேபிஸ் நம்ம பத்திரமாக வெளியே கொண்டு வரணும்.. ப்ளீஸ் கோ ஆப்ரேட் மேனடம்.. ரிலாக்ஸ் ஆகுங்க..” என்று வைதேகி கூறிக் கொண்டிருக்க தன் முன்னால் வந்த நின்று அப்சராவை மூச்சு உள்ளே வெளியே இழுத்து விட்டபடி நிமிர்ந்து பார்த்தாள் அனு.

 

இதே பழைய அணுவாக இருந்திருந்தால் இந்நேரம் தாரை தப்பட்டை கிழிய கிழிய அப்சரா செய்துவிட்டு போன செயலுக்கு அவளை கிழித்து நார் நாராக போட்டிருப்பாள். 

 

ஆனால் இப்பொழுது துருவ் மீது காதல் கொண்ட உள்ளம் அவன் முன்னாள் மனைவியை மீது பச்சதாபம் கொண்டது. கூடவே மனதில் குற்ற உணர்வும் தோன்றியது, இது அவளது இடம்பெற்று!!

அதனால்தான் இந்த அமைதி எல்லாம். கூடவே அடுத்தடுத்து வரும் வலிகளும் அவளுக்கு அவள் நிலையை எடுத்துரைக்க.. இந்நேரத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் போடாமல் இருக்க முயன்றாள்.

 

“வாடகை தாயா என் பிள்ளைகளை பெற்று கொடுக்க வந்துட்டு.. இப்போ உரிமைக்காரியா என் புருஷனையே பங்கு போட்டு கிட்ட இல்ல” என்று அனல் தெறிக்க பேசினாள் அப்ஸரா அனுவின் முகத்திலோ உரத்தி சிரிப்பு.

 

அவளைப் பார்த்த பார்வையில் ‘புள்ள புருஷன் எதுவுமே வேணான்னு.. என்னையும் அம்போனு நடுரோட்டில் விட்டுட்டு கனடா பிறந்தவ தானே நீ.. இப்ப என்ன உனக்கு புருஷன் புள்ளையெல்லாம்?’ என்று கேள்வி தொக்கி நிற்க.. அதை கண்டு அப்சராவுக்கு தலை குனிவாக இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் தன் ஹேண்ட் பேக்கில இருந்து கற்றை பணத்தை எடுத்து அனுவின் முகத்தில் விசிறி எறிந்தாள்.

 

“இதுக்காக தானே.. இந்த பணத்துக்காக தானே இங்கே வந்து கிடக்க.. இந்த பணத்தை பொறுக்கிட்டு போயிரு! இனிமே உனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது” என்று அவள் சீற்றத்தில் கத்த…

 

பணத்தால் முகத்தில் அடி வாங்கிய அனுவுக்கு அந்த நிமிடம் அந்த பணம் வெறுத்துப் போனது. இதே பணத்துக்காக ஒரு தொழலதிபியாக முன்னேற வேண்டும் என்று தான் இங்கே வந்தாளே ஒழிய.. பணத்துக்காக உடம்பை விற்கும் பெண் அல்லவே!! அப்சரா கூறும் அர்த்தத்தை கேட்டு மனம் நொறுங்கினாலும் மெல்ல எழுந்து அவளை தீர்ப்பார்வை பார்த்தாள் அனு. 

 

அப்சராவை பேச தொடங்கும் முன்

“என் பொண்டாட்டிக்கு அவள் தேவைக்கு அதிகமாவே பணம் இருக்கு. உங்க பணம் தேவைப்படாது அப்சரா!” என்று உறுமும் குரலில் திட்டிக்கிட்டு பார்க்க அங்கே நின்று இருந்தான துருவ்.

 

 

“கைல கிடைச்ச கல்லை கூலாங் கல்லா நினைச்சு தூக்கி போட்டுட்டு நீங்க போயிட்டீங்க.. அந்தக் கல்லுக்குள்ள இருந்த வைரத்தை பாசம் நேசம் அன்பால பட்டத் தீட்டியது அவ.. அவள பேசுவியா நீ?” என்று கர்ஜித்தான் துருவ்.

 

அனு அருகில் வந்து நின்றவன் சசிகலாவை பார்த்து, “நீங்க நினைக்கிற மாதிரி இவ கூட நான் படுத்து இந்த புள்ளகள் உண்டாகல..” என்றதும் சசிகலா திடுக்கிட்டார்.

 

“உங்க ஆச முன்னாள் மருமக புள்ள பெத்துக்க விருப்பம் இல்லாமல் வாடகை தாய் மூலமாக பெத்துக்கணும்னு என்கிட்ட சண்டை போட்டு.. எனக்கு விருப்பம் இல்லாமல் வற்புறுத்தி கையெழுத்து வாங்கி.. என்னுடைய உயிர் அணுவையும் வாங்கி தான் இவ வயித்துல இருக்குற இந்த குழந்தைங்க உருவாச்சு.. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் டாக்டர் தாரதி கிட்ட கேட்டுக்கோங்க… அதிலும் இந்த ப்ராசஸ் விஷயமா என்கிட்ட இவ பேசவே இல்ல. திடீர்னு நான் டைவர்ஸ் கொடுத்ததும் இந்த பொண்ணை நட்டாத்தில் விட்டுட்டு இவ கனடா பறந்துட்டா.. இப்படி ஒரு விஷயம் நடந்து வயித்துல எங்க குழந்தைகள் இருக்குதுன்னு அதுக்கப்புறம் எனக்கு தெரிய வந்திச்சு.. அதுல இருந்து என் கூட வச்சு நான் பார்த்துக்க ஆரம்பிச்சேன்…” என்று அவன் பேச..

 

“பாத்துக்கிட்டவன் அதோட விட்டு இருக்கனும் தானே.. இப்படி படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கீங்க.. படுக்கை பகிராம தான் பொண்டாட்டியா ஆனாளா இவ?” என்று வன்மத்தை கக்கினாள் அப்சரா.


   
Mini Rodel reacted
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

இது அநியாயம் ரைட்டர்!

இது எல்லாம் பத்தாது ...இன்னொரு ud தாங்க....


   
ReplyQuote
(@srd-rathi)
Member
Joined: 6 months ago
Messages: 11
 

Apsara romba yokiyamathri pesura


   
ReplyQuote
(@mini-rodel)
Member
Joined: 6 months ago
Messages: 2
 

Super Jiyamma. What a fantastic plot. காலத்துக்கு ஏற்ற மாதிரி எழுத உனக்கு நிகர் நீயே தான். ஊரிலிருந்து வந்து ஒரே மூச்சா படிச்சு முடிச்சு விட்டேன். சீக்கிரம் அடுத்த பகுதி வேணும். ♥️♥️♥️👏🏻👏🏻👏🏻


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top