Share:
Notifications
Clear all

மோகங்களில் 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

 

மோகங்களில்… 21

 

திருமலை மதியம் வீட்டுக்கு உணவுக்கு வருகையில் சசிகலா சோஃபாவில் அமர்ந்திருப்பதை கண்டார்.

 

‘கோயில வளைகாப்பு பங்க்ஷன் சொன்னா.. இப்படி உட்காரந்திருக்கா’ என்று யோசித்தப்படி மனைவியின் அருகில் அமர்ந்தார்.

 

“என்ன சசி ஃபங்ஷன் எல்லாம் நல்லபடியா நடந்துச்சா?”

 

“ம்ம்ம்” என்றார் சசிகலா.

 

“ஆமா நீ மதியம் சாப்பாட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னியே.. அங்க கோயில் அந்த பொண்ணுங்களோட சேர்ந்து மதியம் சாப்பிட்டு சாயந்திரம் போல தான் வருவேன்னு சொன்ன.. இப்ப என்ன இங்க உட்கார்ந்து இருக்க” என்று தளர்வாக சோபாவில் சாய்ந்தமர்ந்து மனைவியை பார்க்க…

 

மனைவியின் முகத்தில் தெளிவில்லாமல் இருந்தது. ‘சரி அந்த பெண்களை பார்த்ததும் இவளுக்கும் தன் மகனும் இதே போல் குடும்பமாக வாழ வேண்டும் என்று எண்ணம் வந்திருக்கும். அப்சராவுக்கு போன் செய்திருப்பாள் அவள் வழக்கம் போல எடுத்திருக்க மாட்டாள். அதுதான் இப்படி இருக்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டார்.

 

“விடு சசி.. நம்மளால என்ன முடிஞ்சதோ நாம செஞ்சிட்டோம்! இனி ஆண்டவன் கிருபை! அவன் அருள் பார்வை நம் மீது பட்டால் கண்டிப்பாக நம் பிள்ளையும் இதே போல குடும்பம் பிள்ளைகளோடு இருப்பான்” என்றார் மனைவியை தேற்றும் விதமாக..

 

“அதெல்லாம் அவருடைய அருள் பார்வையும் கிருபையும் உடனே கிட்டிடுச்சு”’என்றார் ஒரு மாதிரியான குரலில்…

 

‘ஏன் இப்படி பேசுறா? ஒருவேளை நாம வரலை என்பதற்காக நம்ம மேல கோவமா இருக்காளா? ஏற்கனவே நான் சொல்லிட்டேனே இன்னைக்கு இம்போர்ட்டண்ட் ஆடிட்டர் மீட்டிங் இருக்கு. அதனால் வர முடியாதுனு.. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என் மேல கோபப்படுற ஆள் இல்லையே இவ” என்று யோசித்தபடி மனைவியை பார்த்தார்.

 

“என்ன சசி.. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க? என்ன மனசுல வச்சுட்டு இருக்க?” என்ன அருள் பார்வை உடனே கிடைச்சிடுங்குற.. எனக்கு ஒன்னும் புரியல மா” என்று மனைவியை தன் பக்கம் திருப்ப கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தவர் ஒன்றும் கூறாமல் “நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்று அறைக்குள் சென்று விட்டார்.

 

“அப்ப சரி.. அழுகை நம்மளால இல்ல அவ பெத்த புள்ளையால தான். அதுக்கு நாம என்ன பண்றது.. இந்த காலத்துல ஒரு வயசுக்கு அப்புறம் நம்ம பேசி எங்க கேக்குறாங்க.. எல்லாம் அவங்க இஷ்டம் தான்” என்று சத்தமாக புலம்பியவர் வீட்டு வேலையாளிடம் மதிய உணவு எடுத்து வைக்க சொல்லி சாப்பிட அமர்ந்தார்.

 

கிஞ்சித்துக்கு மனைவி சாப்பிடாமல் இருப்பாளா இல்லையா என்றெல்லாம் தோன்றவில்லை அதே நேரம் இவரும் 50 வயதுக்கு மேல் ஆகிறதே மாத்திரை போட வேண்டுமே என்று உண்டார். வேலையாள்தான் தயக்கமாக “அம்மா இன்னும் சாப்பிடலைங்க” என்றார்.

 

“சரி ஒரு தட்டு மட்டும் எடுத்துட்டு வா” என்றவர் தான் சாப்பிட்டு விட்டு மனைவிக்கும் எடுத்துக் கொண்டு அவரை எழுப்ப.. உறங்கவில்லை என்று தெரிந்தது!

 

“சாப்பிட போறியா இல்லையா நீனு? உன்னை வருத்திட்டு இருந்தேனா எல்லாம் சரியாயிடுமா?” என்று ஒரு அதட்டில் போட்டதும், எழுந்து அமர்ந்தவரை சாப்பிடு என்று மென்மையாக கூறி உணவினை கொடுக்க.. 

 

கணவனின் இந்த அன்பில் கண்கள் கரைத்தது. “இது போல் ஒரு வாழ்வை தானே மகனும் வாழ வேண்டும் என்று நினைத்தேன்! ஆனால் இப்படி.. ஏன்..?” என்று அவருக்கு தலை சுற்ற அமைதியாக உண்டவர் கணவன் அருகில் படுத்து விட்டார்.

 

ஆனால் தூக்கம் கண்களை எட்டவில்லை. ‘இந்த பெண் உண்மையிலேயே துருவின் ப்ரண்டின் மனைவியாக இருந்தால் அந்தப் பையன் இவளை அழைக்க வந்திருப்பானே? ஆனால் வரவில்லையே!! இவனாக தானே அழைத்து விடுவதாக சொன்னான். நாமும் இவளை சென்று பார்க்க வேண்டும் என்று கூறும் போதெல்லாம்.. நீங்கள் வரவேண்டாம். உங்களுக்கு எதுக்கு அலைச்சல் நானே வருகிறேன் என்று அல்லவா சொன்னாள்!! அப்போ உண்மையில் என்ன நடக்கிறது? இவளுக்காக தான் அப்சராவிற்கு அவன் டிவோர்ஸ் கொடுத்தானா? இவளுக்கு 9 மாதம்?? டிவைஸ் கொடுத்தே 4 மாதம் தான் இருக்கும். அப்படி என்றால் அப்சரா இருக்கும்போது இவளோடு தொடர்பா.. ஆண்டவா??? தவமாய் தவமிருந்து ஒத்த பிள்ளை பெற்று ஓவியமாய் அவனை வளர்த்தேனே.. இப்படி சீரழியவா? பெயரை கெடுத்துக்கவா? ஒழுக்கமற்று போகவா?” என்று கதறினார் உள்ளுக்குள்.

 

அவரால் அனுவையும் துருவையும் நல்லபடியாக யோசிக்க முடியாமல் தள்ளாடியவர், அதற்கு மேல் தாங்காமல் எழுந்து அமர்ந்துவிட்டார்.

 

அப்சராவுக்கு ஃபோன் செய்து கொண்டே அறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!!

 

காரில் வரும்போது ஒன்றும் பேசவே இல்லை துருவ் அமைதியாக வந்தான். அதுவும் இவள் புறம் திரும்பவே இல்லை. அதிலேயே செம கோபமாக இருக்கிறான் என்று இவள் திருப்பி திருப்பி அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க.. அவனிடமும் பேரமைதி!!

 

வீட்டுக்குள் நுழைந்ததும் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்

 இவளும் போக முனைய தடுத்த வைதேகி “சாமி கும்பிட்டு போங்க மேடம்” என்று கண்ணைக் காட்ட பூஜை அறையில் நின்று கண்களை மூடி சிறிது நேரம் தியானித்து விட்டு அவசரமாக துருவ்வின் பின்னால் ஓடினாள் அனு.

 

அங்கே படுக்கையில் சாய்ந்த நெற்றியில் புஜத்தை வைத்து அமர்ந்திருந்தான் துருவ்.

 

“சார்..” என்று மெதுவாக அழைத்துக் கொண்டே உள்ளே செல்ல.. அவன் அவளை திரும்பியே பார்க்கவில்லை..

 

மெதுவாக அவன் மடி மீது அனு அமர, அப்பொழுதும் அவன் திரும்பினான் இல்லை..

 

மெல்ல அவனது கற்றை மீசையை இரு பக்கமும் கைகளால் பிடித்து ஆட்ட.. அப்பொழுதும் அசைந்து கொடுக்காமல் அமர்ந்திருந்தாலன் துருவ் வல்லப்!

 

“டேய் வல்லபா…” என்று‌ அவள் சத்தமாக கூப்பிட..

 

“அடிங்க.. டேவா சொல்ற..??” என்று கண்ணை திறந்தவன் அவள் காதை பிடித்து திருகினான்.

 

“அச்சோ.. வலிக்குதுங்க.. நிஜமாவே வலிக்குது வல்லபா.. ப்ளீஸ்..” என்று அவள் கண்களை சுருக்கி கெஞ்சியதும், அதற்கு மேல் அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல் காதை விட்டவன், அவளை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள.. இவளோ அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்ப முயல.. அவன் திரும்பினான் இல்லை!! பிடிவாதமாய் இருந்தான்!!

 

“ப்ளீஸ்… ப்ளீஸ் வல்லபா.. என்ன பாருங்களேன்! தப்புதான் உங்ககிட்ட சொல்லாம செஞ்சது தப்பு தான்! ஆனா இன்டக்ஷனா இதை நான் செய்யல.. ஒரு எதிர்பாராமல் நடந்தது” என்றதும் அவளை திரும்பி முறைத்தான் அவன்.

 

“இங்க பார் வாயை இப்ப நான் திறந்தா கண்டிப்பா உன்ன கஷ்டப்படுத்தற மாதிரி ஏதாவது பேசுவேன்! அதனாலதான் அமைதியா என் கோபத்தை காட்ட முடியாம இருக்கேன். நீயா வான்டெட் வந்து மாட்டிக்காத டி! தள்ளிப்போ..!” என்று அவளை எழுப்பி விட முனைய அவளோ இன்னும் வாகாக அவன் மடியில் அமர்ந்து கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்துக்கொண்டு மூக்கோடு மூக்கு உரசி கிளுக்கி சிரித்தாள்.

 

அவன் முதன் முதல் வாங்கிக் கொடுத்த புடவை.. எப்போதோ ஒரு தடவை கட்டிவிட்டு கசகசனு இருக்கு என்று அவிழ்த்து விட்டாள்.

 

இன்று அதே புடவை கட்டி தலைவாரி பூச்சூடி.. கன்னத்தில் சந்தனம் மணக்க.. நெற்றியில் குங்குமம் மினுக்க.. கைகளில் வளையல்கள் குலுங்க.. அம்சமாய் தேவதையாய் அருகே அமர்ந்திருந்தவளின் அழகு அவனை வசீகரித்தது.

 

ஆனாலும் என்னிடம் சொல்லாமல் எவ்வாறு அவள் இதற்கு ஒத்துக் கொண்டாள் என்று‌ கோபம் பெருகியது. அதே நேரம் அவளை கஷ்டப்படுத்தவும் முடியாமல் சோர்ந்து தளர்ந்த அமர்ந்தவன், அவளின் இரு கன்னச்களையும் பிடித்து ஆட்டி.. “ஏன் டி என்னை இப்படி கொல்ற!! உன் மேல கோபப்பட்டு திட்ட கூட என்னால முடியல டி! படுத்துற டி என்னை!” என்று சோர்ந்தவனுக்கு இதழ் அழுதம் கொடுத்து உயிர்ப்பித்தாள்!!

 

“பொல்லா ராட்சசிடி நீ!” என்று அவள் இதழ்களை விலக்கியவன் “என்கிட்ட சொன்னா இதைவிட பிரம்மாண்டமான செஞ்சிருக்க மாட்டேனா? அப்படி என்ன என்கிட்ட சொல்லாம நீயே போய் செஞ்சுகிட்ட?” என்று அவள் கன்னத்தை தன் தாடியால் குத்தி தண்டனை கொடுத்தவாறு கேட்டான்.

 

“நான் தான் சொன்னேன்ல எதேச்சையா நடந்ததுனு.. இல்லனா ஒரு டிவிஸ்டே இருக்கு தெரியுமா? சொல்றத முழுசா கேளுங்க” என்றவள், சசிகலாவின் பெயரை தவிர்த்து மீதி அனைத்தையும் கூறி முடித்தாள்.

 

“சோ.. அந்த அம்மா சொன்னதும் நீ ஒத்துக்கிட்டியாக்கும்! இப்படி யாராவது கூப்பிட்டா நீ ஒத்துக்குவியா? அறிவில்லை உனக்கு?” என்று அதற்கும் கடிந்தான் அவன்.

 

“யாரோ கூப்பிட்டா.. கண்டிப்பா போயிருக்க மாட்டேன்! ஆனா கூப்பிட்டது என் மாமியார் ஆச்சே!!” என்றதும்

 

“என்னடி சொல்ற??” என்று அவன் திடுக்கிட..

 

“ஆமா.. உங்க அம்மா தான் வேண்டிக்கிட்டாங்களாம்! அதுவும் நீங்க புள்ள குட்டியோடு சந்தோஷமா இருக்கணும் வேண்டிக்கிட்டாங்களாம். இதுல நானே கலந்து இல்லை என்றால் எப்படிங்க? நீங்க தனியா இந்த மாதிரி விசேஷம் வைத்தால் உங்க அம்மாவ கூட்டிட்டு வந்து எனக்கு வளையல் போட முடியுமா? முடியாதில்ல!! இப்ப பாருங்க வளைகாப்பு வளலயல் கூட சேர்த்து அவங்க கைல போட்டிருந்த வளையளையும் கழட்டி எனக்கு போட்டு விட்டாங்க” என்று இரு கைகளையும் அவனுக்கு முன்னால் குலுக்கி காட்டி சந்தோஷமாக ஆர்ப்பரித்தாள் அனு.

 

அவளின் சந்தோஷம் அவனையும் தொற்றிக்கொள்ள “வாயாடி வாயாடி!! உன் மாமியாருக்கு விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் இருக்குடி.. சேட்ட.. சேட்ட..” என்று அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

 

“அங்கதான் கடவுள நம்மளை காப்பாத்திட்டாரு குமாரு.. நீங்க வரத்து கொஞ்ச நேரம் முன்னாடி ஆலம் எடுக்கணும்னு சொன்னாங்க அதுக்குள்ள ஆலம் எடுத்தவங்களுக்கு எல்லாம் சீர் கொடுக்கணும்னு சொல்லிட்டு தர்மகத்தா ஆன்ட்டிய கூட்டிட்டு போய்ட்டாரு.. இல்லேன்னா ஆலம் எடுக்க கண்டிப்பா பக்கத்துல நின்னு இருப்பாங்க.. உங்களை பார்த்து அங்கேயே அப்படியே ஷாக் ஆகிய இருப்பாங்க..!” 

 

“ஆஹான்…”

 

“இல்லையா பின்ன.. என்னடா கடவுளிடம் இப்பதான் நம்ம கோரிக்கை வச்சோம்.. அதுக்குள்ள குடுத்துட்டாரு” என்றவள் தன் வயிற்றை சுட்டி காட்டி சிரிக்க… வயிற்றில் சின்னதாய் ஒரு மின்னல் அடித்து சென்றது.

 

அதில் அவள் முகம் கசிய “சொல்லு.. என்ன ஆச்சு?” என்று அவன் பதறி கேட்க..

 

“இல்ல வயித்த புடிச்ச மாதிரி இழுத்த மாதிரி இருந்தது” என்றாள்‌ யோசனையாக..

 

“இதுக்கு தான் இப்படி சிரிக்க கூடாதுன்னு சொல்றது” என்றான்.

 

“நான் எப்படி இருக்கேன்?” என்றவள் புடவையை ஒரு சுழற்றி சுழற்றி கேட்க..

 

“அழகா இருக்கே டா” என்றான்.

 

“அப்போ வாங்க.. ஒரு செல்பி எடுத்துக்கலாம்” என்றாள் ஆசையாக..

 

“சரி வா..” என்று அவளை தனியாக நிற்க வைத்து அந்த கோலத்தில் இரண்டு மூன்று போட்டோக்கள் எடுத்தவன், தன்னோடு சேர்த்து வைத்து செல்ஃபி எடுக்க.. அவனோ‌ அவர்களின் பிம்பங்களை ஃபோனில் பார்க்க.. இவளோ போட்டோ எடுக்கும் முன் அவன் புறம் திரும்பி கன்னத்தில் முத்தம் வைக்க.. அது அழகாய் வடிவாய் சேர்ந்தது புகைப்படமாய் அவனது மொபைலில்..

 

“செம டி!” என்று போட்டோவை பார்த்தவன் “இப்ப நான்” என்று அதேபோல அவனும் அவளுக்கு முத்தம் கொடுத்து என்று இருவரும் மாறி மாறி போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருக்க..

 

“போதும்.. போதும்..! எனக்கு பசிக்குது! ஒருத்தன் உதைக்க ஆரம்பிச்சிட்டான். சாப்பிடணும் பசிக்குது.. இன்னைக்கு அங்க பலவகை சோறு தெரியுமா? உங்களால தான் ஒரு வாய் கூட சாப்பிட முடியல.. வளைகாப்பு முடிஞ்ச பொண்ணுக்கு கலவை சாதம் கொடுப்பாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன்..” என்றாள் ஆசையாக..

 

“எனக்கு தெரியாதே.. இரு குக்கை ஏற்பாடு செய்ய சொல்றேன்” என்று அவன் வெளியில் வர அதற்குள் வைதேகி சமையல் செய்பவரிடம் அவற்றை செய்ய சொல்லி இருந்தாள். கூடவே அவளும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தவள், “மேடம் இன்னும் ஒரு பத்து நிமிஷம்.. நீங்க அதுக்குள்ள டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துருங்க.. உங்களுக்கு சாப்பாடு ரெடியாக இருக்கும்” என்றாள்.

 

“தேங்க்ஸ் அக்கா” என்று அனு வைதேகியை கிள்ளி முத்தம் வைக்க, அவளோ வெட்கத்தில் சிரித்தாள்.

 

“ட்ரஸ் மாத்த உதவி செய்யுங்க வல்லவா..” என்று அவள் நிற்க..

 

“உதவி தானே?? செய்ய தானே நான் இருக்கேன்! ஆனா அது மட்டுமே என்னால் செய்ய முடியாது..” என்றவன் அவள் புடவையை கலைய, அவளது அங்கங்களை பார்வையாலும் விரல்களாலும் ஏன் இதழ்களாலும் ஸ்பரிசித்து இம்சை கொடுத்தான்.

 

அவனின் கண்கள் தாபத்துடன் அவள் அழகை ரசித்தன. அவள் கன்னங்களின் கனிவும்.. மூக்கின் நுனி வளைவும்.. முகத்தின் சிவப்பும்.. ஒட்டியிருக்கும் உதடுகளின் ஈரமும்.. நரம்புகளுடன் சிலிர்த்திருக்கும் வெண் கழுத்தும்.. தாய்மையில் செழுத்திருக்கும் கனிகளும்.. அவனின் விழிகளுக்குள் பலவித கற்பனையை நிறைத்தன..!! 

 

மெல்ல முகம் உயர்த்தி அவன் கண்களைச் சந்தித்து, பின் வெட்கிச் சரிந்து நிலம் நோக்கின அனுவின் கண்கள். அவள் இதயத்தின் துடிப்பு மட்டுமல்ல இமைகளின் துடிப்பு கூட அத்துணை துல்லியமாக கேட்டது. அங்கே பேர் அமைதி பெரும் இரைச்சலாய்..!!

 

முதன் முறையாக அவன் முன் இவ்வாறு நின்றிருக்க அதுவே அவளுக்கு உள்ளுக்குள் ஒருவித உணர்ச்சி தூண்டிலை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். அதன் விளைவால் அவளுக்குள் எழுந்திருக்கும் மெல்லிய பதட்டத்தில் அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் வியர்த்து வழிந்தது.  

 

மென் முடிகள் கழுத்தில் சிலிர்ந்தது!! அவள் மனம் நிலையற்று தவித்தது!!

கண்கள் அலைப் பாய்ந்தது!!

உடலில் சிறு நடுக்கம் எழுந்தது!!

மென்மைகள் விம்மித் தணிந்தது!! 

 

அவன் பார்வை அவளின் பக்கவாட்டு பொற் குவியல்களின் எழுச்சித் தோற்றத்தை சற்று உரிமையுடன் விழுங்கின. அதனால் வெட்கம் கொண்டவள் கைகளால் பெருக்கல் குறி இட்டு கொள்ள..

 

“மறைச்சா? அதுவெல்லாம் என்‌ ப்ராப்பர்ட்டி டி!” என்றான் அவளை நெருங்கி.. அவனிடமிருந்து எதிர் பாராத வார்த்தை இது. ஆனால் உரிமையாய் வந்தது!!

 

“பூமர் ஆங்கிளா இது? இப்படி கூட பேசுவானா?” பக்கவாட்டில் தெரியும் அவன் முகம் பார்த்து நாணினாள் கோதை!!

 

“நெஜமா டி!” மோக போதை ஒலிக்கும் சரசக் குரலில் சொல்லி அவள் பின் கழுத்தை இதழால் வருடினான். ஒரு நொடியில் முன் சென்று அவளின் வெட்கிய கன்னத்தில் முத்தமிட்டான். பசக்.. என்று!!

 

அவள் சிலிர்த்து முகத்தை பின்னிழுத்தாள். கன்னங்கள் கனிந்து குழைந்தன...

அவன் கை அவள் தோளை வளைக்க.. விரல்கள் ஜாக்கெட் மூடாத தோள் பகுதியை மெல்ல வருடின..

 

“இந்த தாய்மை உன்னோட அழகை இன்னும் தூக்குது டி அனு மா..” என்றவன் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அவள் அங்கங்களை வர்ணிக்க.. ‘டிரஸ் மாத்த ஹெல்ப் பண்ண சொன்னா.. இந்த பூமர் அங்கிள் என்னென்னவெல்லாம் பண்றான்!’ என்று வெட்கித் தவித்தாள் மாது.

 

“ஹைய்யோ..” கன்னம் குழைய வெட்கினாள் “எவ்வளவு தூரம் வாட்ச் பண்ணியிருக்கீங்க..? நீங்க என்னை பாக்கறதே இல்லேனு உங்களை நல்லவனு இவ்வளவு நாளும் நான் நினைச்சிட்டு இருந்தேன். இப்ப தானே தெரியுது நீங்க சரியான‌ துட்சாதனா கண்ணாலேயே துகில் உரிச்சி இருக்கிங்கனு..” என்று அவள் முறைக்க..

 

“ம்ம்ம்.. துட்சாதனா? அப்போ அந்த வேலையை பார்க்கட்டுமா?” என்றவன் அவளை நெருங்க, அவன் பற்கள் அங்கங்கே கவ்வி அழுந்தி மெல்லிய பற் தடத்தை பதித்திருந்தன அவளது சிவந்த மேனியில்.. அவளது மென் கழுத்து.. கழுத்து வளைவு.. புஜங்கள் என்று கணக்கு வழக்கில்லாமல் முத்தமிட்டு நிமிர்ந்தான். அவள் முகத்தை இழுத்து உதட்டைக் கவ்வினான்.

 

“மேடம் சாப்பாடு ரெடி!” என்று வைதேகியின் குரல் அறைக்கு வெளியே ஒலிக்க..

 

“சரியான கரடிங்க.. என் சாப்பாட்டை சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்றாங்க” என்றவன் உணர்ச்சி குவியலில் தவிக்கும் தன்னவளை இறுக்க அணைத்து “ரிலாக்ஸ் அனுமா!!” என்று முதுகை வருடி விட..

 

அவனை பிடித்து தள்ளியவன் “உனக்கு இதுவே பொழப்பா போச்சு யா.. எப்ப பாத்தாலும் நல்ல தூண்டி விட்டுட்டு அதுக்கப்புறம் ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்னு‌ சொல்ல வேண்டியது.

போய்யா பூமர் அங்கிள்” என்று விட்டு உடைமாற்றும் அறைக்கு சென்றவள் மேட்டர்நிட்டி கவுனை அணிந்து வந்தாள்.

 

சிகை கோதி தன் உணர்வுகளை அடக்கியவன் “ரொம்ப தப்பு.. ரொம்ப ரொம்ப தப்பு டா துருவா.. டெலிவரி இப்பவோ அப்பவோனு இருக்கு.. அவளை நீ இப்படி பண்ணுவது ரொம்ப தப்பு!” என்று தனக்குத்தானே திட்டிக் கொண்டு அதன் பின்னே அவளோடு சென்று உணவு அருந்தினான்.

 

“தூக்கமா வருது பா” என்றவளை வைதேகியும் இவனும் இழுத்து பிடித்து சோஃபாவில் அமர வைத்திருந்தனர்.

 

“தூங்கக்கூடாது!” என்று எவ்வளோ சொன்னாலும்.. அவளோ கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்க.. இருவரும் மாறி மாறி அவளோடு பேசிக் கொண்டிருந்தனர்.

 

“இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்த.. சோஃபாவிலேயே நீ தூங்கிடுவ.. எழுந்திரு!” என்று அவளை எழுப்பினான்.

 

அனு எழும்போது வயிற்றில் மீண்டும் மின்னலென ஒரு வலி! 

 

“ஸ்ஸ்ஆஆஆ..!” என்று இம்முறை வலி தாங்காமல் அவள் சத்தமிட..

 

“ஏய்.. போக்கிரி உன்ன பத்தி தெரியும்டி! நடக்குறதுக்கு அலுப்புப் பட்டுகிட்டு வலிக்குதுங்கறியா? கொன்றுவேன்.. நடிக்காத! நட! அதெல்லாம் விட முடியாது” என்று அவளை நடக்க வைத்தான் துருவ்.

 

கலவை சாதத்தை இன்று கொஞ்சம் ஒரு பிடி அதிகம் சாப்பிட்டு விட்டாள் அனு. அதனால் தான் இப்படி. வைதேகி சென்று சீரகத்தை கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

 

“இத கொஞ்சம் குடிங்க மேடம்” என்று வைதேகி கொடுக்க.. அவளோ மறுக்க..

 

“சார் நீங்க குடுங்க” என்று துருவிடம் கொடுத்தாள் வைதேகி.

 

“அனுமா.. கொஞ்சமா குடிச்சிடுமா ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அப்புறம் இல்லன்னா வயிறு வலிச்சிட்டு தான் இருக்கும்” என்று அவள் பின்னேயே மெல்ல நடந்து கொண்டே இவன் கெஞ்சிக் கொண்டிருக்க.. அவளோ வலியைப் பற்றிய யோசித்துக் கொண்டிருந்தாள், இதனை குடிக்க மறுத்து..

 

மெல்ல நடந்து கொண்டிருந்தவளுக்கு ‘அடுத்து வலி வருமா? இது அந்த வலியா? இல்லை அதிகம் சாப்பிட்டதால் வந்த வலியாக இருக்குமோ?’ என்ற கவலை உள்ளுக்குள் அவளிடம்.

 

“இத குடின்னு சொல்றேன்ல” என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தி தன் தோள் வளைவிலேயே வைத்து அவனே புகட்டி விட்டான்.

 

“வாவ்.. சூப்பர்.. பொண்டாட்டிய கழட்டி விட்டுட்டு.. வாடகைக்கு புள்ள பெத்துக்க வந்தவள பொண்டாட்டியாவே நடத்திட்டு இருக்கிங்க போலவே.. சபாஷ்!! ரொம்ப அருமையா புருஷன் நீங்க!! பார்க்கவே கண்ணு ரெண்டும் பத்தல..” என்று கோபக்குரலில் இவர்கள் மூவரும் திரும்பி பார்க்க..

 

அங்கே வாசலில் நின்று இருந்தாள் அப்சரா கூடவே சசிகலா!‌


   
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

என்னாவாம் இப்ப இவளுக்கு😏😏😏😏

சசி, இந்த பிசாசை தான் நீங்க பிடிச்சி அவனுக்கு கட்டி வெச்சி இருக்கீங்க....

அச்சோ அனு வேற இப்படி இருக்காளே.....

துரு ஏதும் செய் டா....அனு பாவம் டா


   
ReplyQuote
(@srd-rathi)
Member
Joined: 6 months ago
Messages: 11
 

Apsarava......


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top